வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்

ஜனவரி 9 ம் தேதியை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம்.பல்வேறு காரணங்களுக்காக நம் இந்திய மக்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.அதிலும் பெரும்பாலானோர் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் சென்றவர்களாக இருப்பர்.இவர்களின் நிலை என்னவோ கப்பல் பறவைகளை போல தான் பிறந்த மண்ணை தங்கள் பிழைப்புக்காக பிரிந்து சென்று நாளும் உழைத்து நம்பி வந்த குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருதி வரை நம் சொந்த மண்ணில் வாழ மாட்டோமா என்ற ஏக்கத்தோட வாழ்பவர்கள்.வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த தினத்தை கொண்டாடி மகிழும் வகையில் இங்கு சில கவிதைகள் பதிவிடப்பட்டுள்ளது.இந்தியர்கள் படித்தும் பகிர்ந்தும் மகிழுங்கள்;வெளிநாடுவாழ் இந்தியர்கள் படித்தும் நினைத்தும் மகிழுங்கள் இந்திய நினைவுகளை


வெளிநாடு வாழ் இந்தியர்கள்


வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின வாழ்த்து கவிதைகள்;

தன் குடும்பத்திற்காக வேறொரு நாட்டில் குடிபுகுந்து இரவும் பகலும் உழைத்து உறவுகளை பார்க்காமல் உயிர் தேய்ந்து சொந்த ஊரில் வாழ்ந்த நினைவுகளோடு வாடிக் கொண்டிருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு எங்கள் மரியாதைகள்



பல கனவுகளோடு வளர்த்த பெற்றவர்களையும் பல கனவுகளோடு கைப்பிடித்தவளையும் பல கனவுகளோடு வளர்க்க நினைத்த பிள்ளைகளையும் பிரிந்து ஏதோ ஒரு நாட்டில் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு என் மரியாதைகள்




எதையோ தேடி, எங்கோ ஓடி, ஏக்கங்கள் கூடி,ஏமாற்றங்கள் மீதி, வாழ்க்கை எனும் நாடகத்தில் நாம் எல்லாம் கூத்தாடி




கைநிறைய சம்பளம் வாங்கினாலும் வயிறு நிறைய சமைத்து போட தாயோ தாரமோ இல்லாமல் வாடும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு எங்கள் மரியாதைகள்



குடும்பத்தாரின் வயிற்றை நிரப்ப தங்கள் மனதின் ஆசைகளை பட்டினி போடும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எங்கள் மரியாதைகள்



குடும்பத்திற்காக உழைப்பதிலேயே ஒரு ஆணின் பாதி வாழ்க்கை கழிகிறது.



குடும்பத்திற்காக குடும்பத்தை விட்டே பிரிந்து சென்று வேற்று நாட்டில் ஒற்றை ஆளாய் உழைக்கும் நல்ல உள்ளங்களுக்கு எங்களின் மரியாதைகள்



எது உங்களை நாடு கடத்தியது,பணமா?படிப்பா?பஞ்சமா?கடனா?இல்லை பேராசையா?



ஓடும் வயதில் சம்பாதித்தால் தான் உண்டு என்று உறவுகள் சொன்ன வார்த்தைக்காக இளமையை எங்கோ தொலைத்துக் கொண்டிருக்கும் எம் தேசத்து இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்



ஆயிரம் இழப்புகளை வரிசைப்படுத்தினாலும் இங்கே பல குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவர்களுடைய வீட்டில் ஒரு ஆண் வெளிநாட்டில் இருப்பதே காரணமாக இருக்கிறது.



பிறந்த மண்ணை பிழைப்பிற்காக விட்டுச்சென்ற எம் தேசத்தவர்களின் விடும் கண்ணீரின் ஆழம் கடலை விட உயர்ந்தது


வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவிதைகள்


சொந்த மண்ணை போல் சொர்க்கமும் இல்லை;சொந்த வீட்டை போல் ஒரு சொகுசு பங்களாவும் இல்லை



திம்மென்ற அமைதியான சூழ்நிலையில் மனதில் ஓடும் நினைவுகளால் விழியோரம் சில கண்ணீர் துளிகள்-சொந்த ஊரில் சுற்றி திரிந்த நியாபகங்கள்



அம்மா செய்வதில் எனக்கு பிடிக்காத பருப்பு துவையல் கூட இப்போது சாப்பிட தோன்றுகிறது;ஆனால் செய்து கொடுப்பதற்கு அம்மா என் அருகில் இல்லை நானும் அம்மாவின் அருகில் இல்லை



ஏறிப்போன கடன் சுமை ஏற்றிவிட்டதோ  எங்கோ ஓர் மூளைக்கு....



பிறந்த மண்ணின் அருமை எல்லாம் பிரிந்து வந்து தனியே புலம்பும் போதுதான் புரிகிறது.



பெற்ற தாய் ,பேர் வைத்த தந்தை கட்டிய மனைவி,பெற்றெடுத்த பிள்ளைகள் என் அனைவரையும் பிரிந்து ஏதோ ஓர் நாட்டில் இப்படி ஏங்கி தவிப்போம் என்று எண்ணி பார்த்தது கூட இல்லை...



உறவுகளின் பார்வையில் உயர்ந்து நிற்க ஊர் விட்டு ஊர் வந்து உயிர் தேய அழைத்துக் கொண்டிருக்கும் கூட்டமும் உண்டு இங்கே...



வெளிநாட்டில் வேலைக்காக சென்றவர்களுக்கே தெரியும் பணத்தை விட மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்று...



உறவுகளின் அருமை ஊர் விட்டு ஊர் சென்றால் தான் புரிகிறது சிலருக்கு



அம்மா கையால் செய்த சாப்பாட்டை பழித்தவன் வெளிநாட்டில் இருக்கும் போது  நினைப்பான் அம்மாவின் சாப்பாடு எவ்வளோ பரவாயில்லை என்று



சொந்த பந்தங்களை பிரிந்து சொத்து சேர்க்க கடல் பறவைகளாய் காணல் நீரில் கண்ணீர் சிந்தும் வாழ்க்கை வேண்டாம்...



வசந்த காலங்களில் வாசனை இல்லா வாழ்க்கை வெளிநாட்டு வாழ்க்கை



பஞ்சம் பிழைக்க வெளியூர் சென்ற காலம் போய் பணம் சேர்க்க வெளிநாடு செல்லும் காலம் வந்துவிட்டது.



எவ்வளவு தான் காசு பணம் சேர்த்தாலும் சொந்த ஊரில் சுவாசிக்கும் காற்று விலைமதிப்பற்றது.


 
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் இளமை காலங்களை எங்கோ ஓர் மூளையில் யாருக்கோ செலவழித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்



இன்று எத்தனையோ குடும்பங்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு வாழ்க்கை தான்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top