தன்னம்பிக்கை கதைகள்-ஆட்டை கோட்டை விட்ட விவசாயி

Vizhimaa
0

  Motivational Stories in Tamil  மனமானது சோர்ந்திருக்கும் வேலையில் நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை கதைகள்


  கதையின் தலைப்பு

  ஆட்டை கோட்டை விட்ட விவசாயி


  Motivational Stories in Tamil


  கதைக்களம்

  மண்ணை நம்பி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர விவசாயி கஷ்டப்பட்டு கடன்பட்டு வாங்கிய ஆட்டை மூன்று திருடர்களிடம் கோட்டை விட்ட கதை இது.

  கதை மாந்தர்கள்

  விவசாயி,மூன்று திருடர்கள்


  கதை

  உழவை நம்பி உயிரை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு நடுத்தர விவசாயி ஆடு வளர்க்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக அன்று மாலையே அயலூர் சந்தைக்குச் சென்றார். அங்கு நல்ல கொழுகொழுப்பான ஆடாக பார்த்து எவ்வளவு விலை என்றார் அந்த ஆட்டுக்காரனோ ரூபாய் 5 ஆயிரம் என்றார் உடனே விவசாயம ரூபாய் 5 ஆயிரத்தை கொடுத்து அந்த ஆட்டை வாங்கிக்கொண்டார். பிறகு தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக பொடிநடையாக அந்த இரவு நேரத்தில் நடக்க ஆரம்பித்தார். அவ்வளவு ஆசைப்பட்டு வாங்கிய ஆட்டை தனது தோளில் சுமந்தபடி தன் ஊருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த விவசாயி. நல்ல கொழுகொழுப்பான ஆட்டை தோளில் சுமந்து வந்த அந்த விவசாயியை பார்த்த மூன்று திருடர்கள் அந்த ஆட்டை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று எண்ணம் கொண்டனர்.மூவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள்,அந்த மூன்று திருடர்களும் அந்த விவசாயி வரும் வழியே சிறிது சிறிது தூரங்களுக்கு இடையில் ஒன்றன் பின் ஒவ்வொருவராக நின்றுகொண்டனர்.அந்த விவசாயி சிறிது தூரம் நடந்து வந்த பிறகு அங்கு ஒளிந்திருந்த முதல் திருடன் வெளியே வந்தான். அந்த திருடன் அந்த விவசாயியை பார்த்து ஐயா நீங்கள் என்ன ஒரு செத்த கன்றுக்குட்டியை உங்களுடைய தோளில் சுமந்து வருகிறீர்கள், என்ன இது ஏன் இப்படி சுமந்து வருகிறீர்கள் என்று கேட்டான். உடனே அந்த விவசாயி அதிர்ந்து போனார். அந்த திருடனின் மீது மிகுந்த கோபப்பட்டார். என்ன உன் கண்கள் என்ன குருடா ஒரு கொழுகொழுப்பான ஆட்டை பார்த்து செத்த கன்றுக்குட்டி என்கிறாயே அறிவில்லையா உனக்கு என்றார்.

  திருடனோ ஐயா என் கண்களுக்கு என்ன தெரிகிறதோ அதை தான் நான் கூற முடியும் என்றான்.நிச்சயமாக இது ஒரு செத்த கன்றுக்குட்டி தான் ஐயா என்றான்.கோபம் அடைந்த அந்த விவசாயி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

  மீண்டும் நடக்க தொடங்கினார்.சிறிது நடந்த பிறகு இரண்டாவது திருடன் ஒளிந்திருந்த இடமும் வந்தது.விவசாயி நடந்து கொண்டிருந்த பொழுது ஒளிந்திருந்த இரண்டாவது திருடன்  வந்தான் ஐயா நீங்கள் என்ன ஒரு கழுதையை உங்கள் தோளில் சுமந்து வருகிறீர்கள் என்று கேட்டான்.

  சற்று குழம்பிய விவசாயி என்னய்யா சொல்ற ஒரு ஆட்டை போய் கழுதை னு சொல்ற உன் கண்ணு என்ன குருடா என்றார்.அதற்கு அந்த திருடன் ஐயா நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால் என் கண்களுக்கு அது கழுதை போல் தான் தெரிகிறது.பாவம் நீங்கள் உங்களை யாரோ நன்றாக ஏமாற்றி விட்டது போல் தெரிகிறது என்றான்.

  மனதில் சின்ன குழப்பத்துடன் அங்கிருந்து நடக்க தொடங்கினார் அந்த விவசாயி.சிறிது தூரம் சென்ற உடன் அந்த மூன்றாவது திருடன் ஒளிந்திருந்த இடமும் வந்தது.விவசாயியை பார்த்த அந்த திருடன் அவர் அருகே வந்து என்னய்யா இது ஒரு தெருநாயை உங்கள் தோளில் சுமந்து வருகிறீர்கள் என்று கேட்டான்.அந்த விவசாயி ஐயா சந்தையில் நான் ஆடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறைன் என்றார்.இது ஒரு ஆடு என்று கூறிப் பார்த்தார்.
  அந்த திருடனோ ஐயா உங்களை எவனோ நல்லா ஏமாற்றி விட்டான்.என் கண்களுக்கு இது தெருநாய் போலத் தான் தெரிகிறது என்றான்.

  பயத்தின் உச்சத்திற்கு சென்று அந்த விவசாயி நம் தோளில் இருப்பது என்னவென்று தெரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்கிறார்கள் என்று பயந்தார்.இது ஏதோ தீய சக்தி என்று பயந்து தோளில் சுமந்து வந்த ஆட்டை தரையில் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.


  Motivational Stories in Tamil


  விவசாயி விட்டு சென்ற ஆட்ட அந்த மூன்று திருடர்களும் கைப்பற்றினர்.பிறகு ஒன்றாக அமர்ந்து இந்த அற்புதமான திருட்டு சம்பவத்தை பற்றி பேசிக்கொண்டனர்.

  அதில் ஒரு திருடன் அந்த விவசாயி பாவம், கஷ்டப்பட்டு வாங்கிய ஆட்டை நம்மிடம் ஏமாந்து விட்டான் என்றான்.இன்னொரு திருடனோ அந்த விவசாயி சரியான முட்டாள் என்றான்.தான் கஷ்டப்பட்டு வாங்கிய ஆட்டை யாரோ மூன்று பேர் இது ஆடு இல்லை என்று சொன்னதை நம்பி தூக்கி எறிந்து சென்றானே என்று சிரித்துக்கொண்டே மேலும் கூறினான் இப்படித்தான் இங்கே சிலர் வாழ்கிறார்கள், மற்றவர்கள் கூறுவதால் அவர்களை மாற்றிக் கொள்வார்கள்,நாம் செய்வது தவறா சரியா என்று எதையும் யோசிக்காமல் பிறர் சொல்வதையே செய்து பிறருக்காகவே வாழ்ந்து மடிவார்கள்.இவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்கள் என்றான்.

  கதையின் நீதி

  மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்பதை எண்ணி தாங்கள் விரும்பிய பாதையை கைவிட கூடாது.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்
  கருத்துரையிடுக (0)
  To Top