Friendship Quotes in Tamil - நட்பு கவிதை
கர்ணனை போன்ற
நண்பர்களை சம்பாதியுங்கள்
ஆண்டவனே எதிர்த்தாலும்
உங்களை விட்டு
செல்லமாட்டான்...
ஜாதியும் மதமும்
செத்துபோகும்
இடமாக நட்பு
ஒன்றே திகழ்கிறது....
என் அழுகையின்
பின்னால் ஆயிரம்
பேர் இருக்கலாம்
ஆனால் என் சிரிப்பின்
பின்னால் நிச்சயம்
என் நண்பனே இருப்பான்...
எதையோ எதிர்பார்த்து பழகும் உறவுகளுக்கிடையில் எதையுமே எதிர்பார்க்காமல் எப்பொழுதும் துணை நிற்கும் நட்பு கிடைத்தால் அவனை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாருமில்லை.
Natpu Kavithai in Tamil - நட்பு கவிதை
நம்ம கூடவே வருவாங்கன்னு
நினச்சி பழகும் உறவுகளை விட
நமக்கு ஒன்னுன்னா ஓடி வரும்
நண்பர் கூட்டம் உயர்ந்தது தான்
இந்த உலகில்
நட்பு என்றபந்தம் இங்குஇல்லையென்றால்தாய் தந்தைஇருந்தும் இங்குபலர் அனாதையே
அம்மாவிற்கு பிறகு என்னை
பற்றி எல்லாம் தெரிந்தவன்
என் நண்பன் தான்...
சில நேரங்களில் அம்மாவிற்கும்
தெரியாத ரகசியங்கள்
தெரிந்தவனும் என்
நண்பன் தான்
ஒரு மனிதனின்
வாழ்க்கையில்
தாங்கி பிடிக்க
நண்பன் என்ற உறவு
இல்லையென்றால்
இரும்பு மனிதனுக்கும்
இதயம் நொருங்கி தான்
போகும்....
எட்டி மிதிக்கும்உறவுகளுக்கிடையேஎதையும் எதிர்பார்க்காதநட்பு அதிசயமே
வரையறைகள் இல்லாத
உறவாக இருந்தாலும்
வரம்பு மீறாத உறவாக
நட்பு எப்பொழுதுமே
சிறந்து நிற்கும்....
Tamil Quotes About Friendship - நட்பு கவிதை
நண்பனின் தங்கை
எனக்கும் தங்கை தான்
என்ற எண்ணத்தில்
உயர்ந்து நிற்கிறான்
நண்பன்
இளமை காலம்
இனிமையாக
கடந்து செல்ல
நட்பு வட்டம்
நம்மைச் சுற்றி
இருந்தால் போதும்
நட்பு என்றவார்த்தை இந்தஉலகில் உலவும்வரை இங்கு யாரும்அனாதை இல்லை
கஷ்டம் வந்தாகடவுள் கிட்டபோறவங்கள விடநண்பர்கள் கிட்டபோறவங்க தான்அதிகம்
மகிழ்ச்சி என்றவார்த்தையின்முகவரி நட்பு தான்
நண்பனுக்கு ஒரு கவிதை:
வாழ்க்கையின் ஏதோ ஒரு
நிலையில் நட்பு தான்
எல்லாத்தையும் விட
மேலான ஒரு உறவு
என்று மனிதனுக்கு
நிச்சயம் தோன்றும்
என்னை யாருமே
புரிந்து கொள்ளவில்லை
என்று புலம்புவர்களுக்கு
நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை
என்பதே நிதர்சனமான உண்மை
எவ்வளவு சண்டை
போட்டாலும் பிரிவும்
முறிவும் வராத ஒரே
உறவு நட்பு
மட்டும் தான்
Friendship Thoughts in Tamil:
ஏழேழு ஜென்மத்திலும்
உன்னை பிரிய மாட்டேன்
என்று உறுதி கூறி
கரம் கோர்க்கும் கணவன்
மனைவி கூட பிரிந்து
போகும் இந்த காலத்திலும்
பிரிவு என்ற சொல்லே
இல்லாத நட்பு அனைத்திலும்
அழகானது தானே... இந்த
அகிலத்தில்.
ஆண்-பெண் என்ற
எந்த பேதமும்
பாராட்டாத உறவு
நட்பு மட்டுமே.....
நட்பு எவ்வளவு
உயர்வானது என்று
நாம் கஷ்டப்படும்
பொழுதுதான் தெரியும்
நட்பு கவிதை - Natpu Kavithai in Tamil
நட்பில்லா வாழ்க்கை
வண்ணங்கள் இல்லாத
வானவில்;வந்தும்
பயனில்லை,அதுபோல்
தான் நட்பில்லாமல்
வாழ்ந்தும் பயனில்லை
இங்கு பல நல்ல
காரியங்களின் பின்னால்
நட்பு என்ற உணர்வு
ஒளிந்திருக்கிறது.
