விவசாயி தின வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

விவசாயி தினம்; 

இந்தியா பசுமை மிக்க ஒரு நாடாக வளம் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் நம் நாட்டின் விவசாயமும் அதனை மேற்கொள்ளும் மக்களுமே...
60% மக்கள் இங்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனை கொண்டாடும் விதமாக வருடந்தோறும் டிசம்பர் 23 ம் தேதி அன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த நாள் நம் நாட்டின் முன்னால் பிரதமரான சரம் சிங்கின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாளில் ஊருக்கு உணவளித்து உவகை கொள்ளும் விவசாயிகளின் அருமை உணர்வோம்...விவசாயத்தை காப்போம்...


விவசாயி தின வாழ்த்து கவிதைகள்


விவசாயி தின வாழ்த்து கவிதைகள்;

விவசாயிகளின் வாழ்க்கை வெளிச்சமானால் தான் நம் வாழும் வாழ்க்கை புன்னியமாகும் இந்த பூமியிலே.ஏனென்றால் ஒரு பயிரை விதைத்து அதை அறுவடை செய்து பதப்படுத்தி பக்குவப்படுத்தி அதை விற்பனை செய்வதற்கும் அவன் படும் பாடும் சந்திக்கும் பிரச்சனைகளும் ஏராளம் எனவே அவர்களின் உழைப்புக்கான மரியாதையை நாம் கொடுத்தே ஆகவேண்டும்.




மங்காத ஒளியாய்
விவசாயிகளின் 
வாழ்க்கை வெளிச்சமாக
வாழ்த்துக்கள்




ஒரு உணவை கண்ணால் ருதித்து வாயால் மசித்து திண்ணும் மனிதர்களின் நினைவில் இதை விதைத்தவனும் தன்னை போல் வயிறு நிறைய உண்ண வேண்டும்.மனது நிறைய மகிழ்ச்சி பெறவேண்டும் என்று மனதார நினைத்தால் ஒவ்வொருவரும் உயரலாம்  
இந்த மண்ணிலே




உழுது
உழைப்பவனின் உள்ளம்
குளிர்ந்தால் தான்
உண்ணுபவனின் 
வயிறும் நிறையும்



விவசாயத்தை ஒரு பூர்விக தொழிலாகவோ பாரம்பரியமாகவோ கருதாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒரு அரசு ஊழியரை போல் மதித்து உயிர்ப்பளித்தால் விவசாயமும் வியந்து பார்க்கும் தொழிலாக மாறும்




ஒவ்வொரு விவசாயியும்
ஒரு அரசு ஊழியருக்கு
சமமானவர்...



யாரோ ஒருவரின் வயிற்றை நிரப்ப தானும் தன் குடும்பத்தாரும் உழைத்து களைத்து உணவை தந்தாலும் பட்டினி கிடக்கிறோம் என்ற எண்ணம் மட்டும் வருவதே இல்லை இந்த பாழும் விவசாயிக்கு.பட்டினி கூட ஒரு விவசாயியை தன் வேலையை செய்ய விடமால் நிறுத்தியது இல்லை.



ஊருக்கு சோறு
போட்டு
வீட்டுக்குள் பட்டினி
கிடக்கும் 
தெய்வம் விவசாயி




பஞ்சம்,பசி,பட்டினி என்று எது வந்தாலும் உழவையும் உழைப்பையும் நிறுத்தாமல் டான் விவசாயி.ஒரு வருடம் மழை பெய்யாமல் வறட்சியால் வறுமை வரும்.ஒரு வருடம் மழை பெய்து வெள்ளத்தால் வறட்சி வரும்.ஒரு வருடம் எல்லாம் இருந்தும் விளைந்த பொருளுக்கு தகுந்த விளை கிடைக்காது.இதை எல்லாவற்றையும் தாண்டி உயிர் வாழும் விவசாயமும் விவசாயிகளும் அதிசயமே.




