சிறுவர் குட்டி கதைகள்-புத்திசாலி முயல்

Vizhimaa
0

    Short Motivational stories for children in Tamil

    குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை சிறுவர் கதைகள்


    கதையின் தலைப்பு

    புத்திசாலி முயல்


    Short stories for children in Tamil


    கதைக்களம்

    ஓர் அடர்ந்த வனப்பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்திற்கும் அந்த வனப்பகுதியை அடுத்து உள்ள தீவிற்கு சென்று அங்கு உள்ள ருசியான பழங்களையும் காய்களையும் திங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.ஆனால் அந்த தீவிற்கும் வனத்திற்கும் இடையில் குளம் ஒன்று உள்ளது.அதில் எண்ணற்ற உயிர்க்கொல்லி முதலைகள் வாழ்கின்றன.


    கதையின் மாந்தர்கள்

    முயல் மற்றும் முதலைகள்


    கதை

    வனத்தில் வாழும் அனைத்து விலங்குகளுக்கும் அருகில் உள்ள தீவிற்கு சென்று அங்கு உள்ள பழங்களை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.ஆனால் குளத்தில் கொடிய பற்களுடன் உயிரை கொல்லும் அளவிற்கு பெரிதாய் சுற்றிக் கொண்டிருக்கும் முதலைகளை பார்த்து பயம் கொண்டு குளத்தின் ஒரு கரையில் நின்று தினமும் அந்த தீவை ஏக்கத்தோடு பார்த்து சென்று கொண்டிருந்தன அங்கு வாழ்ந்த விலங்குகள்.

    ஆனால் அதில் ஒரு முயல் மட்டும் இன்று எப்படியாவது அந்த தீவிற்கு சென்று அந்த பழங்களை சாப்பிட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்தது.ஆனால் எப்படி அந்த குழந்தை தாண்டி மறுகரையில் உள்ள குளத்திற்கு செல்வது என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

    மனதில் ஒரு தெளிவான திட்டத்துடன் குளத்தின் கரையை நெருங்கி சென்றது.குளக்கரையில் இங்குட்டும் அங்குட்டுமாக சிறிது நேரம் நடந்தது.இதனை பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதலை மற்ற முதலைகளிடம் சென்று அங்கு ஒரு முயல் குளத்தையே உற்று உற்று பார்க்கிறது.ஒருவேளை இன்று நமக்கு அந்த முயல் தான் விருந்தாகப் போகிறதோ என்று கூறிக்கொண்டிருந்தது.

    சிறிது நேரம் கழித்து அந்த முயல் குளத்தை நோக்கி முதலைகளே இங்கு வாருங்கள்;நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் என்று அனைத்து முதலைகளையும் அழைத்தது.முதலைகளுக்கோ ஒரு முயல் நம் அனைவருக்கும் பத்தாதே...நம்மை பற்றி தெரியாமல் நம்மிடமே எவ்வளவு தைரியமாக இந்த முயல் வந்திருக்கிறது பாருங்களேன்...என்று எண்ணி சிரித்துக்கொண்டே கரைக்கு அருகில் வந்தன.

    வந்த முதலைகள் எங்களை எதற்காக அழைத்தார் என்று கேட்டன.உடனே முயல் எங்கள் காட்டின் ராஜாவான சிங்கம் இன்று அனைத்து விலங்குகளுக்கும் விருந்து ஒன்று அளிக்கிறார்.அதற்காக இந்த காட்டிலும் நாட்டைச் சுற்றிலும் மொத்தம் எத்தனை விலங்குகள் உள்ளன என்று என்னை எண்ணி வரச்சொன்னார்.நான் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் எண்ணி விட்டேன்.இன்னும் இந்த குளத்தில் உள்ள முதலைகளான உங்களை மட்டும் தான் எண்ணவில்லை.உங்களை எண்ணத்தான் இங்கு வந்தேன் என்றது.

    விருந்து என்றவுடன் வாயை பிளந்த முதலைகள் சரி சரி எங்களை சீக்கிரமாக எண்ணிக்கொள் என்றன

    அதற்கு முயலோ நீங்கள் வரிசையில் நின்றால் தான் உங்களை என்னால் எண்ண முடியும் என்றது.உடனே முதலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நின்றன.

    இந்த சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த முயல் முதலைகளின் மீது குதித்து குதித்து குளத்தின் மறுகரையில் உள்ள தீவிற்கு சென்றது.அங்கே சென்றவுடன் ஆசை தீர அனைத்து பழங்களையும் காய்கறிகளையும் நன்றாக சுவைத்து சாப்பிட்டது.

    இப்பொழுது பொழுது சாயத் தொடங்கியது.குளத்தின் மறுகரைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தது.இப்பொது அந்த முயல் தீவின் கரையில் நின்று அனைத்து முதலைகளையும் மீண்டும் அழைத்தது.அங்கு வந்த முதலைகள் முயலிடம் என்ன உங்கள் ராஜாவிடம் எங்கள் எண்ணிக்கையை கூறிவிட்டாயா என்றன.அதற்கு என்னை மன்னித்து விடுங்கள் நான் தவறாக எண்ணி விட்டேன்.இப்பொழுது மீண்டும் வரிசையில் நில்லுங்கள் நான் மீண்டும் ஒரு முறை சரியாக எண்ணி விடுகிறேன் அதன்பின் எங்கள் ராஜாவான சிங்கத்திடம் உங்களுடைய எண்ணிக்கையை கூறி விடுகிறேன் என்றது முயல்.


    Short stories for children in Tamil



    முயலின் வார்த்தைகளை நம்பிய முட்டாள் முதலைகள் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் நின்றன இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திய முயலானது முதலைகளின் மீது தாவி தாவி குதித்து குளத்தின் மறுகரையாற காட்டிற்கு சென்றது.

    இவ்வாறு முயல் தனது மதியால் முதலைகளின் சதியை முறியடித்து தான் நினைத்ததை சாதித்து காட்டியது.காட்டில் உள்ள மற்ற விலங்குகளால் உண்ண முடியாத குளத்தின் மறுகரையில் இருந்த
    அந்த தீவிற்கு தனியாளாக சென்று பழங்களை உண்டு தன் புத்திசாலித்தனத்தால் தன் மதியால் விதியை வென்று காட்டியுள்ளது.


    கதையின் நீதி

    மதியால் விதியை வெல்லலாம்

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    கருத்துரையிடுக (0)
    To Top