நட்பு என்பது
இறைவன் கொடுக்கும்
வரம் அல்ல;இறைவனுக்கே
கிடைக்காத வரம்
Status ஐயும்
savings ஐயும்
பார்த்து பழகும்
உறவுகளுக்கிடைய
குணத்தையும்
மனதையும் பார்த்து
பழகும் நட்பு சிறந்ததே
Uyir Natpu Kavithai in Tamil - Girls Friendship Quotes in Tamil
வாழ்க்கையின் வேர்களுக்கு
நீண்ட ஆயுளை வழங்குவது
நட்பு எனும் நீருற்று...
வாழ்க்கையின் நீண்ட
பயணத்தில் இளைப்பாற
நண்பனின் நிழல்
நிச்சயம் தேவை....
மலரின் வாசமாய்
மதியின் ஒளியாய்
உடலின் நிழலாய்
ஒட்டியிருப்பது நம்
நட்பு....
எத்தனை வயதானாலும்
மரியாதை மட்டும்
கிடைக்காது
நண்பர்களிடத்தில்
தேவைக்கு பழகும்
தேவையில்லாத உறவுகளை
விட, எதிர்பார்ப்பில்லாமல்
எதார்த்தமாய் பேசும்
நட்பு உயர்வானது...
இலக்கணம் இல்லாத
உறவும், தலைக்கணம்
கொள்ளாத உணர்வும்
நண்பனுடையது....
Best Friendship Quotes in Tamil - நட்பு கவிதை
மாமன் மச்சான்
என்ற வார்த்தையில்
ஒரு நட்பு, மலையளவு
சோகத்தையும் மறக்க
வைக்கிறது...
முகமோ முகவரியோ
முடிவோ இல்லாதது
தான் நட்பு
இந்த உலகில்
மிகவும் வலிமையான
தோள்கள் நண்பனுடையது
நண்பன் வைத்த
பட்டப்பெயர் தான்
நினைவுக்கு வருகிறது
பட்டப்படிப்பு
முடித்த பிறகும்.
நான் சிரித்தால்
என் மகிழ்ச்சியிலும்
நான் அழுதால்
என் கண்ணீரிலும்
எனக்காய் நிற்பவன்
என் நண்பனே....
நட்பு எனும்
முகவரியில் அடையாளம்
செய்துகொள்ளவே
ஆசைகொள்கிறது உள்ளம்.
எங்களுக்குள்
பகிர்ந்து கொள்ளாதது
என்று எதுவும் இல்லை...
நமக்கொன்னு னா
நண்பன் வருவாங்குற
நம்பிக்கை தாங்க
நட்பு...
நாம செய்யுற
தப்ப நம்ம கிட்ட
மட்டும் சொல்லி
புரிய வைக்கிற
நட்பு கிடச்சுட்டா
வாழ்க்கை வரம்
தாங்க...
கடவுளுக்கு கூட
இல்லாத ஒரு உறவு
நட்பு;இதுவே மனித
இனத்தின் சிறப்பு
Uyir Natpu Kavithai in Tamil - உயிர் நட்பு கவிதை
நம்மில் இருக்கும்
நல்லதை மட்டும்
பார்ப்பவன் நண்பன்;
நம்மிடம் இருக்கும்
தீயவற்றை நம்மிடம்
மட்டும் சொல்பவன்
உண்மையான நண்பன்
வாழ்க்கையில்
பெற்றவரின் துணை
வீட்டு வாசலோடு
நின்று விடுகிறது;
நண்பனின் துணை
வெற்றியின் வாசல்
வரை நீளுகிறது...
நட்பில் சுகம் உண்டு;
சுமைகள் இல்லை;
வரம் உண்டு;
வலிகள் இல்லை
நம்பிக்கை என்ற
வார்த்தை பல
நேரங்களில் நண்பன்
என்ற வார்த்தையோடு
ஒத்துப்போவதுண்டு
காலம் கடந்தும்
நம்மை நெகிழ
வைப்பது நண்பர்களுடன்
இருந்த தருணங்களே
இதயங்கள் இணைந்தால்
அது காதலாகிறது
இந்த காதல்
காலம் முழுவதும்
தொடர இருவருள்
இருக்கும் நட்பே
பாலமாகிறது
நட்பென்பது மலரல்ல
வாடுவதற்கு
நட்பென்பது கண்ணாடியல்ல
உடைவதற்கு
நட்பென்பது காதலுமல்ல
பிரிவதற்கு
நட்பென்பது இடைவெளியும்
இடர்பாடுகளும் இல்லாத
நீண்ட பயணம்....
வாழ்க்கையின் நீளமும்
நட்பின் நீளமும் ஒன்று
தான் பயணங்கள் முடிவதில்லை
நட்பின் துணையில்
நகர்கிறது இங்கு
பலரின் வாழ்க்கை
கண்ணை மறைக்கும்
காதலை விட
கற்றுக்கொடுக்கும் நட்பு
உன்னதமானது
நம் வாழ்க்கையில்
பலனை எதிர்பார்க்காமல்
பங்களிப்பது நண்பர்கள்
மட்டுமே...
