தன்னம்பிக்கை கதைகள்-மகிழ்ச்சியை இழந்த காக்கா

Vizhimaa
0

Motivational Stories in Tamil

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே இங்கு எல்லோருடைய விருப்பமும், அந்த மகிழ்ச்சி இங்கு எதில் கிடைக்கிறது.முதலில் மகிழ்ச்சி என்பது கிடைப்பதா இல்லை கொடுப்பதா என்ற பல கேள்விகள் நம்மிடையே உள்ளது.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் வாழ்க்கையா?இல்லை பகிர்ந்து கொள்வது தான் மகிழ்ச்சியா?
இந்த கேள்விகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அமைகிறது இந்த கதை...

கதையின் தலைப்பு

மகிழ்ச்சியை இழந்த காக்கா


Motivational stories in Tamil


கதைக்களம்

மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு காக்கா தன் மகிழ்ச்சியை இழந்து யார் இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை தேடி தெரிந்து கொண்டது என்ன என்பதே இந்த கதையின் களமாக உள்ளது.

கதை

ஓர் ஊரில் ஒரு காக்கா மிகவும் மகிழ்ச்சியாக தன் வாழ்க்கையை நடத்தி வந்தது.எந்த தொந்தரவும் இல்லாத ஒரு வாழ்க்கையை அது வாழ்ந்து வந்தது.ஒரு நாள் தண்ணீர் குடிக்க ஆற்றங்கரைக்கு சென்றது.அங்கே வெள்ளை நிறத்தில் நீண்ட பார்ப்பதற்கே மிகவும் அழகாக ஒரு கொக்கு ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

அந்த கொக்கை பார்த்த காக்கைக்கு கொக்கு வெள்ளையாகவும் தன்னை விட அழகாகவும் இருப்பதாக உணர்ந்தது.எனவே இந்த கொக்கு தன்னை விட மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்து தன்னுடைய மகிழ்ச்சியை இழந்தது.ஒரு நாள் அந்த கொக்கிகள் சென்று கொக்கே நீ என்னை விட மிகவும் அழகாக இருக்கிறாய் அதனால் நீ என்னை விட மகிழ்ச்சியாக இருக்கிறாய் தானே என்று காக்கை கேட்டது.

அதற்கு அந்த கொக்கு கூறியது நான் மிகவும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வந்தேன் ஆனால் பச்சைக்கிளியை பார்த்ததிலிருந்து என் மகிழ்ச்சியையும் போய்விட்டது.ஏன் என்ன ஆனாது என்று காக்கை கேட்டது.அந்த பச்சைக்கிளி என்னை விட மிகவும் அழகாக இருந்தது.உடல் முழுவதும்  பச்சை நிறத்துடனும் அழகான சிவப்பு அலகுடனும் காட்சியளிக்கிறது.என்னை விட அந்த கிளி மிகவும் அழகாக இருக்கிறது அதனால் அது என்னை விட மகிழ்ச்சியாக இருக்கும்.

காக்கைக்கு சிறிது குழப்பம் வந்தது,என்னடா இது கொக்கை விட அழகாக ஒரு பறவையா என்று எண்ணி அந்த பச்சைக்கிளியை தேடி சென்றது.சிறிது தூரம் சென்றவுடன் ஒரு பெரிய கம்பீரமான ஆலமரக்கிளையில் அந்த பச்சைக்கிளி உட்கார்ந்திருந்தது கொண்டிருந்தது.அந்த கிளியிடம் காக்கை சென்று கிளியே நீ என்னையும் கொக்கையும் விட மிகவும் அழகாக இருக்கிறாய், அதனால் நீ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்பது எனக்கு தெரியும் என்றது.

அதற்கு அந்த கிளி ஆமாம் நான் மிகவும் மகிழ்ச்சியான பறவையாக தான் வாழ்ந்து வந்தேன்,ஆனால் ஒரு நாள் அந்த தோகை விரித்து ஆடும் மயிலை பார்த்தேன் அதிலிருந்து என் மகிழ்ச்சியும் காணாமல் போனது என்றது.ஏன் என்றது காக்கை.அதற்கு அந்த கிளி,மயில் மிகவும் அழகான பறவை,என்னை விட அழகாக இருக்கும்.அது தோகை விரித்து ஆடினால் ஊர் முழுக்க வேடிக்கை பார்க்கும் என்றது.இதனை கேட்ட காக்கைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.உடனே கிளியிடம் அந்த மயில் இப்போது எங்கிருக்கும் என்று கேட்டது.கிளியோ நம்ம ஊரு மிருக காட்சி சாலையில் இருக்கும் என்று சொன்னது.உடனே காக்கையும் அந்த மயிலைத் தேடி மிருக காட்சி சாலைக்கு சென்றது. 

மிருக காட்சி சாலையில் ஒரு அழகான கூண்டில் தனியாக வாழ்ந்து வந்த மயிலிடம் காக்கை கேட்டது,மயிலே நீ என்னை விட மிகவும் அழகாக இருக்கிறாய் அதனால் நீ என்னை விட மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறாய் அல்லவா?என்று கேட்டது.அதற்கு அந்த மயிலின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது‌.கண்ணீருடன் மயில் பேச ஆரம்பித்தது.ஆம் நான் மிகவும் அழகான பறவை தான்,என்னுடைய இந்த அழகு தான் என்னை இந்த கூண்டுக்குள் சிக்க வைத்தது.நான் மட்டும் உன்னை போல் ஒரு அழகற்ற காக்கையாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.நான் என் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் பறந்து சென்றிருப்பேன் என்றது.

இதை கேட்ட காக்கைக்கு அழக சற்று ஆபத்தானது என்று உணர்ந்து இழந்த தன் மகிழ்ச்சியை மீட்டெடுத்து.


Short Motivational stories for children in Tamil



கதையின் நீதி

அகத்தில் உள்ள மகிழ்ச்சி என்பது முகத்தால் வருவது இல்லை.அழகாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது உண்மையல்ல.அழகினால் உள்ளத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top