பேஞ்சு கெடுத்தாலும்
காஞ்சு கெடுத்தாலும்
ஊருக்கு கொடுக்க
உழைத்து கொண்டே
இருப்பவன் உழவன்




ஆதி காலத்தில் ஏர் பிடித்து அழுதார்கள்;தற்போதைய நவீன இயந்திர காலத்தில் டிராக்டர் கொண்டு உதவுகிறார்கள்.எல்லாம் மாறிவிட்டது.ஆனால் மாறாமல் இருப்பது விவசாயிகளின் ஏமாற்றம் என்ற ஒன்று மட்டுமே.இங்கு ஏமாற்றுமபவன் யார் என்று தெரியாமலே ஏமாந்து போகிறார்கள்




ஏர்பிடித்து உழுத 
போதும்
இயந்திரம் கொண்டு
உழும் போதும் ஏமாற்றம் என்ற
ஒன்று விடவில்லை விவசாயியை




எனக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று அதிர்ஷ்டத்தை தேடி இங்கு பலர் ஓடிக்கொண்டிருக்க,அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் தான் விவசாயத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற நிலையில் இருக்கும் விவசாயிகள் என்னவோ உழைப்பு உழைப்பு என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.




அதிர்ஷ்டம் என்ற
ஒன்று யாருக்கு
தேவைப்படுதோ 
இல்லையோ,விவசாயிக்கு
நிச்சயம் தேவைப்படுகிறது.
ஏனென்றால் இவர்களின்
பிழைப்பு மண்ணை
நம்பியும் மழையை
நம்பியுமாக இருக்கிறது.





விவாசாயிகளின் உழைப்பால் விளைந்த பொருள்களை மட்டும் உண்ணும் நாம் ஏன் விவசாயிகளின் உழைப்பை மதிப்பதில்லை என்று தெரியவில்லை ஒவ்வொரு விவசாயியும் நாம் மதிக்க ஆரம்பித்தால் இந்த பூமியில் வறுமையும் வறட்சியும் உணவின் மையும் இல்லாமல் போய்விடும்



ஒரு விவசாயி
உற்பத்தி செய்த
பொருளை அனைவரும்
சாப்பிடுகிறோம்; ஆனால்
விவசாயி சாப்பிட்டானா
இல்லையா என்பதை
பார்க்க தான் மறந்து
விடுகிறோம்




விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான் இந்தியாவை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் என்று அனைவரும் மேடைகளில் மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் உண்மையில் விவசாயம் என்பது இந்தியாவின் முதுகெலும்பு தான், அது தன்னை அறியாமலும் மற்றவர்களுக்கு அறியாமலும் தேய்ந்து கொண்டிருக்கிறது விழித்துக்கொள்ளுங்கள் விந்தை மனிதர்களே விபரீதமாகிவிடும்.




இந்தியாவின்
முதுகெலும்பு விவசாயமாம்
அனைவரும் சொல்கிறார்கள்;
முதுகெலும்பு தேய்ந்து 
வருவதை மறந்து 
விடுகிறார்கள் இவர்கள்



நாம் ஒவ்வொருவரும் உணவு உண்ணும் பொழுது இதை உறுதி விதைத்தவனும் உண்ண வேண்டும் நல்ல உணவை என்று மனதார எண்ணினால் மட்டுமே விவசாயமும் விவசாயிகளும் வாழ முடியும்.



உண்ணும் போது
உழுதவன் நினைவு
நிச்சயம் மலர்ந்தால்
உழவன் நிலை மாறும்




விவசாயமே வேண்டாம் என்று இன்றைய தலைமுறை வேறு ஏதோ படிப்புகளுக்கு தங்களை பரிச்சயம் ஆக்குகின்றனர் ஆனால் இவர்களின் கண்களுக்கு எல்லாம் விவசாயமும் விவசாயிகளும் பெரும் ஏமாளியாக காட்சியளிக்கலாம் உண்மையில் ஏமாளியாக மாறப் போவது யார் என்று எதிர்காலம் சொல்லும்.



