மீட்பு படையினரை உலுக்கிய வயநாடு சம்பவம்
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாக உள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவலானது தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் மழையும் அவ்வப்போது பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மீட்பு பணியில் அவ்வப்போது தோய்வு ஏற்படுகிறது. எனினும் மீட்ப்பு படையினர் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்க்கு பேட்டி அளித்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது தங்களுக்கு மிகுந்த மனவேதனை அளித்த மீட்பு பணிகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதில் ஒரு தாயும் நான்கு வயது குழந்தையும் படுக்கையில் படுத்திருந்த படி மண்ணால் மூடப்பட்டு இறந்து கிடந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்ட பிறகு இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இயற்கையின் பேரழிவாள் இன்று நாம் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம் அதில் ஏராளமான குழந்தைகளும் உள்ளனர். இவற்றையெல்லாம் கேட்கும் பொழுது உண்மையில் இறை நம்பிக்கையே குறைந்து போகிறது.
மழை வெயில் எதுவும் பார்க்காமல் வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
இயற்கையை நாம் அழிக்க தொடங்கினால் இயற்கை நம்மையும் அழித்துவிடும் என்பது வயநாட்டில் நடந்த இந்த கொடூர பேரிடரில் இருந்து நாம் கற்றுக் கொள்ள பாடமாக உள்ளது.