ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

முதல் முதலில் நமக்கு அனா ஆவனா சொல்லிக் கொடுத்த ஆசிரியரை எல்லோருக்கும் நினைவிருக்கும்.அப்படிப்பட்ட ஆசிரியர்களை மறப்பதும் சிரமமே.ஆசிரியர்கள் என்பவர்கள் தற்பொழுது பள்ளியில் இன்னும் ஒரு பெற்றோர்களாக மாறி கொண்டிருக்கின்றனர்.

நம் சமூகத்தில் நிலவும் ஒரு வாசகம் இப்பொழுதும் மக்களிடையே மிகவும்

பிரபலமாக உள்ளது.மக்கள் அதனை வாழ்க்கையிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படியென்ன வாசகம் அதுதான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" இறைவனானவன் அம்மா அப்பா ஒரு நல்ல ஆசிரியருக்கு அடுத்தபடியாகத் தான் வணங்கப்பட வேண்டியவன் என்பதே இதன்‌ பொருள்.

அம்மா அப்பா தான் உலகம் என்று எப்பொழுதோ விநாயகப் பெருமான் ஞானப்பழத்தை பெரும் பொழுது நமக்கு சொல்லி சென்று விட்டார்.ஆனால் ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் தெய்வத்திற்கும் மேலானவர் என்பதையே இந்த பழமொழி கூறுகிறது.

மனிதர்கள் வாழ்வில் ஓர் உயர்ந்த இடத்தை பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பரிசளிக்கவே இந்த கவிதைகள் பதிவிடப்படுகிறது.

Teachers day wishes quotes in Tamil

ஆசிரியர்கள் தின கவிதைகள்

ஆசிரியர் பணி அறப்பணி 
மட்டும் அல்ல அறிவூட்டும் 
பணியும் கூட அத்தகைய அறிவுப்பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்


நம் தலைமுறைகளை
கரையேற்றும் பொறுப்பு
ஆசிரியர்கள் எனும்
கலங்கரை விளங்கங்களிடம்
தான் இருக்கிறது...


உன்னை முன்னேற்ற
உழைத்து களைத்த
உனக்கு சம்மந்தம்
இல்லாத ஒரு நபர்
-ஆசிரியர்
 
Teachers day wishes quotes in Tamil

எண்ணையும் எழுத்தையும் 
எனக்குள் புகுத்திய என் 
ஆசிரியர்களுக்கு இனிய‌ 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...ஆசிரியரின் உடையை
தொட்டுப் பார்த்ததில்
இருந்த மகிழ்ச்சி
அதே போல் நான்
உடை அணியும் போது
கிடைக்கவில்லை...
 
ஒவ்வொரு மனிதனுக்கும் 
கல்வி எனும் கண்ணின் வழியே வாழ்க்கை கதவுகளை 
திறந்து வைப்பது ஆசிரியர்களே 
அத்தகு ஆசிரியர் 
பெருமக்களுக்கு இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...

 
Teachers day wishes quotes in Tamil


மனதின் ஆழத்தில் 
இருந்து நாம் அனைவரும் 
நன்றி‌ சொல்ல வேண்டிய‌ 
நபர்கள் நம் ஆசிரியர்களே 
இனிய ஆசிரியர்கள் 
தின வாழ்த்துகள்...
 

நம்மை பெற்றவர்களுக்கு 
பிறகு நம் வளர்ச்சியை பார்த்து பொறாமை படாத ஒரே 
நபர் ஆசிரியர் மட்டுமே... இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்
 

அம்மாவிடம் இருந்து 
அன்பை கற்றுக் கொள்ளலாம் 
ஆசானிடம் இருந்து தான் 
அறிவை பெற முடியும் இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...
 
Teachers day wishes quotes in Tamil

வகுப்பறை பாடம் வாழ்க்கை 
முழுக்க உதவும்; வாழ்க்கை 
பாடத்தை சொல்லிக் கொடுத்த வாத்தியார்களுக்கு இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...
 

ஒரு நல்ல ஆசிரியர் ஒரு 
நூலகத்திற்கு சமமானவர்...
இனிய ஆசிரியர்கள் 
தின வாழ்த்துகள்...
 

அடுத்த தலைமுறையை 
ஆளாக்கி பார்க்கும் இன்றைய தலைமுறையின் கதாநாயகர்களே ஆசிரியர்கள்...இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்
 
அடுத்த தலைமுறையை 
ஆளாக்கும் பெரும் பொறுப்பையும் பெருமையையும் பெறுவது ஆசிரியர்களே...இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்
 
Teachers day wishes quotes in Tamil

ஒரு நல்ல ஆசிரியர் தான் மாணவர்களுக்கு வாழ்க்கை 
மீது நம்பிக்கையை ஏற்படுத்த 
முடியும், கற்பனையை தூண்டி, 
படிப்பின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்த‌முடியும்.இத்தகைய 
பெரும் பொறுப்பை சுமக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் 
தின வாழ்த்துகள்...
 

