தன்னம்பிக்கை கதைகள்-பாரம் குறைந்த பலூன்

Vizhimaa
0

  Stress Relief Motivational Stories in Tamil

  தன்னம்பிக்கை உணர்வை தூண்டும் வகையில் அமைந்த கதைகளின் தேடல் காலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இதன் அர்த்தம் மனிதர்களிடம் தன்னம்பிக்கை குறைந்து வருகிறது என்பது அல்ல.தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து போட்டி இங்கே பெருகி விட்டது.எனவே உந்தித் தள்ளும் உணர்விற்காக இங்கு அனைவரும் எதையோ ஒன்றை தேடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.அந்த வகையில் தன்னம்பிக்கை தரும் சிறு கதை இதோ  Motivational stories in Tamil  கதையின் தலைப்பு


  தன்னம்பிக்கை கதைகள்-பாரம் குறைந்த பலூன்


  கதையின் மாந்தர்கள்


  தந்தை மற்றும் மகன்


  கதைக்களம்


  எதோ ஒன்றை நினைத்து மனதில் பயத்தை சுமந்து கொண்டிருக்கும் தன் மகனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் தந்தை கூறும் எடுத்துக்காட்டு அறிவுரையே இந்த கதை ஆகும்.


  கதை-Stress Relief Motivational Stories In Tamil-ஒரு நிமிட தன்னம்பிக்கை கதைகள்


  கொரோனா ஊரடங்கு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துவைக்கப்பட்ட நேரம் இது.தன்னுடைய மகன் எப்படியாவது நல்ல மதிப்பெண் பெற்றுவிட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் விழிமாவின் தந்தை. ஆம் விழிமா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன்.

  ஆனால் வழக்கத்து மாறாக தன்னுடைய மகனின் நடத்தையில் ஏதோ ஒரு புதிய மாற்றத்தை கவனித்து வந்தார் விழிமாவின் தந்தை.விழிமா அடிக்கடி தனிமையை தேடி செல்வதும் ஒரு வித பதட்ட உணர்வோடு செயல்படுவதுமாக இருந்தான்.முற்றிலுமாக மாறுபட்ட விழிமாவாக தென்பட்டான்.என்ன விழிமா ஏன் இப்படி இருக்கிறாய் என்று யாரேனும் கேட்டால் ஒன்றுமில்லை என்று நழுவி விடுகிறான்.

  ஆனால் சிறுவயது முதல் விழிமாவும் அவனது தந்தையும் நண்பர்கள் போல மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.விழிமாவால் தன் தந்தையிடம் எதையும் மறைக்க இயலாது.இருப்பினும் இம்முறை விழிமாவின் தந்தைக்கு சிறிதே ஆச்சரியம்.விழிமா பள்ளி செல்ல தொடங்கிய நாள் முதல் நம்மிடம் சகஞமாக பழகுவதில்லயே.ஏதோ ஒன்றை நினைத்து உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது என்றே அவரும் நினைத்தார்.

  தென்றல் சற்றே விசும்பலாய் வீசினால் வரும் சத்தம் போல் ஓர் அழுகுரல் விழிமாவின் அறையில் இருந்து வந்தது.
  இதை அந்த மாலை வேலையில் விழிமாவின் அறையை கடந்து மாடிக்கு செல்லும் போது கேட்ட விழிமாவின் தந்தை உள்ளம் நொருங்கி போனார்.என்னவாயிற்று இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த விழிமாவின் தந்தை, அறையை திறந்து உள்ளே சென்றார்.அங்கு ஓர் மூளையில் புத்தகங்களை கட்டிப்பிடித்த வண்ணம் அழது கொண்டிருந்த விழிமாவை கண்டு ஆடிப்போனார் தந்தை.

  என்ன விழிமா?என்ன இது?என்ன செய்து கொண்டிருக்கிறார்?ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறாய்?எல்லாம் நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது.இல்லை ஏதேனும் பிரச்சனையா? உன் நண்பர்களை நான் சந்தித்து விட்டு தான் வருகிறேன்.அவர்களிடம் கூட நீ சரியாக பேசுவதில்லையாமே.என்னாயிற்று விழிமா?அப்பாவிடம் மறைக்காமல் எல்லாவற்றையும் கூறு என்று நம்பிக்கையுடன் கேட்டார் விழிமாவின் தந்தை.

  அப்பாவின் கண்களை கண்ட விழிமாவால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை.தந்தையை கட்டியணைத்து கொண்டு கண்ணீர் விட்டு கவலைகளை கரைத்துக் கொண்டிருந்தான்.சிறிது ஆஸ்சுவாசத்திற்கு பிறகு தன் தந்தையிடம் பேச தொடங்கினான் விழிமா.

