சிறுவர் குட்டி கதைகள்-வெற்றியின் ரகசியம்

Vizhimaa
0

    Short Motivational Stories For Children in Tamil

    குழந்தைகளுக்கு கதைகள் என்றாலே அளாதி பிரியம் தான்.தூங்கும் போதும் விளையாடும் போதும் கதைகள் கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள்.இப்பொழுதெல்லாம் கதைகளை சொல்வதற்கு பெற்றோர்களுக்கு நேரமில்லாமல் போய்விட்டது.ஓடும் ஓட்டம் அவ்வாறாக உள்ளது.எவ்வளவு வேலை....குழந்தைகளை கவனித்துக்கொள்வதே அவர்களுக்கு ஒரு பெரிய வேலை போல் தோன்ற ஆரம்பித்து விட்டது.இந்த நிலையில் தான் கதை சொல்லும் இடத்தை ஒரு youtube video வோ அல்லது Google இணையதளமோ எடுத்துக்கொள்கிறது.
    குழந்தைகளுக்கு வெற்றி என்பது என்ன,அது எதனால் வருகிறது,எப்படி இருந்தால் வெற்றிக் கிடைக்கிறது என்பதற்கான சிறிய குட்டி கதை இதோ படித்தும் பகிர்ந்தும் மகிழுங்கள்.

    கதையின் தலைப்பு

    வெற்றியின் ரகசியம்

    கதைக்களம்

    மலையேரத் துடிக்கும் ஒரு தவளையும் அதை வீண் முயற்சியாய் ஏளனம் செய்யும் மற்ற தவளைகளும் -ஒரு நிமிட தன்னம்பிக்கை கதைகள்


    Short Motivational Stories For Children in Tamil


    கதை மாந்தர்கள்

    ஐந்து தவளைகள்-ஒரு நிமிட தன்னம்பிக்கை கதைகள்

    கதை

    ஐந்து தவளைகள் ஒன்றாக வாழ்ந்து வந்தது.அந்த தவளைகள் வாழ்ந்து வந்த இடத்தின் அருகே ஒரு சிறிய குன்று ஒன்று இருந்தது.ஆனால் அந்த தவளைகளின் கண்களுக்கு அது ஏதோ மிகப்பெரிய மலை போல் காட்சி தந்தது.


    இந்த மலையை யார் கட்டியிருப்பார்கள்,இவ்வளவு உயரமாக இருக்கிறதே என்று ஒவ்வொரு நாளும் தவளைகள் பேசிக் கொள்ளுமாம்.நான்கு தவளைகளும் தங்களுடைய ஆற்றாமையை மாறி மாறி வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன.

    ஒரு நாள் தீடீரென அங்கு ஓர் புதிய தவளை ஒன்று அந்த கூட்டத்தில் சேர்ந்தது.வந்த புதிய தவளையோ வந்த உடனேயே,எனக்கு அந்த மலையை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது.நான் அந்த மலையை ஏற வேண்டும் என்று எண்ணம் கொள்கிறேன் என்றது.மற்ற நான்கு தவளைகளும் சிரித்தன.

    உடனே புதிதாக வந்த தவளை நான் இந்த மலையை ஏறப் போகிறேன் என்று கூறியது.அதற்கு மற்ற ஐந்து தவளைகளும் ஏதோ கோமாளியை பார்த்தது போல் சிரித்தன.

    முதல் தவளையோ இது நடக்காத காரியம் அந்த மலையை யாராலும் ஏற முடியாது என்றது,இரண்டாவது தவளையோ அந்த மலையை ஏற உன்னால் முடியாது என்றது,மூன்றாவது தவளையோ நீ ரொம்ப சின்னவன் அதனால் உன்னால் கண்டிப்பாக அந்த மலையை ஏற முடியாது என்றது நான்காவது தவளையோ நீ அந்த மலையை ஏறுவதற்கு முன் இறந்து விடுவாய் என்றது, ஐந்தாவது தவளையோ நீ மலை ஏறுவதாக கூறி உன் நேரத்தை வீணடிக்காதே என்று கூறியது.

    எல்லா தவளைகளும் ஆளாளுக்கு ஏதோ ஒன்றை கூறிவிட்டு அவரவர் இருப்பிடத்திற்கு சென்று விட்டன.ஆனால் அந்த புதிய தவளையோ நேரே சென்று அந்த மலையேற தொடங்கியது.

    விடியற்காலையில் எல்லா தவளைகளும் வெளியே வந்தன.வணக்கம் நண்பர்களே என்ற குரல் மலையின் உச்சியில் இருந்து கீழே கேட்டது.அனைத்து தவளைகளும் அண்ணாந்து பார்த்தேன்.அந்த புதிய தவளை மலையின் உச்சியை அடைந்திருந்தது.தவளைகளுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம் எப்படி இந்த தவளை மலை உச்சியை அடைந்தது என்று...

    ஆனால் அந்த புதிய தவளையின் கடின உழைப்பால் தான் அதனால் மலையேற முடிந்தது.அதே சமயம் மற்ற ஐந்து தவளைகளின் வார்த்தைகள் அதன் மூளைக்கு செல்லவே இல்லை.ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்காது.

    அதனால் தான் அந்த புதிய தவளையால் எந்த தடுமாற்றமும் இன்றி மலையை ஏற முடிந்தது.


    Short Motivational Stories For Children in Tamil


    கதையின் நீதி

    (உன்னால் இதை செய்ய முடியாது,நீ அதுக்கெல்லாம் சரிப்பட மாட்ட,உன்னால் ஜெயிக்க முடியாது, அதிர்ஷ்டம் இருந்தா தான் ஜெயிக்க முடியும்) -இது போன்ற அவநம்பிக்கையான வார்த்தைகளால் உங்களை உங்கள் குறிக்கோளில் இருந்து பிறழச் செய்யும் நபர்களிடத்தில் நீங்கள் ஒரு செவிடாக ,காது கேளாத நபராக இருந்து விடுவது நல்லது.அதே சமயம் உங்கள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் நிச்சயம் உங்களை வெற்றியடையச் செய்யும்.

    எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களோடு உள்ள நபர்களிடமிருந்து சற்று விளகி இருங்கள்.உங்களை மட்டுப் படுத்தும் வார்த்தைகளுக்கு உங்களை செவிடாக்கி கொள்ளுங்கள்

    இதுபோல் மேலும் நல்ல கதைகளை படிக்க... 



    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    கருத்துரையிடுக (0)
    To Top