தன்னம்பிக்கை கதைகள்-கஷ்டப்பட்டு களைச்ச மரவெட்டுபவன்

Vizhimaa
0

  Motivational Stories in Tamil(Smart Work)

  தன்னம்பிக்கை என்பதை உள்ளார்ந்த விஷயம் அதை உணர மட்டும் முடியுமே தவிர யாரிடத்தும் உருவாக்க முடியும்.இந்த தன்னம்பிக்கை கதைகள் உங்களுள் சிறிதளவு தன்னம்பிக்கை உணர்ச்சியை விதைப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்த நவீன உலகில் கடின உழைப்பால் மட்டும் முன்னேறி விட முடியாது அதற்கு சிறிதளவேனும் மூளையும் பயன்படுத்த வேண்டும் என்று உணர்த்தும் தன்னம்பிக்கை கதை...

  கதையின் தலைப்பு

  தன்னம்பிக்கை கதைகள்-கஷ்டப்பட்டு களைச்ச மரம் வெட்டுபவன் 


  Motivational stories in Tamil


  கதைக்களம்

  வேலைத் தேடி அலையும் ஒரு மரம் சார்ந்த தொழில் தெரிந்த நபர் ஒருவர் கிடைத்த வேலையை எவ்வாறு செய்கிறார் என்பதை காட்சிப்படுத்தியுள்ளது இந்த கஷ்டப்பட்டு களைச்ச மரம் வெட்டுபவன் எனும் கதை.


  கதை

  மரம் சார்ந்த தொழில் தெரிந்த நபர் ஒருவர் வேலை தேடி வீதி வீதியாய் நடக்க ஆரம்பித்தார்.அன்று மாலையே ஒரு மரக்கடையில் அவருக்கு வேலை ஒன்று கிடைத்தது.அந்த முதலாளியிடம் வேலை கேட்ட நான் மிகவும் கடினமான உழைப்பாளி எனக்கு ஒரு வேலையை கொடுங்கள் நான் அதை சிறப்பாக செய்து முடிப்பேன் என்று உறுதி கூறியே அந்த வேலையை பெற்றான்.

  அந்த முதலாளி அவனுக்கு கொடுத்த வேலையோ காட்டுக்கு சென்று மரம் வெட்டும் வேலை.சும்மா சொல்லி விட முடியாது,முதல் நாள் கிடைத்த வேலையை அந்த நபர் மிகவும் அற்புதமாக செய்தார்.அங்கு மரம் வெட்டும் அனைத்து தொழிலாளிகளை விடவும் சில மரங்கள் அதிகமாக வெட்டி சாதனைகள் பல புரிந்தார்.

  அங்கு வேலை செய்யும் அனைவரும் முதல்நாளில் இந்த நபரின் திறமை கண்டு யார் இந்த நபர் என்று வித்தியாசமாக திரும்பி பார்த்தனர்.ஆனால் விதி சதி செய்தது,அந்த நபரால் அடுத்ததடுத்த நாட்களில் முதல் நாளைப் போன்று அதிகப்படியான மரங்களை வெட்ட முடியவில்லை.

  அனைவரின் பார்வேயிலும் கேள்விக்கு உள்ளானார்.ஒவ்வொரு நாளும் முதலாளியும் மற்ற தொழிலாளிஙளும் என்ன ஆச்சு முதல் நாள் நீங்கள் அத்தனை மரங்களை வெட்டினீர்கள் ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சரிவர வெட்டுவதில்லையே ஏன்,தினமும் நீங்கள் வெட்டும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே ஏன் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

  ஒரு நாள் கடையின் முதலாளி அந்த நபரிடம் ஏன் உங்களால் அதிகமான மரங்களை வெட்ட முடியவில்லை என்று கேட்டார்.முதல் நாள் மட்டும் அவ்வளவு மரங்களை வெட்டினீர்களே அது எப்படி என்று கேட்டார்.அதற்கு அந்த மரவெட்டும் நபர் அதுதான் எனக்கும் தெரியவில்லை.நான் முதல் நாளைப்போலத் தான் இப்பொழுதும் வெட்டிக்கொண்டிருக்கிறேன்,நாள் முழுவதும் வெட்டிக்கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் முதல் நாளில் வெட்டியது போல் அதிக மரங்களை வெட்டுவதில்லை என்றான்.

  ஆமாம் உங்கள் கோடாரி எங்கே அதை காட்டுங்கள் என்றார்,ஏன் என்று கேட்டான் அந்த மரம் வெட்டுபவன்.நீங்கள் அதை தினமும் எவ்வளவு நேரம் கூர்மை செய்கிறீர்கள் என்று கேட்டார் முதலாளி.கூர்மையா,நான் அதை ஒரு நாளும் பட்டை தீட்டியதே இல்லையே என்றான் மரம் வெட்டுபவன்.அப்பொழுது நான் முதல் கூர் தீட்டி கொடுத்தேனே அதோடு தான் இன்னும் வெட்டிக்கொண்டு இருக்கிறீர்களா என்றார்.ஆமாம் என்றான் மரம் வெட்டுபவன்.இது தான் உங்களுடைய பிரச்சனை நீங்கள் உங்களுடைய கோடாரியை கூர் தீட்டாமல் நாள் முழுவதும் வெட்டிக்கொண்டிருப்பதால் கோடாரி மட்டுப் பட்டு அதனால் அதிக மரங்களை வேகமாக வெட்ட முடியாமல் போகிறது.

  எனவே நீங்கள் நாள் முழுவதும் கடினமாக உழைத்தும் பயனில்லாமல் போகிறது.இதை உணர்ந்த அந்த மரம் வெட்டுபவன் தினமும் கோடாரியை கூர்மை படுத்தினான். 


  Motivational stories in Tamil


  கதையின் நீதி

  தற்போதைய வளர்ந்து போன நவீன உலகில் கடின உழைப்பு மட்டும் இருந்தால் யாராலும் முன்னேற முடியாது.கூடவே சிறிதளவு புத்திசாலித்தனமும் தேவை.கடின உழைப்பும் புத்திசாலித்தனமான செய்கையும் நம்மை உயர்த்தும்.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்
  கருத்துரையிடுக (0)
  To Top