பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் பல திரை நட்சத்திரங்கள் நடித்து வந்துள்ள கங்குவா திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை சூரியாவின் ரசிகர்களின் இடையே கிளப்பி இருந்தது.
அதுமட்டுமில்லாமல் கங்குவா படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் அதன் ஆடை வடிவமைப்பு எல்லாவற்றையும் பார்த்த ரசிகர்கள் இது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
கங்குவா ட்ரைலருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாகவே அமைகிறது.
படத்தில் வில்லனாக வரும் பாபிக்கும் மிகுந்த முக்கியத்துவம் அது கொடுக்கப்பட்டுள்ளது அவருடைய விருந்து உன்ன வாரீரோ என்ற வசனத்தை கேட்கும் பொழுது இதயத்தில் அதன் வீரியத்தை உணர முடிகிறது வில்லன் கதாபாத்திரத்திற்கு பாபி மிகவும் சிறந்தவராகவே ட்ரெய்லரில் தெரிகிறார்.
ட்ரைலரில் பெரும்பாலும் வில்லனுக்கே முக்கியத்துவமானது கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் சில காட்சிகளில் மட்டுமே தெரிவதால் அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குனர் வேண்டுமென்றே மறைத்து வைத்திருக்கிறார். அதை திரையில் ரசிகர்கள் கண்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிகிறது.
மொத்தத்தில் கங்குவான் ட்ரைலர் ஆனது ஒரு மணி நேரத்தில் 2 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது மேலும் இதன் எண்ணிக்கையானது பல மில்லியன்களை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா படம் அதன் கிராபிக்ஸ் அமைப்புகளை பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட ஒரு பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் போலவே தோற்றம் அளிக்கிறது.
இது மன்னர்களின் வரலாற்று படம் போலவும் தெரிகிறது ஆனால் உண்மையில் கங்குவா பலத்தின் கதையை நாம் திரையரங்குகளில் படமாக பார்க்கும் பொழுது தான் தெரிந்து கொள்ள முடியும்.
கங்குவா படத்தினை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதை இதன் ட்ரெய்லர் வெளியீட்டின் பொழுது பார்க்க முடிகிறது பெரும்பாலும் நல்ல கருத்துகளை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர் எனவே கங்குவா படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக வரும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.