ஏர் பிடித்தவன்
ஏமாளியாக
தோற்றமளிக்கிறான்
இன்று...
ஆனால் ஏமாற
போவது யார்
என்று எதிர்காலம்
சொல்லும்



எல்லோருக்கும் எல்லாமும் எப்பொழுதும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கு எல்லோரிடமும் இருக்க வேண்டும் இதில் மனிதன் எதற்காக உயிர் வாழ்கிறான் உணவு உடை இருப்பிடம் என்ற மூன்றுக்காகத்தான் இதில் மிகவும் முக்கியமான உணவை தன் உழைப்பால் அனைவருக்கும் கொடுக்கும் விவசாயிகள் இந்த மண்ணில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே அனைவருடைய எண்ணமும் ஆகும்.



உணவு,உடை
இருப்பிடம் இவை
மூன்றிற்காக தான்
இந்த உலக மாந்தர்
உழல்கின்றனர்...இங்கே
இதில் முதன்மையான
உணவை முறையாய்
உழைத்து கொடுக்கும்
விவசாயிகள் வாழட்டும்
வாழ்வாங்கு




ஏற்றம் இறைத்து நாட்களாகிவிட்டது ஆம் நவீன இந்த உலகத்தில் ஏற்றம் என்பது இல்லாமல் போய்விட்டது மாறாக மோட்டார் பைப்பகள் ஆழ்துளை கிணறுகள் என்று வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது இன்றளவும் இந்த நவீன இயந்திரங்கள் சென்று சேராத இடங்களில் வாழும் விவசாய பெருமக்கள்
ஏற்றம் இறைத்து தான் விவசாயம் செய்கிறார்கள்.




நாற்று நட்டு
நாடு வளர
நாளும் தேயும்
விவசாயிகள்
வாழட்டும்



பசுமை புரட்சி
என்பது உணவை
பெருக்குவது மட்டும்
அல்ல;உழுபவனை
பெருக்குவதும் தான்



ஏர் பிடித்தவன்
ஏடு பிடித்ததால்
மாறிப்போனதோ
மாரி இங்கே...



விவசாயிகளின்
கண்ணீர் காணாமல்
போக இறைவனை
பிரார்த்திப்போம்...



எவ்வளவு தான்
தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
நாம் உண்ணுவது
சோற்றை தான்...
விவசாயம் வளரட்டும்



இளைஞர்களே
உங்கள் சாதனைகள்
நம்மிடம் இல்லாதவற்றை
நம்மிடம் கொண்டுவரட்டும்
நம்மிடம் இருப்பவற்றை 
விற்று இல்லாதவற்றை
தேடாதீர்கள்...குறிப்பாக
விவசாயத்தை



ஒவ்வொரு பிடி
நெல்லும் சொல்லும்
விவசாயிகள் படும்
பாட்டை...




பார்த்தால் 
விளையாது...
பாடுபட்டால் தான்
விளையும்...வயலில்
விவசாயிகள் வாழ
வழிவிடுவோம்...
மண்ணை மனதையும்
வெல்வோம்



காடு மேடாய்
திரிந்தும் கால்
வயிற்று கஞ்சிக்கு
வழியில்லாமல்
வாழும் விவசாயிகளின்
வாழ்க்கை கொடுமையானது



ஆயிரம் கோடி கடன்
வாங்கி அடைக்க
முடியாமல் நின்னால்
அது கௌரவம் என்றால்
ஆயிரம் ரூபாய் கடன்
வாங்கி அடைக்க
முடியாமல் உயிரை
விடும் ஒரு  விவசாயியின்
உணர்வு என்ன...



கடன் பட்டாலாவது
காட்டை விளைய
வைக்கனும் னு
நினைப்பான் விவசாயி...



