திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றிய முழு விவரங்கள்

Vizhimaa
0

கி.மு 31 ஒன்றாம் நூற்றாண்டில் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். திருவள்ளுவரின் பெற்றோர் பெயர் ஆதிபகவன் அவருடைய மனைவியின் பெயர் வாசுகி இவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

சமண சமயத்தைச் சார்ந்தவராக திருவள்ளுவர் இருக்கலாம் என்பர்.


Thiruvalluvar

திருவள்ளுவரின் மற்ற வேறுபெயர்கள்:

 • நாயனார்
 • முதற்பாவலர்
 • பொய்யில் புலவர்
 • தேவர்
 • பெருநாவலர்
 • செந்நாப்போதர்
 • தெய்வப் புலவர்
 • மாதானுபங்கி
 • நான்முகனார்

திருவள்ளுவரின் சிறப்புகள் சிலவற்றை பார்க்கலாம்:


 • சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோவில் உள்ளது.
 • திருவள்ளுவர் ஆண்டு என்று கிமு 31 அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
 • தை மாதம் இரண்டாவது நாளை திருவள்ளுவர் தினமாக தமிழக அரசு கொண்டாடுகிறது.
 • சிரங்க அறநூல் ஆக முதல் இரண்டு பால்களிலும்(அறத்துப்பால், பொருட்பால்)திருக்குறள் காட்சியளிக்கும்
 • 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி உள்ளது தமிழகத்திலேயே மிக உயர்ந்த சிலைகளில் ஒன்று இந்த திருவள்ளுவர் சிலை.
 • நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் உள்ளது.

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:


 • தற்பொழுது இவ்வருடம் 2022 எனில் அதனுடன் முப்பத்தி ஒரு (கி.மு.31) ஆண்டுகளை கூட்டிக் கொண்டால் வரும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.
 • 2022+31=2053 திருவள்ளுவர் ஆண்டு.

திருக்குறள் அமைந்துள்ள விதம் மற்றும் திருக்குறளில் அமைப்பு:


 • திருக்குறள் ஒரு அறநூல் அல்லது நீதி நூல் என்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்றும் அழைக்கப்படுகிறது.
 • திருக்குறள் 133 அதிகாரங்கள் ஆக பிரித்து ஒவ்வொரு அதிகாரத்திலும் தலா பத்து பாடல்களும் மொத்தமாக 1330 பாடல்களையும் கொண்டது இதில் 9 இயல்களும் அடக்கம்.

அறத்துப்பால்:

அதிகாரங்கள்- 38
இயல்கள்-  பாயிரவியல்-4,இல்லறவியல்-20,துறவியல்-13,ஊழியல்-1

பொருட்பால்:

அதிகாரங்கள்-70
இயல்கள்-அரசியல்-25,அங்கவியல்-32,ஒழிபியல்-13

காமத்துப்பால்:

அதிகாரங்கள்-25
இயல்கள்-களவியல்-7,கற்பியல்-18

குறள் என்றால் என்ன?


குறுகிய அடிகளை உடையது குரல் எனப்படும் திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனதால், இதை குறள் என்று அழைக்கிறோம். திருக்குறள் என்பதில குறள் என்பது இரண்டடி வெண்பாவை குறிக்கும்.

திருக்குறளில் திரு என்பது ஒரு அடைமொழி ஆகும் இதை அடையடுத்த கருவியாகு பெயர் என்று அழைப்பர்.

திருக்குறளின் சிறப்பு பெயர்கள்:


 • பொதுமறை
 • தமிழ்மறை
 • பொருநரை
 • உலகப் பொதுமறை
 • உத்திரவேதம்
 • முப்பால்
 • திருவள்ளுவ பயன்
 • பொய்யாமொழி
 • இயற்கை வாழ்வில்லம்
 • தெய்வநூல்
 • வாயுறை வாழ்த்து
 • முதுமொழி

நாலும் இரண்டும் என்று அழைக்கப்படும் நூல்கள்:


நாலடியார்,திருக்குறள்

தமிழுக்கு கதி என்று அழைக்கப்படும் நூல்கள்:

கம்பராமாயணம், திருக்குறள்

தமிழ் மாதின் இனிய உயிர் நிலை என்று அனைவராலும் பாராட்டப் பெறும் நூல் திருக்குறள்.

திருக்குறளில் பத்து அதிகாரப் உடைமை என்ற சொல்லில் முடிவடைகின்றன அவை:


 • அன்புடைமை
 • அடக்கமுடைமை
 • ஒழுக்கமுடைமை
 • பொறையுடைமை
 • அருளுடைமை
 • அறிவுடைமை
 • ஊக்கம் உடைமை
 • ஆள்வினையுடைமை
 • பண்புடைமை
 • நாணுடைமை
திருக்குறள் அ-கரத்தில் ஆரம்பிக்கிறது ன-கரத்தில் முடிகிறது.

திருக்குறளில் இடம் பெறாத தமிழ்ச் சொற்கள் யாவை?


தமிழ், கடவுள்

திருக்குறள் எனும் மொத்த நூலிலும் இருமுறை வரும் அதிகார பெயர்:

குறிப்புடைமை.

12000 சொற்களை கொண்டு பாடப்பட்ட நூல் திருக்குறள்.

இதில் 50 வட சொற்கள் விரவி வந்துள்ளதாக அறியப்படுகிறது.