  அப்பா நான் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லவில்லை கொரோனா பேரிடர் காலத்தால் வீட்டில் ஆன்லைன் வகுப்பில் மட்டுமே கலந்து கொண்டேன்.என்ன இருந்தாலும் வீட்டில் இருந்து என்னால் சரிவர என் பாடங்களை படிக்க முடியவில்லை.இப்பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு வந்து விட்டேன்.இங்கு புத்தகங்களின் அடர்த்தியும் நேர்த்தியும் என் தன்னம்பிக்கையை அசைத்து பார்க்கின்றன.என்னால் என் பயத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.

  நான் நன்றாக படிக்க வேண்டும் என்று நீங்கள் மிகவும் ஆசைப்படுகிறீர்கள்.நானும் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.ஆனால் ஏனோ இந்த அடுக்கி வைத்த புத்தகங்களும் அடுத்தடுத்து வரும் தேர்வுகளும் என்னை பயமுறுத்துகிறன.என்ன செய்வதென்றே தெரியவில்லை.எப்படி இந்த பயத்தை கையாள்வது என்றும் தெரியவில்லை.இதனால் தான் அழுதுகொண்டிருக்கிறேன் அப்பா என்றான் விழிமா.அப்பா விழிமாவின் பிரச்சனையை உணர்ந்தார்.இப்போது விழிமாவிற்கு தேவைப்படுவது அவனுடைய பயத்தை கடந்து வந்து உள்ளார்ந்த தன்னம்பிக்கையை தரும் உணர்வு என்பதை உணர்ந்தார்.

  அப்பா விழிமாவை வீட்டின் தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.அங்கே விழிமாவின் கையில் ஒரு பலூனை கொடுத்து அதில் தண்ணீரை நிரப்பச் சொன்னார்.விழிமாவும் ஏன் என்று கேட்க மனமில்லாத மனநிலையில் அதை செய்தான்.தண்ணீரை நிரப்பிய பிறகு விழிமாவை பார்த்து விழிமா இந்த தண்ணீர் நிரப்பிய பலூனை அந்த தண்ணீர் நிரப்பிய தொட்டியில் சென்று மிதக்க விடு என்றார்.விழிமாவும் நீர் நிரம்பிய அந்த பலூனை தொட்டியில் விட்டான்.ஆனால் பலூன் மிதக்கவில்லை, மூழ்கியது.அப்பாவிடம் சென்று பலூன் மிதக்கவில்லை அப்பா என்று கூறினான்.

  விழிமாவின் அப்பா, சரி விழிமா இப்போ அந்த பலூனில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு வெறும் பலூனை இது என்றார்.விழிமாவும் பலூனை ஊதினான்.இப்போது காற்று நிரம்பிய இந்த பலூனை தண்ணீர் நிரப்பிய தொட்டியில் மிதக்க விடு என்றார் அப்பா.விழிமாவும் அந்த பலூனை தொட்டியில் சென்று மிதக்க வைத்தான் பலூன் தண்ணீருக்கு மேலே மிதந்தது.விழிமா மகிழ்ச்சியுடன் அப்பா பலூன் இப்போது மிதக்கிறது என்றான்.


  கதையின் நீதி


  இப்பொழுது விழிமாவின் அப்பா சொன்னார், விழிமா இதோ பார்இந்த தொட்டி தான் உன்னுடைய வாழ்க்கை,இந்த தொட்டியில் உள்ள தண்ணீர் தான் உன் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள்,பயம்,சோதனை, சவால்கள் என்று வைத்துக்கொள்வோம், இந்த பலூன் தான் உன்னுடைய மனது இதில் நீ ஊதிய காற்று தான் உன்னுடைய முயற்சி, விடாமுயற்சி, நம்பிக்கை, தன்னம்பிக்கை எல்லாம்.உன் மனம் என்னும் பலூனில் பிரச்சனைகளையும் பயத்தையும் சுமந்து கொண்டு வாழ்ந்தால் நீ அந்த பயத்திலும் பிரச்சனையிலும் மூழ்கி போவாய்.அதுவே உன் மனம் என்னும் பலூனில் முயற்சி மற்றும் தன்னம்பிக்கை எனும் காற்றை நிரப்பிக் கொண்டால் வாழ்க்கையில் எனும் தொட்டியில் மூழ்காமல் நீ மிதக்கலாம்,உண்மையான வாழ்க்கையில் ஜெயிக்கவும் செய்யலாம்.உண்மையை உணர்ந்த விழிமாவின் உள்ளத்தில் தன்னம்பிக்கை உணர்வு தழும்பு தொடங்கியது.நன்றாக படித்து நல்ல மதிப்பெண்னும் பெற்றான்.  கருத்துரையிடுக

  0 கருத்துகள்
  கருத்துரையிடுக (0)
  To Top