மண்ண நம்பி
மனசார உழைக்கிறவன்
விவசாயி...அது விளையும்
விலை மலியுமோ...
தெரியாது
 


தான் பட்டினிக்
கிடந்தாலும்
தன்னை நம்பி உள்ள
ஆடு மாடு பட்டினிக்
கிடக்க கூடாது னு
நினைக்கிறவன் தாங்க
விவசாயி



கஷ்டப்பட்டு
உழச்சும் கையில
எதுவுமே தங்காம
காலத்துக்கும் கடன்காரனா
வாழனுங்றது விவசாயி
தலையெழுத்தோ என்னவோ?



வெளஞ்சா விலை
இல்ல...
விலை இருந்தா
வெளச்சல் இல்ல
இது விவசாயிகளின்
தலையெழுத்து....



மண்ணும் மழையும்
சரியா இருந்தா
விவசாயிகளோட
வாழ்க்கை வெளிச்சமாயிடும்



நம் நாட்டின்
வளர்ச்சியில் 
விவசாயிகளின் பங்கு
இருக்க வேண்டுமோ
இல்லையோ...ஆனால்
விவசாயத்தின் வளர்ச்சியில்
நம் நாட்டின் அதிகமாய்
தேவைப்படுகிறது


விவசாயி தின வாழ்த்து கவிதைகள்


விவசாயக் கல்வி
தொடக்க கல்வி
முதலே தொடங்க
வேண்டும் இனி வரும்
காலங்களில்...



நம் நாட்டையும்
வீட்டையும் நலமாக்கும்
பொறுப்பு மிகுந்த
துறை விவசாயம்...
விவசாயம் இல்லையேல்
எதுவும் இல்லை
இந்த வையகத்தே...



விவசாயம் என்பது
வயல்வெளியில்
விளைச்சல் எடுப்பது
மட்டும் அல்ல; மொட்டை
மாடியில் சிறிய கத்தரி
செடி ஊணி காய்
பறித்தால் அதுவும்
விவசாயமே....



முடிந்த வரை
முடியும் வரை
விவசாயம் பழகு...



வீட்டுக்கொரு விவசாயி
இருந்த காலம் போய்
வீட்டுக்கொரு இன்ஜீனியர்
என்ற காலம் மாறிவிட்டது



விவசாயம் என்பது
அனைத்து தொழில்களுக்கும்
வேர் போன்றது...



விவசாயத்தின் வளர்ச்சியில்
தான் விஞ்ஞானத்தின்
வளர்ச்சியும் சார்ந்திருக்கிறது...

.

விவசாயம் வீழ்ந்தால்
எதுவும் வளர முடியாது
இந்த வையகத்திலே...



விவசாயம் தெரிந்தவனே
படித்தவன் ஆவான் 



இந்தியா ஒரு 
விவசாய பூமி
விவசாயம் காப்போம்



இன்றைய இளைஞர்கள்
மறந்து போய்க்கொண்டிருப்பது
விவசாயத்தை மட்டும்
அல்ல விவசாயிகளையும்
தான்...



படித்தவன் ஏர்பிடித்தால்
பசுமையாய் மாறும்
இந்த நாடு...



விவசாயிகள் வளமாக
வாழ்ந்தால் தான்
விவசாயமும் வளரும்
என்பதை உணருவோம்
விவசாயிகளை வளர்ப்போம்...



விவசாயத்தை 
பேணிக்காப்பதை
கடமையாக எண்ணி 
செய்யாமல் நம் 
உடமையாக நினைத்து
உழைத்தால் நிச்சயம
 விவசாயம் வளரும்
விவசாயிகளும் வளருவார்கள்



விவசாயத்தால் தான்
வாழுகிறது இந்த
வையகம்; விவசாயத்தையும்
விவசாயிகளையும்
மதிப்போம்



எவ்வளவு உயர்ந்தாலும்
உழுபவனை உள்ளத்தால்
நினைத்து பார்...



வெளச்சலுக்கேற்ற
விலை கிடைத்தால்
விதைப்பவனும் வளர்ச்சி
காணலாம்



விவசாயி மட்டும்
விதைப்பதை நிறுத்தி
விட்டால் மண்ணும்
மலடாகிவிடும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top