நட்பின் முன்னால்
ஏனோ அனைத்து
உறவுகளும் தோற்று
போகின்றன...
எவ்வளவு உறவுகள்
இருந்தாலும் எதற்கெடுத்தாலும்
இதயம் நாடுவது
நண்பர்களை மட்டுமே...
எனக்கொன்னு னா
என் நண்பன் வருவான்
என்கிற நம்பிக்கை தாங்க
நட்பு
விவரம் தெரிந்த பின்
பெற்றோருடன் பேசியதை
விட, நண்பர்களுடன்
பேசியது தான் அதிகம்
School Friendship quotes in Tamil
பள்ளியின்
தேனீர் இடைவேளையில்
தேன் முட்டாயும்
தேங்காய் முட்டாயும்
நண்பர்களுடன் வாங்கி
நின்ற தேயாத நியாபகங்கள்...
ஓயாத அலைகளாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
இந்த தள்ளாடும் வயதில்....
பள்ளி பருவ
நினைவுகள் எல்லாம்
நியாபகமாய் இருப்பதற்கு
நண்பர்களின் பங்கே
அதிகம்....
பள்ளி பருவத்தில்
நண்பர்களுடன் வாங்கி
சாப்பிட்ட தேன்முட்டாயை
விட இனித்தது...எங்கள்
மகிழ்ச்சி தான்
நண்பன் கவிதை - நட்பு கவிதை
விட்றா மச்சான்னு
சொன்னா...
மறையாத வலிகள்
என்று எதுவும் இல்லை
நட்பில்....
நான் மகிழ்ச்சியாக
இருந்த நொடிகளை
நினைத்து பார்த்தால்
அதில் பாதி என்
நண்பர்களுடன் இருந்த
நேரமாகத்தான் இருக்கிறது.
நம்பிக்கையை
காப்பாற்றுபவனே
நண்பன்...
மாற்றிக்கொள்ளாதது
என்று எதுவுமில்லை
எங்களிடத்தில், உறவுகளை
தவிர....
காசும் பணமும்
காணாமல் போனது
கடந்தகால நண்பர்களை
பார்க்கும் பொழுது...
நண்பனின் காதலியை
தன் தங்கையாய்
பார்க்கும் நண்பனின்
கண்ணியமே உயர்வானது
உலகில்....
வெளிச்சத்தில் தனியாக
நடப்பதை விட இருட்டில்
நண்பர்களுடன் நடப்பது
சிறந்தது.
இந்த உலகில்
மதிப்பு மிக்க ஒன்று
உண்மையான நட்பே...
எல்லோரும் கை
விட்ட பிறகு
நம்பிக்கை தரும்
உறவு நட்பு
மட்டுமே
நைட் 2 மணிக்கு
Call பண்ணாலும்
அத அட்டண்ட் பண்ணா
அவ நண்பனா மட்டும்
தான் இருக்க முடியும்
வாழ்க்கையில் மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கி
துன்பத்தை பாதியாக்கும்
நண்பர்கள் கிடைத்தால்
அதுவே பெரிய
வரமாகும்...
ஏன் பிறந்தோம்
என்ற கேள்வி
நண்பர்களுடன் இருக்கும்
போது மட்டும் தோன்றுவதே
இல்லை...
இங்கு பலரின்
கண்ணீரை துடைப்பது
நண்பர்களின் கரங்களே.
மச்சான் எனக்காக டா...
என்றால் எதையும்
செய்வான்...அவன்
என் நண்பன்
உயிரை போக்கும்
உறவுகளுக்கிடையே
உயிரைக் கொடுக்கும்
ஒரு உறவு நட்பு
பள்ளி நட்பு
கல்லூரிக்கு செல்லும்
போது பங்காளி
என்றாகி விடுகிறது...
என் திறமையை
எனக்கு அடையாளம்
காட்டிய முதல் நபர்
என் நண்பன்.
நான் அழும்போது
என் கண்ணீரை
துடைத்த கைகள்
யாருடையது என்று
என் கண்ணீருக்கு
தெரியும் என்
நண்பனுடையது என்று...
நண்பனின் தோள்களே
உலகத்தில் வலிமையானவை...
அழுகை வந்தால்
என் கண்ணீரை
தாங்கும் கைகள்
என் நண்பனுடையது...
நண்பர்களுடன்
அரட்டை அடிப்பதை
போல ஆனந்தம்
வேறு எதிலும்
கிடைப்பதில்லை...
The lavish details are solely a small a part of} the ultimate word|the ultimate word} expertise in high restrict gaming. The High Limit Slot Room covers over 13,000 sq. toes with over 200 slot machines. For hitting an enormous 메리트카지노 $10,000 jackpot on a Quick Hit slot machine at Viejas Casino & Resort! This lucky jackpot winner is just one|is solely one} of hundreds and hundreds of winners that call Viejas their favorite place to play. Kick back and spend time with old friends like Double Diamond, Red, White and Blue, and Wild Cherry, all featured right alongside the very newest slot video games.
பதிலளிநீக்கு