ஒரு நல்ல ஆசிரியரால் 
மட்டுமே மாணவர்களுள் 
உள்ள‌ சிறந்த நல்ல 
பண்புகளை வெளிப்படுத்த 
முடியும்.
 

ஒரு ஆசிரியரின் 
உதவியில்லாமல் 
மில்லியனில் ஒருவர் 
மட்டுமே அறிவு எனும்‌ 
ஒளியை பெறுகிறார்.
 
Teachers day wishes quotes in Tamil

வாழ்க்கை முழுவதும் 
கற்றுக் கொண்டே இருப்பவரே 
சிறந்த ஆசிரியர்... இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...
 

இவன் என் பிள்ளை என்று 
பெற்றோர்கள் 
பெருமைப்படுவதை
போல இவன் என் 
மாணவன் என்று 
பெருமைப்படுவது 
ஆசிரியர்கள் மட்டுமே...
 
பள்ளிகளில் அந்த காலத்தில் மாணவர்களாய் இருப்பது 
கடினமாக இருந்தது இந்த 
காலத்தில் ஆசிரியர்களாய் 
இருப்பதே கடினமானது.இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்

Teachers day wishes quotes in Tamil

ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்த 
எந்த மாணவனும் வாழ்க்கையில் தோற்றுப்போவதில்லை...
இனிய ஆசிரியர் 
தின வாழ்த்துகள்...
 

ஒழுக்கத்தை கற்றுத்தரும் 
ஆசிரியர் பெற்றவர்களுக்கு சமமானவர்...அத்தகைய ஆசிரியர்களுக்கு இனிய
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்
 

ஆசிரியர்கள் இல்லாத 
சமூகம் ஒரு மிருகசாலையை 
விட கொடுரமானது...
மாணவனை மனிதனாய் 
மாற்றும் ஆசிரியர்களுக்கு 
இனிய ஆசிரியர்கள் 
தின வாழ்த்துகள்...
 

ஒரு சமூகத்தின் தவிர்க்க 
முடியாத தூண்கள் ஆசிரியர்கள்,
அத்தகு ஆசிரியர்களுக்கு 
இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துகள்...
 

நாம் பெற்றோர்களுடன் 
வாழும் நேரத்தை விட 
ஆசிரியர்களுடன் செலவிடும் 
நேரமே அதிகமானது....
 

பெற்றவர்கள் பிள்ளைகளை நம்பிக்கையுடன் வெளியே 
அனுப்பும் ஒரே இடம் பள்ளிக்கூடம்;அதுபோல் 
அதிகமாக நம்பிக்கை 
வைக்கும் ஒரு வெளி ஆள் 
ஆசிரியர்கள், அத்தகைய ஆசிரியர்களுக்கு இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...
 
Teachers day wishes quotes in Tamil


Teachers day wishes quotes in Tamil

ஏர் பிடித்த பெற்றவர்களின் 
பிள்ளைகள் எழுத்தாணி பிடிக்க காரணமாக இருக்கும் 
ஆசிரியர்களுக்கு இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...
 

இந்த உலகில் ஒரு 
மனிதன் உயிர் பெறுவது எளிதானது;ஆனால் 
அந்த உயிர் எண்ணையும்
எழுத்தையும் தன் வாழ்க்கையில் பெறுவது அரிதானது; 
அத்தகைய புனிதமான 
சேவை செய்யும் 
ஆசிரியர்களுக்கு இனிய 
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...
 

எழுத்தறிவித்த ஆசான்களுக்கு 
என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்...


அன்புள்ள‌ ஆசிரியர்களுக்கு
இனிய‌‌ ஆசிரியர்கள் தின
வாழ்த்துக்கள்


பண்பையும்‌ பணிவையும்
படிய வைத்த என்
பாசமுள்ள ஆசிரியர்களுக்கு
என் நன்றிகள்


எத்தனை தூரம்
நான் வளர்ந்தாலும்
என்னை வளர்ந்துவிட்டது
என் ஆசிரியர்கள் என்பதை
நான் மறவேன்


அப்பா அம்மா திட்றது
மட்டும் இல்ல..
ஆசிரியர்கள் திட்டுவது 
கூட நாம உருப்படுவதுக்கு
தான்என்னை மனிதனாக்கிய
மாண்புமிகு ஆசிரியர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்


எண்ணாலும் எழுத்தாளும் 
கருத்தாலும் கடமையாலும்
என்னை உருவாக்கிய
ஆசிரியர் பெருமக்களுக்கு
என் நன்றிகள்


மலர் தூவி மரியாதை
செய்ய மனதார 
நினைக்கிறேன்...
என் மரியாதைக்குரிய
ஆசிரியர்களுக்கு


என் தவறுகளை
சுட்டிக்காட்டி
என்னை சுடர் விளக்காய்
ஒளிர விட்ட என் 
ஆசிரியர்களுக்கு நன்றிகள்


அகிலத்தின் 
ஆகச் சிறந்த 
சிறப்பான பணி
ஆசிரியர் பணி...


