முட்டாள்கள் தின வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

முட்டாள்கள் தினம்;

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம், என்றாலே பலரின் நினைவுகளும் தங்களுடைய பள்ளி மற்றும் சிறு வயது நியாபகங்களையே அசைபோடுகின்றனர்.ஏனேன்றால் அதில் அவ்வளவு மகிழ்ச்சி குடிகொண்டு இருந்தது.இந்த முட்டாள்கள் தினம் என்ற ஒரு நாள் எப்படி உருவானது என்பதற்கான சரியான சான்று இங்கு யாரிடமும் சரிவர இல்லை.முட்டாள்கள் தினத்தை உரிமை கொண்டாட யாரும் முன் வரவில்லை இனிமேல் வரப்போவதுமில்லை.இந்தியாவில் முட்டாள்கள் தினம் சற்றே விரும்பக்கூடிய வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.ஆம் இங்கு குறும்புத் தனமாக ஒருவரை ஒருவர் ஏமாற்றி தங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்கின்றனர்.ஒவ்வொருவருடைய பள்ளி நினைவுகளிலும் இந்த ஏப்ரல் 1 ஒரு குறிப்பிடதக்க  நாளாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அந்த நினைவுகளை கவிதை வரிகளாக கதைக்கலாம் வாருங்கள்...


April fools day wishes quotes in Tamil


முட்டாள்கள் தின வாழ்த்து கவிதைகள்;

கண்ணு உன் கால்ல ஒரு கொலுச காணோம் மா ,காலையிலேயே அம்மா ஏமாற்றுவார் இப்படி,உன் தலையில் தூசு இருக்கு பாரு,அக்கா ஏமாற்றுவார் இப்படி,
உன் சட்டையில கரை ஒட்டியிருக்குடா,நண்பன் ஏமாற்றுவார் இப்படி,
மொத்தத்தில் ஏமாறுபவனும் ஏமாற்றுபவனும் ஆனந்தமாய் கொண்டாடும் ஒரு நாள் ஏப்ரல் 1



முட்டாளுக்கு முனைப்பு தான் முட்டாள் இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே இருக்கும்.இதுவே தலை சிறந்த முட்டாள் தனம்.



முட்டாள் என்ற வார்த்தை இந்த நாளில் தருவது அவமானத்தை அல்ல , அன்பை



பள்ளி நினைவுகளில் அசைபோட பிடித்த நாட்களில் ஒன்று ஏப்ரல் 1



நாளைக்கு ஏமாறவே கூடாதுன்னு முடிவெடுதாது விடிந்து எழுந்ததும் ஏப்ரல் 1 னு னே மறந்து போன நாட்களும் உண்டு



ஏமாற்றுதல் என்ற குற்றத்தை சுற்றத்தோடு சேர்ந்து சுகமான அனுபவமாய் மாற்றும் ஒரே தினம் ஏப்ரல் 1



ஒருவரை முட்டாளாக்குபவன் புத்திசாலி அல்ல;குற்றவாளி



ஏமாறக்கூடாது என்ற விழிப்புணர்வு வீருட்டு எழும் நாள் ஏப்ரல் 1;மற்ற நாட்களில் ஏமாந்தால் கூட இங்கு பரவாயில்லை;அதாங்க நாம



அனைவரையும் சிரிக்க வைக்க ஒரு முட்டாளால் முடியும்;ஆனால் மனதில் வலியை சுமந்து கொண்டிருக்கும் முட்டாளை எந்த புத்திசாலியாலும் சிரிக்க வைக்க முடியாது.



அன்பை பகிர்ந்து கொள்ளும் எந்த நாளும் நல்ல நாளே;அது முட்டாள்கள் தினமாக இருந்தாலும் சரி



எந்த நொடியும் மரணம் நிகழலாம் என்பதை உணர்ந்தும் தீரா ஆசையால் ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களே முட்டாள்கள்



இங்கு முட்டாளாய் இருப்பவர்களை விட முட்டாளாய் நடிப்பவர்களே அதிகம்



முட்டாள்கள் தினத்தில் இங்கு முட்டாள்கள்களை கொண்டாடுவதில்லை.மாறாக மற்றவர்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறார்கள்;இங்கே முட்டாளாக்குபவர்களையே கொண்டாடுகிறார்கள்



