கிருத்திகை மற்றும் சஷ்டி வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

கிருத்திகை மற்றும் சஷ்டி வாழ்த்து கவிதைகள்:

கிருத்திகை மற்றும் சஷ்டி வாழ்த்து கவிதைகள்

கார்த்திகை மைந்தனே 
இந்த கிருத்திகையில் 
எல்லோரும் எல்லா
வளமும் பெற்று நல்வாழ்வு
வாழ அருள் தாருங்கள்


யாருமில்லை என்று
வருந்திய போதெல்லாம்
ஆறுமுகன் நானிருக்கிறேன்
என்று உணர்த்தும் முருகா!
நீயே துணை


சஞ்சலங்களை தீர்க்கும்
சரவணா!
வினைகளை தீர்க்கும் 
வேலவா!
குறைகளை களையும்
குகனே!
கருணையின் வடிவே
கந்தனே!
அனைத்தையும் தரும்
ஆறுமுகமே!
உன் அருள் எனும்
அன்பிருந்தால் அகிலத்தில்
எனைப் போல் பணக்காரன்
யாருமில்லை.


ஆதி சிவன் ஈன்றவனே
ஆனைமுகனுக்கு இளையோனே
பார்வதியின் புத்திரனே...
பழந்தமிழனுக்கு பாட்டனே
முருகனே முதற்கடவுளே...
ரட்சிப்பாய் எம்மை


உன் வேலும் மயிலும்
என் வாழ்க்கைக்கு எப்பொழுதும்
துணையாக அமையட்டும் முருகா


உன் துணை இருந்தால்
எந்த வினையும் என்னை
நெருங்காது முருகா...


உன் கருணையால்
என் கவலைகளை 
தீர்த்து விடு கந்தா!


உன் அருளால்
என் வாழ்வின் இருள்
நீங்கட்டும் முருகா!


கிருத்திகையில் விரதம்
இருந்தால் கார்த்திகை
மைந்தனின் கருணை 
கிடைக்கும்...


வேலவா...
என் வினைகள்
அனைத்தையும் 
விலக்க வா வா..


சஷ்டியை காக்கி
சிருஷ்டி நீயப்பா...


இந்த சிருஷ்டி ஆளும்
சிவபுதல்வனே...
என் சிரமம் நீக்க
வா வா...


உன் கடலெனும்
கருணையால்
என் குறைகளை
நீக்குவாய் குகனே...


சஷ்டியில் விரதம்
இருந்தால் விரையம்
நீக்குவான் சரவணன்...


கையில் வேலோடு
நீ வந்தால் கந்தா!
நெஞ்சில் உள்ள
குறையெல்லாம்
நீங்கிவிடும் நிறைவா!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top