ஒழுக்கத்தின் பால்
மாணவர்களை 
ஆற்றுப்படுத்துவது
ஆசிரியரின் கடமை


மாணவனின் நலனில்
மகிழ்ச்சி கானும்
ஒரு கூட்டம்
அது ஆசிரியர்
கூட்டம்...


தேர்வு எழுதும்
மாணவனுக்கு
எவ்வளவு பதட்டம்
இருக்குமோ அதே
அளவு பதட்டம்
சொல்லிக் கொடுத்த
ஆசிரியருக்கும்
இருக்கும்....


கண்டிப்பான
ஆசிரியரையே
மாணவர்கள்
வாழ்நாள் முழுவதும்
நினைவில்
வைத்திருக்கிறார்கள்...


இன்றைய சமூகத்தின்
மிகப்பெரிய தேவை
நல்ல ஆசிரியர்கள்


எண்ணும் எழுத்தும்
கண்ணென தகும்
என்பார்கள்
எண்ணையும்
எழுத்தையும் 
கற்பித்தவர்கள்
அந்த கண்களை
திறந்தவர் ஆகிறார்கள்கல்வி கண்
திறக்கும் ஆசிரியர்கள்
கன்னியத்துடன்
நடத்தப்பட 
வேண்டியவர்கள்...


அறிவு எனும்
ஒளியை
அகத்தில் ஏற்றும்
ஆசிரியர் பெருமக்களுக்கு
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்


காலம் கடந்தும்
பள்ளி நினைவுகள்
மறக்காமல்
இருப்பதற்கு காரணம்
முட்டி போட வைத்த
ஆசிரியர்களே...


அடுத்த தலைமுறையின்
அஸ்திவாரம்
ஆசிரியர்களின் கைகளில்
ஆடிக் கொண்டிக்கிறது.


ஒவ்வொரு நாளும்
தம்மை மெருகேற்றிக்
கொள்ள வேண்டிய
பணி ஆசிரியர் பணி


நல்ல ஆசிரியர்களே 
நாளைய சமூகத்தின்
ஆணிவேர்மாணவனை மனிதனாக்கும்
மாபெரும் செயலையும்
மனிதனை நல்ல 
குடிமகனாக்கும் பொறுப்பும்
ஆசிரியர்களுடையது...


எவ்வளவு சிந்தித்தாலும்
ஆசிரியர் பணி
ஆகச் சிறந்த
கஷ்டமான அதே
சமயம் தவிர்க்க 
முடியாத ஒரு பணி


இந்திய தேசத்தின்
வளர்ச்சிக்கும்
வாழ்வுக்கும்
இன்றியமையாத
தூண்கள் ஆசிரியர்கள்


தோப்புக்கரணம்
போட சொல்லிக்
கொடுத்த ஆசிரியருக்கு
இனிய ஆசிரியர்கள் தின 
நல்வாழ்த்துகள்


என் நினைவில் இருக்கும்
பள்ளிப் பருவ நினைவுகளில்
பாதிக்கு மேல் இருப்பது
ஆசிரியர்களின் நினைவுகள்
தான்...


ஆசிரியர்களே
படைப்பாளிகளை
கண்டு கொள்ளும்
முதல் பார்வையாளர்கள்


ஒவ்வொரு ஆசிரியரும்
ஒரு பெற்றோர் என்பதை
உணர்ந்தே 
செயல்படுகிறார்கள்...


எவ்வளவு உழைத்து
முன்னேறினாலும்
நம் வெற்றியில்
பாதி ஆசிரியர்களுடையது...


ஒரு நல்ல
மாணவன் என்பவன்
அவன் ஆசிரியரை
மதிப்பவனே...


பழைய மாணவர்கள்
வழியில் எங்கோ 
பார்த்து நலம்
விசாரித்தால் 
ஆசிரியர்களின் இதயம்
நிறையும் மகிழ்ச்சியால்...


எத்தனை தூரம்
உயர்ந்தாலும்
ஆசிரியரை மறக்காத
மாணவனே நல்ல
மனிதன்..


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top