நான் ஒரு முட்டாள் என்று ஒருவன் உணரும் போது அவன் புத்திசாலி ஆகிறான்



ஒவ்வொரு மனிதனும் இறைவனால் முட்டாளாக்கப்படுகிறான்...சில சமயங்களில



சுய விழிப்புணர்வை இழந்த ஒருவனே முட்டாளாக்கப்படுவான்



கண்ணில் காண்பதெல்லாம் உண்மை என்று நம்பும் ஒருவன் நிச்சயம் முட்டாள் ஆகிறான்



முட்டாள்தனத்தில் ஒரு சுவாரஸ்சியமும் நகைச்சுவையும் ஒளிந்திருக்கிறது;அதுவே சில முட்டாள்களை நேசிக்கவும் வைக்கிறது.



என்னதான் சுவாரசியமான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தாலும் ஒரு முட்டாளின் நட்பு தரும் அன்பை உங்களால் எதிலும் உணர முடியாது;ஏனென்றால் உண்மையான அன்பை தரும் எல்லோரும் இறுதியில் முட்டாளாக்கப்படுகின்றனர்.



ஒரு முட்டாள் தரும் உண்மையான அன்பை எந்த புத்திசாலியாகலும் தர முடியாது.



வாழ்க்கையில் தோத்தவன் எல்லாம் முட்டாளும் அல்ல;ஜெயிச்சவன் எல்லாம் புத்திசாலியும் இல்ல


 
மனிதன் தன்னை புத்திசாலி என்று நினைக்கிறான்;இறைவன் அவனை முட்டாளாக்கி ரசிக்கிறான்.


April fools day wishes quotes in Tamil


முட்டாள்கள் தினம் 2022

முட்டாளிடம் நீ ஒரு முட்டாள் என்று சொன்னால் அவனுக்கு கோபம் தான் வரும்.



தன்னை உணராதவன் முட்டாளாகிறான்;மற்றவர்ளை புரிந்து கொள்ளாதவன் ஏமாளி ஆகிறான்.



அறிவாளியின் அகத்தை விட முட்டாளின் மூளை கூடுதல் அழகானது.



முட்டாளுக்கு கோவம் மூக்குல இருக்கும்



எந்த முட்டாளும் பிறர் சொல்லி தான் ஒரு முட்டாள் என்பதை உணர்வதில்லை;தானாய் அடிப்பட்டு தன்னிலை உணர்ந்தே மாறுதல் பிறக்கும்

 

எத்தனையோ துன்பங்களை கடந்தும் வாழ்க்கையை இன்னும் அழகாக்குவது சில முட்டாள் தனமான செயல்களே



ஒரு புத்திசாலியின் மனதை உணர்வதை விட, முட்டாளின் மனதை உணர்வது எளிது மற்றும் உண்மையானது
 


முட்டாளை விட மூடன் முட்டாளாக்குபவன்



தன்னை உணர்ந்து விழிப்புணர்வோடு இல்லாதவனை ஏமாற்றுபவனே பெரிய முட்டாள்;வல்லானுக்கு வல்லான் வையகத்தில் உண்டு



பிறரின் அவமானங்களையும் வலிகளையும் மன உணர்வுகளையும் ஒரு அறிவாளியை விட முட்டாளால் எளிதில் உணர முடியும்



மற்ற தினங்களில் எல்லாம் அறிவாளியாக காட்டிக்கொள்ள துடிக்கும் சில நபர்களால் முட்டாள்கள் தினத்தில் முட்டாளாக நடந்து கொள்ள விருப்பப்படுவதில்லை.



ஒரு முட்டாளின் கையில் எதுவுமில்லாமல் இருந்தாலும் அவன் உன்னதமானவனே;ஆனால் ஒரு அகத்தில் இருக்கும் அழுக்கு எப்பொழுதும் ஆபத்தானது



கண்களை மூடிக்கொண்டு கடவுளை வேண்டுதலை விட மனதை திறந்து உலகை வென்றிட முயற்சி செய் .



நான் என்ற எண்ணம் இருக்கும் மனிதனை விட நான் யார் என்று தெரியாத மனிதன் சிறந்தவன் தான்.


சிறுவயது நியாபகங்கள்
சிலவற்றை இந்த பதிவு
படர் வைத்திருக்கும் என்று
நம்புகிறோம்...
.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top