சைவ சமண வைணவ பக்தர் என அனைவரும் இது எங்கள் ஊர் என்று உரிமை கொண்டாடும் பொதுமை நூல் திருக்குறளே.

திருக்குறள் என்பது ஒரு இலக்கிய நூல் தான் என்றாலும் அது கவிதையா அல்லது நீதி நூல என்று ஒரு ஐயப்பாடும் நிலவி வருகின்றது.

திருக்குறள் பெற்றுள்ள சிறப்புகள்:


 • மனிதத் தன்மையுடன் மனிதன் வாழ சரியான நெறிமுறைகளையும் அறிவுரைகளையும் வழங்கிய நூல் திருக்குறள்
 • விக்டோரியா மகாராணி தினமும் காலையில் கண் விழித்தவுடன் முதலில் படிக்கும் நூல் திருக்குறள்.
 • ஏழு என்ற எண்ணிற்கும் திருக்குறளுக்கும் பெரிதளவில் தொடர்பு உள்ளது.
 • ஏழு சீர்களால் ஆன வெண்பாக்களைக் கொண்டது திருக்குறள்
 • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் 133 அதன் கூட்டுத்தொகை ஏழு
 • திருக்குறளில் உள்ள குறள்கள் மொத்தம் 1330 அதன் கூட்டுத் தொகையும் 7.
 • உருசிய நாட்டிலுள்ள கிரம்ளின் எனும் அணு துளைக்காத மாளிகையில் உள்ள சுரங்கத்தில் ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது.
 • விவிலியத் உடன் இங்கிலாந்து நாட்டில் காட்சி சாலைகளில் திருக்குறளும் வைக்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் மொழிபெயர்ப்புகளும் அதன் ஆசிரியர்களும்:


 • ஆங்கிலம்-ஜி.யூ.போப்,வ.வே.சு.ஐயர், இராஜாஜி
 • இலத்தீன்-வீரமாமுனிவர்
 • ஜெர்மன்-கார்ல் திராவிடன்
 • பிரெஞ்சு-ஏரியல்
 • ரஷ்யா-யூரிய்கில்ஸோவ்
 • பீஜி மொழி-எஸ்.எல்.பெர்வி
 • சிங்களம்-மிசிகாமி அம்மையார்.
 • ஹிந்தி-பி.டி.ஜைன்,டாக்டர் சங்ரராஜி நாயுடு.
 • வடமொழி-அப்பா தீட்சிதர்,கோவிந்தராஜ் ஜைனம் சாஸ்திரி
 • தெலுங்கில்-வைத்திய நாத் நாதா
 • மலையாளம்-பககார் கோவிந்த பிள்ளை

திருக்குறள் பற்றிய மேற்கோள்கள்:


 • "எப்பாவலரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி"-கல்லாடனார்
 • "தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா நான்கினையும்-ஏனோர்க்கு ஊழியன் உரைத்தார்"-நக்கீரனார்
 • "வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குறைத்துக்கொண்டு நீதி"-திரு.சுந்தரம் பிள்ளை
 • "மூன்று மற்றவருக்கும் சென்னியில் அணியதக்க மாலை"-சீத்தலைச் சாத்தனார்.
 • "அதற்கு எளிதாய் உணர்வதற்கு அரிதாகி ,வேதப் பொருளாய் மிக விளக்கி"-மாங்குடி
 • "உலக இலக்கியங்களில் திருக்குறள் போல் சிறந்த அறம் உரைக்கும் நூல் வேறு இல்லை"-ஆல்பர்ட் சுவிட்சர்
 • "வேதப் பொருளை விரால் விதித்தும்"-செங்கண்ணணார்.
 • "ஆரியம் வேதம் உடைத்து,தமிழ் திருவள்ளுவனார் ஓது குறட்பா உடைத்து"-வண்ணகஞ்சாத்தனார்.
 • "சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்"-கல்லாடர்(திருவள்ளுவரை கூறியது)
 • "இந்நூலை முற்றிலும் ஓதிய பின் வேறு நூல் பயிற்சி வேண்டா,மன்னு தமிழ்ப் புலவராய் வீற்றிருக்கலாம்"-நத்தத்தனார்

திருக்குறளின் சிறப்பை எடுத்துக் கூறும் நூல்கள்:


 • திருவள்ளுவமாலை
 • ஆல்பர்ட் சுவைடசர் எழுதிய இந்திய வளர்ச்சி சிந்தனை என்னும் நூலில் திருக்குறளை ஆராய்ந்து அதன் சிறப்புகளை விளக்கி உள்ளார்.
 • சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா போன்றவையும் குறளின் சிறப்பை உணர்த்துகின்றன.

திருக்குறளின் வகை:


திருக்குறள் மணிமேகலை சிலப்பதிகாரம் என்ற சங்க நூல்களுக்கு முற்பட்டது என்பதும் தொல்காப்பியத்திற்கு பிற்பட்டது என்பதும் தெரியவருகிறது.

திருவள்ளுவர் பற்றிய மேற்கோள்கள்:


"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் புகழ்ந்துள்ளார்.

"வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாரதிதாசன்" பாடியுள்ளார்.

திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிருக்காவிட்டால் தமிழ் மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாகவே உலகத்தார்க்கு தெரிந்து இருக்காது என்று கி.ஆ.பெ.விஸ்வநாதன்.

அணுவைப் துளைத்துஏழ் கடலை புகட்டி
குறுகத் தனித்த குறள்-ஔவையார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top