Sai Baba Quotes in Tamil - சாய்பாபா பொன்மொழிகள்
சாய் பாபா...என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.மதங்களை தாண்டி மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று கூறிய மகான்களில் ஒருவர் தான் சாய்பாபா.இவருடைய பொன்மொழிகள் மக்களை நிச்சயம் நல்வழிக்கு கூட்டிச் செல்லும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு இடப்படுகிறது.
சாயின் நாமம் சங்கடங்களை தீர்க்கும் என்பதை நம்பும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு இந்த பதிவு உதவும் என்று நம்புகிறோம்.
கூட்டத்தில் நிற்பது எளிது. தனியாக நிற்பதுதான் கடினம். தனித் தன்மையுடன் தனித்து நில்
முடியாது என்ற ஒன்றே கிடையாது... எல்லாம் முடியும் உன்னால்..முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால்...!
உங்களை நினைத்து நீங்களேபெருமிதம் கொள்ளுங்கள். இது உங்கள் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
சில நேரங்களில் நான் கொடுக்கும் விஷயம் உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அது உன் அப்பா கொடுத்தது உன் வாழ்க்கையில் நன்மையாக தான் இருக்கும் என்று நம்பு அது உன் வாழ்க்கையை மாற்றும்
Sai Baba Positive Quotes in Tamil;
வியாழக்கிழமை என்றால் சாயை நினைத்து விரதமிருக்கும் பக்தர்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்ற சொல்லுக்கேற்ப ...சாயின் நாமத்தை தொழுது...இந்த வாழ்வின் நாட்களை நகர்த்திடுவோம்.
சாயின் பொன்மொழிகள் எப்பொழுதுமே நேர்மறையானவை.அனைவரையும் நேசிக்க செய்யும் தன்மை கொண்டவைகளாக இருக்கும்.
"விட்டுக் கொடுப்பதற்கும் விட்டு விலகுவதற்கும் பெரிதாக வித்தியாசம் ஓன்றும் இல்லை. புரிந்துகொண்ட உள்ளமோ விட்டுக்கொடுக்கும் புரிந்து கொள்ளாத உள்ளம் விட்டு விலகிடும்"
செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றை செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும் போது உன் மனம் அதை செய்து முடிக்கும் வழிகளை கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது...
உனக்கு எது என்று நிர்ணயிக்கப்பட்டதோ அது உன்னிடத்தில் வந்து சேரும். அது வந்து சேரும் காலத்தையும் நீ நெருங்கி விட்டாய்...
என்னை நாடி வந்த உன்னை தேடி
வந்துள்ளேன். உனக்கு
தேவையானதை அளிக்க போகிறேன்
பெற்றுக் கொள்.
Sai Baba 11 Quotes in Tamil;
எல்லோரையும் நேசியுங்கள்;அன்பு ஒன்றே உங்களை உயர்த்தும்.இதுவும் சாய் கூறியது தான்.எப்பொழுதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது நீங்கள் உங்களை சுற்றி உள்ளவர்களின் மீது காட்டும் அன்பு மட்டுமே....
இது போன்ற மேன்மை மிக்க பொன்மொழிகளையும் சாய் மக்களுக்கு வழங்கியுள்ளார்.
வாழ்க்கையில் நிலையானது
அன்பு மட்டுமே
அதன் பாதையில் செல்
அதுவே உன்னை
என்னிடம் சேர்க்கும்
உனக்கான வெற்றி காலத்தில் நீ நுழைந்து விட்டாய் இனி எல்லாம் நல்லதே நடக்கும்
நம்பிக்கை என்மேல் இருந்தால்,
என்னால் உனக்கு செய்ய முடியாத
காரியம் என்று ஏதும் கிடையாது.
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
மனதில்
எதையோ
நினைத்து
வேதனையில்
இருக்கிறாய்.
அது எனக்கு
தெரியும்.அந்த
வேதனைகள்
தீர்ந்து மகிழ்ச்சி
வரப்போகிறது.
Blessing Saibaba Quotes Tamil;
உன்னை துன்பங்கள்
நெருங்கும் போது...
உனக்கு முன் நானிருப்பேன்
இப்படிக்கு உன் சாய்....
நீ வாழ்வில் இழந்த அனைத்தையும் உன் தந்தையாகிய சாய் நிச்சயம் உனக்கு வழங்குவார்....
எவ்வளவு தான்
கஷ்டங்களை வழங்கினாலும்
உன்னை ஒருநாளும்
நான் கைவிட மாட்டேன்...
உன்னோடு நான் இருப்பதை
உணர்ந்து கொள்ளும் நேரம்
வரும், என்னை
சர்வ சாதாரணமாக
நினைத்து விடாதே.
நீயாக என்னைத்
தேடி வரவில்லைா
வரவும்
முடியாது.
