குட்டி சிரிப்பு கதைகள்-ஏன் அழுகிறாய்?

Vizhimaa
0

குட்டி சிரிப்பு கதைகள்-ஏன் அழுகிறாய்?

முல்லா மிகவும் நகைச்சுவையான மனிதர். இவருக்கு ஒரு நல்ல பெயர் எப்பொழுதும் ஊருக்குள் உண்டு. இவர் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் என்பது அனைவரது கணிப்பும். அதனாலேயே இவரை அனைவரும் வெகுவாக ரசிப்பார்கள். அதேசமயம் நீதிகளையும் சரியாக புகட்டுவார்.(நகைச்சுவை கதைகள்)(முல்லா கதைகள்)

ஒவ்வொருவரும் முல்லாவிடம் நட்பு பாராட்டவே விரும்புவார்கள் அப்படிப்பட்ட குணம் படைத்தவர் முல்லா. 

ஒருநாள் அனைவருக்கும் பிடித்தவரும் அனைவராலும் ரசிக்கப்படும் முல்லா அவர் வீட்டின் முன்பு நின்று கொண்டு அழுது கொண்டிருந்தார். முல்லா ஏன் அழுகிறார்? என்று அனைவரும் அவரிடம் கேட்க தொடங்கினர். அதில் ஒரு நபர் முல்லாவின் அருகில் சென்று, அவரின் தோளை தொட்டு முல்லா நீங்கள் எங்கள் எல்லோருக்கும் ஆறுதல் சொல்வீர்கள் இன்றோ நீங்கள் இவ்வளவு கதறி! கதறி! அழுகிறீர்கள். என்ன பிரச்சனை உங்களுக்கு கூறுங்கள் முல்லா ஏன் அழுகிறீர்கள்? எதற்காக அழுகிறீர்கள்? நாங்கள் உங்களுக்காக எப்பொழுதும் இருக்கிறோம். தயவுசெய்து அழாதீர்கள் முல்லா. என்ன காரணம் சொல்லுங்களேன் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் என்று அனைவரும்  கேட்டார்கள்.


குட்டி சிரிப்பு கதைகள்


அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த முல்லா மீண்டும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். என்ன இது முல்லா சிறுபிள்ளை போல் அழுது கொண்டு இருக்கிறீர்களே! உண்மையைச் சொல்லுங்கள் என்ன ஆயிற்று? என்று ஒரு நபர் கேட்டார். 

அவரிடம் முல்லா என் பாட்டி எனக்கு ஐந்து லட்ச ரூபாய் சொத்தை எழுதி வைத்துவிட்டு நேற்றுமுன்தினம் இறந்துவிட்டார்கள் என்று கூறினார். சரி முல்லா இதற்காகவா அழுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.முல்லாவோ என் பெரியப்பா ஒரு வாரம் முன்பு எனக்கு பத்து லட்ச ரூபாய் சொத்தை எழுதி வைத்துவட்டு இறந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே ஓஓ வென்று அழுதார். சரி முல்லா இதற்காகவா அழுகிறீர்கள்? என்று கேட்டார்கள். 

அதற்கு முல்லா மூன்று நாட்கள் முன்பு என் அத்தை எனக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்கள் என்று அழுதார். சரி சரி முல்லா இதற்காகவா அழுகிறீர்கள்? என்று எல்லோரும் கேட்டார்கள். அதற்கு முல்லா 2 வாரங்கள் முன்பு என் தாத்தா எனக்கு 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார் என்று கதறி கதறி அழுதார். சரி! சரி! முல்லா... முல்லா! அழாதீர்கள்... அழாதீர்கள்! உங்களுக்கு என்ன இப்போ அவர்கள் எல்லாம் இறந்தாலும் உங்களுக்குத்தான் அவர்களுடைய சொத்து ஏகபோகமாக வந்து இருக்கிறதே! அதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூறினார்கள். 

அதற்கு முல்லா மீண்டும் கதறி கதறி அழுதார். நிறுத்துங்கள் முல்லா ஏன் இப்படி அழுது கொண்டே இருக்கிறீர்கள்? எங்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது? ஒன்று காரணத்தை சொல்லுங்கள்? உங்களின் மீது எங்களுக்கு பெருத்த மரியாதை உண்டு. சொல்லுங்கள் முல்லா ஏன் அழுகிறீர்கள் என்று கும்பலாக கேட்டார்கள். 

அதற்கு முல்லாவும் எனக்கு இனிமேல் சொத்து எழுதி வைத்து விட்டு சாகும் அளவிற்கு பணக்கார உறவுக்காரர்கள் யாருமே இல்லையே என்று நினைத்து அழுகிறேன் என்று கூறினார்.


அங்கு நின்று கொண்டிருந்த ஒட்டு மத்த கூட்டமும் முல்லாவைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து போய் நின்றனர். பாதிப்பேருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லோரும் வாய்விட்டு சிரித்தனர் ஊரிலுள்ள எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற முல்லாவின் ஆசையும் நிறைவேறியது. எல்லோரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சி படுத்துவதால் தான் முல்லாவை அனைவருக்கும் பிடிக்கிறது.

கதை சொல்லும் நீதி;

பிறரின் மகிழ்ச்சிக்காகவும் அவர்களின் சிரிப்பிற்காகவும் தன்னை கஷ்டப்படுத்திக் கொள்ளும்  கலைஞனை அனைவருக்கும் பிடிக்கும்.பிறரை சிரிக்க வைப்பதற்காக தன்னுடைய நேரத்தை செலவிடும் மனிதனின் மனதில் இறைவன் வாழ்கிறார்.குட்டி சிரிப்பு கதைகளை படித்தும் பகிர்ந்தும் மகிழுங்கள் (சிரிப்பு கதைகள்)

மேலும் இதுபோன்ற கதைகளை படிக்க



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top