ஹோலி பண்டிகை வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

ஹோலி பண்டிகை வாழ்த்து கவிதைகள்

ஹோலிய எல்லாரும் 

ஜாலியா கொண்டாடுங்க...


வண்ணங்களை போல்

வாழ்க்கையும் அழகாகட்டும்

இனிய ஹோலி பண்டிகை

வாழ்த்துக்கள்


வீசும் வண்ணங்கள் போல்

உங்கள் வாழ்க்கை வளமாக

ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்


மின்னிடும் வண்ணங்கள்

போல் உங்கள் எண்ணங்கள்

பளிச்சிட ஹோலி பண்டிகை

நல்வாழ்த்துக்கள்


வண்ணங்களின் திருவிழாவை

நல்ல எண்ணங்களோடு

கொண்டாடுவோம்


காலத்தின் மாற்றத்தை

கலர்ஃபுல்லாக கொண்டாடுவோம்

வாருங்கள்


கோடைக்கு வழிவிட்டு

கொட்டித் தீர்த்த பனிக்காலம்

ஒதுங்கி செல்வதை பல 

வண்ணங்களோடு கொண்டாடும்

பண்டிகை இந்த ஹோலி...

ஹோலி வாழ்த்துக்கள்


Wishes quotes for holi festival in tamil


காலத்தின் மாற்றத்தை 

பண்டிகைகளாக கொண்டாடும்

கற்றோர் வாழும் கண்ணியமிக்க

சமுதாயம்... ஹோலி பண்டிகை

நல்வாழ்த்துகள்


பிரகல்லாதனை தீயிட்டு

அழிக்க திட்டம் தீட்டிய

அரக்கி ஹோலிகா தீயில் 

அழிந்ததை வண்ணங்களோடு

வசந்த காலமாய் கொண்டாடும்

பண்டிகை ஹோலி; ஹோலி பண்டிகை

நல்வாழ்த்துகள்


நீ தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள்

கொண்டு உன் எண்ணங்கள்

அறியலாம்...ஹோலி வாழ்த்துக்கள்


வண்ணங்கள் எப்பொழுதும்

வாழ்க்கையை அழகாக்கும்


கருப்பு வெள்ளை என்ற

மனிதனின் வாழ்க்கையை

சிகப்பு மஞ்சள் பச்சை என்ற

ஏனைய கலர்கள் சூழ்ந்து 

கொள்கின்றனர்.


தூவும் வண்ணப்பொடிகளுடன்

துக்கமும் சோகமும் பறந்து

போகட்டும்


சிதறும் வண்ணங்களை போல்

வாழ்க்கையின் சிக்கல்களும் 

சிதறி விட ஹோலி வாழ்த்துக்கள்


சூரிய ஒளியில் ஒளிந்திருக்கும்

வண்ணக் கூட்டம் போல்

உள்ளம் எனும் ஒரு குழியில்

மறைந்திருக்கும் மகிழ்ச்சியை

வண்ணங்களாய் வானில்

பறக்க விடுங்கள்


வண்ணக் கனவுகள்

அனைத்தும் வாசல் வர

வண்ணங்கள் கொண்டு

வாழ்த்திடுவோம் இனிய

ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்


மகிழ்ச்சி எனும் எண்ணத்தை

வண்ணங்கள் பூசி

பகிர்ந்திடுவோம்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top