நான் வரவழைத்தேன்.
மற்றவர்கள் மத்தியில்
நீயும் பெரும்
செல்வந்தராய் வாழப் போகிறாய்.
என் வார்த்தைகளில்
நம்பிக்கை வை எதை நீ
தேடினாயோ அது
உன்னைத் தேடி வரும்..
ஓம் சாய் ராம்.
சாய் பிள்ளை வாழ்க்கையில் நீ விடும் ஒவ்வொறு சொட்டு கண்ணீருக்கும் பதில் உண்டு. உன் நிம்மதி இல்லாத வாழ்வை நான் இன்பம் பொங்கும் வாழ்வாக மாற்றுவேன்...!!
நீ என்னைச் சார்ந்தவன், என்னை. மட்டுமே சார்ந்தவன். ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உனக்கு என்ன பொறுப்பை நான்தான் வகிக்க வேண்டும். என்னை விட்டால் உனக்கு
நேரும் என்பதை நான் மட்டுமே
அறிவேன். உன்னை கரையேற்றும்
வேறு யார் இருக்கிறார்?
நான் இன்று உனக்கு உறுதி
அளிக்கிறேன். நீ நிச்சயமாக
சீரடி வருவதற்கு அனைத்து
ஏற்பாடுகளையும் நான் வெகு
விரைவில் செய்கிறேன்.
சாயிசத்சரிதம்
Saibaba Quotes on Faith in Tamil;
உனக்காக எனது துவாரகாவில் காத்துக்கொண்டு இருக்கிறேன் நீ
விரைந்துவா எனது தரிசனம் கிடைக்குமா கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் பல பேர் மத்தியில் நான் உனது வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் இனி உனது வாழ்க்கை நீ விரும்பியது போல மாற போகிறது ஜெயிக்க போகிறாய் அதை நான் ஆனந்தமாக கண்டுகளிக்க போகிறேன்
தைரியமாய் இரு
சரிவும் இனி சரித்திரம் ஆகும் வசந்தம் இனி உன் வசம் ஆகும் நல்லதே நடக்கும் !
இனி உன் வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும் நீயும் உன் குடும்பமும் சந்தோஷமா வாழ்வீர்கள்! ஓம் சாய்ராம்
இழந்தது எதுவாயினும்
அதைவிட சிறந்தது
உனக்கு கிடைக்கும்...
கிடைக்கச் செய்வேன்!
பொறுமை என்பதை நீ ஆயுதமாக கொண்டு நீ எந்த செயலில் இறங்கினாலும் உனக்கு வெற்றி நிச்சயம்...!
நீ போதுமான அளவு வாழ்க்கையில் காத்திருந்து விட்டாய். இனிமேல் நீ எங்கேயும் எதற்காகவும் காத்திருக்க அவசியம் இல்லாமல் நானே வந்து உன் வேலையை முடித்துத் தருவேன். இது என் சத்திய வாக்கு.
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும் ஆற்றலும்- மந்திரமும் அடங்கியுள்ளன!!
Sai Baba Tamil Quotes Hd Images;
'நீ எதையெல்லாம் இழந்தாயோ அதை விட அதிகமாக உன்னை வந்து சேரும் நீ வாழ்வில் முன்னோக்கி மகிழ்ச்சியாய் செல்லும்காலம் வந்துவிட்டது நம்பிக்கையோடு நான் கூறும் வார்த்தைகளை பின்பற்று இதுஉன் தாயும் தந்தையுமான சாயின் வாக்கு நான்தான் நீ
எனது அருளால்
நிச்சயமாக
நல்லதே நடக்கும்..
உன் நம்பிக்கை என்றும்
வீண் போகாது.,,
நான் எப்போதும்
எனது தீவிர
பக்தர்களின் நம்பிக்கையை
பொய்யாக்க மாட்டேன்..
கடைசியில் எல்லாம் சரியாகும் என நம்புங்கள்!!
சரியாகவில்லையென்றால், இது கடைசி இல்லை என நம்புங்கள்!!!
எக்காலத்திலும்,எந்த இடத்திலும், நீ என்னை நினைக்கும்போது, நான் உன்னுடன் இருப்பேன்!
நீ செல்லும் இடமெல்லாம் சாய் துணையாக நான் இருக்கிறேன்! நல்லதே நடக்கும்.
எண்ணங்கள் நல்லதாக
இருந்தால் நடப்பது எல்லாம் நல்லதாகவே தோணும்...!
Sai Baba Quotes on Patients;
கிடைக்குமா என கேட்காதே, கிடைக்கும் என நம்பு. நடக்குமா என கேட்காதே, நடக்கும் என நம்பு. முடியுமா என கேட்காதே, முடியும் என நம்பு.