பல்லி கத்தும் பலன்கள்

Vizhimaa
0

பல்லி கத்தும் பலன்கள்

பல்லி,பாம்பு போன்ற சில ஊரும் விலங்குகள் மட்டும் நம் சாஸ்த்ரிர மற்றும் பஞ்சாங்க நிகழ்வுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஏனென்றால் இவை பல கிரகங்களின் நிலையை மனிதர்களுக்கு உணர்த்தும் வல்லமை பெற்றவையாக திகழ்கின்றன.

நன்றாக கூர்ந்து கவனித்து பார்த்தவர்களுக்கு இது நன்றாக புரியும்.இந்த பதிவில் பல்லியின் பலன்கள் என்னவெல்லாம் என்பதை பார்ப்போம்.

பல்லி கத்தும் பலன்கள்

முன்பெல்லாம் நம் வீடுகளிலும் கோவில்களிலும் சகுனம் பார்க்கும் பழக்கம் அதிகமாக இருந்து வந்தது.இப்பொழுதும் இந்த பழக்கம் மக்களிடையே காணப்பட்டு வருகிறது.வீட்டில் எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும் முதலில் சகுணம் பார்ப்பவர்களே அதிகம்.சில ஊர்களில் கோவில் விழாக்களுக்கு கூட சாமி பூ கொடுக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள்.அதுவும் ஒரு வகை சகுணம் பார்க்கும் நிகழ்வு தான்.

சகுணம் பார்க்க பல வழிகள் உள்ளன.அதில் ஒரு வழி தான் இந்த சயன பல்லி கத்துவதும். 

பொதுவாகவே பல்லிகள் கத்துவதில் பல அர்த்தங்கள் உள்ளன.ஆனால் அதை நாம் கவனிக்க வேண்டும்.

சிலர் பல்லி கத்துவத்தில் மட்டும் அல்ல,பல்லி நகர்வதிலும் கூட குறி கேட்பார்கள்.

பல்லி கத்தினால் என்ன பலன்

பொதுவாக நீங்கள் ஏதோ ஒன்றை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது சயன பல்லியானது உங்கள் இடது புறத்தில் இருந்தோ தலை நேராக இருந்தோ கத்தினால் நீங்கள் சொல்லும் விஷயம் அப்படியே நடக்கும்.மாறாக உங்கள் வலது புறத்திலோ மற்ற திசைகளில் இருந்து பல்லி கத்தினால் அது பளிக்காது.

மேலும் சிலர் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு சயன பல்லியிடம் குறி கேட்பார்கள்.உதாரணமாக சயன பல்லியானது சுவரின் கிழக்கு திசையில் இருந்தால் மனதில் தன்னுடைய எண்ணத்தை நினைத்துக் கொண்டு அது நல்லபடியாக நடக்கும் என்றால் கிழக்கிலிருந்து மேற்காக லோ அல்லது கிழக்கிலிருந்து தெற்காகவோ நகர்ந்து வந்து கத்தும் படி வேண்டுவார்கள்.

சயன பல்லி அந்த நபர் விரும்பிய படி மேற்கு திசை நோக்கியோ அல்லது தெற்கு திசை நோக்கியோ நகர்ந்து வந்து கத்தினால் தங்களுடைய எண்ணம் நல்லபடியாக ஈடேறும் என்று நம்புவார்கள்.இதுவே சயன பல்லியிடம் குறி கேட்கும் முறை.

இந்த குறி கேட்கும் முறைக்கு அதிகாலை 3 ல் இருந்து 5 வரை பொருத்தமான நேரமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top