சிறுவர் குட்டி கதைகள்-தலைக்கணத்தால் தலை கவிழ்ந்த பருந்து

Vizhimaa
0

சிறுவர் தன்னம்பிக்கை கதைகள்(Short Motivational stories for children in Tamil)


குழந்தைகளின் உலகம் என்பது ஒரு கனவு உலகம்,அங்கே அவர்களுடைய பெற்றோர்களே கதாநாயகர்கள்.சென்ற தலைமுறையில் ஒரு குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைப்பது என்பது அந்த குழந்தைகளுடைய பாட்டி மற்றும் தாத்தாக்களின் கடமையாக இருந்தது.இப்போழுது தனிக்குடும்ப கலாச்சாரம் தலை தூக்கி நிற்பதால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அவர்களுடைய பெற்றோர்களின் பொறுப்பாகி விடுகிறது.பெற்றோர்கள் ஆன்லைனில் கதைகள் படித்து குழந்தைகளுக்கு சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இன்னும் ஒரு சில பெற்றோர்கள் நேரமின்மையால் மொபைல் போனை குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு செல்கின்றனர்.இதனால் கதை சொல்லும் கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.இந்த பகுதியில் குழந்தைகளுக்கு சொல்லக்கூடிய கதைகள் இங்கு பதிவிடப்படுகின்றன.


கதையின் தலைப்பு


தலைக்கணத்தால் தலை கவிழ்ந்த பருந்து


Short stories for children in Tamil


கதைக்களம்


பறவைகளும் விலங்குகளும் அதிக அளவில் வாழும் ஓர் அடர்ந்த வனப்பகுதி.


கதை மாந்தர்கள்


சிங்க ராஜா,சிங்க கூட்டம்,பறவை இனங்கள்,காக்கை,மயில்,பருந்து மற்றும் சிட்டுக்குருவி


கதை


மனிதர்களின் காலடித் தடம் படாத காடு அது.அங்கே பறவைகளும் விலங்கும் எண்ணற்று பெருகி பெரு வளத்துடன் காட்டையும் தங்களையும் வளத்து வந்தன.தீடிரென ஒருநாள் அந்த காட்டில் சலசலப்பு தென்பட்டது.என்னவென்றால் சிங்க கூட்டங்கள் தங்களுடைய ராஜா சிங்கத்தை புகழ்ந்து கோஷமிட்டு அந்த காட்டை சுற்றி சுற்றி வந்தன.அதை பார்த்த பறவை இனங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தன.காக்கையும் மயிலும் விலங்குகளுக்கெல்லாம் தலைவனாக சிங்க ராஜா இருப்பதை போல் நம் பறவை இனத்திற்கும் நாம் ஒரு ராஜாவை தேர்ந்தெடுக்க வேண்டும் அப்பொழுது தான் நமக்குள்ளும் ஒற்றுமை மிகுந்து காணப்படும் என்றார்கள்.இதையே அனைத்து பறவைகளும் ஆமோதித்தன.ஒரு சிட்டுக்குருவி மட்டும் இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.ஆனால் நம்மில் ஒரு தலைவனை தேர்ந்தெடுப்பது என்பது மிக கடினமான விஷயம் என்றது.அதற்கு அங்கிருந்த பெரிய  பருந்து ஒன்று உங்க எல்லொரையும் விட நான் தான் இங்கே உயர்ந்தவன் அதனால் என்னையே உங்களுடைய தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றது‌.மற்ற பறவைகள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி விட்டன.

அப்பொழுது அந்த பருந்து,சரி நம்மில் யார் மிக உயரமாக பறக்கிறாரோ அவரையே தலைவராக தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்றது.தான் தான் மிக உயரமாக பறக்க கூடிய ஒரே பறவை என்பதை உணர்ந்த பருந்து இந்த மாதிரி ஒரு போட்டியை முன்மொழிந்து.விவரமறியாத மற்ற பறவைகளும் இதை ஒப்புக்கொண்டு போட்டிக்கு தயாராயின.

போட்டித் தொடங்கப்பட்டது,அனைத்து பறவைகளும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையில் இறக்கைகள் வலிக்க வலிக்க உயரத்தில் பறக்க முயற்சி செய்து கொண்டிருந்தன.

ஆனால் பருந்தின் திட்டப்படி பருந்து தான் மிக உயரமாக பறந்து கொண்டிருந்தது.பறக்கும் போது மற்ற பறவைகளை பார்த்து நக்கலாக சிரித்தது.முன்பே என்னை தலைவனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே... இப்போது பாருங்கள் நான் தான் மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறேன் என்பது  போல் இருந்தது பருந்தின் சிரிப்பு.

போட்டியில் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருந்த பருந்து மெல்ல கீழே இறங்கி வர தொடங்கியது. அப்பொழுது அங்கிருந்த மற்ற பறவைகள் ஏன் பருந்தே எதிர்பாராத வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது. அது என்னவென்றால் பருந்து வெற்றியை கொண்டாட கீழே இறங்கிய சமயத்தில் அதன் இறக்கையின் மேலே அமர்ந்து கொண்டிருந்த சிட்டுக்குருவியானது பருந்தின் தலையில் ஏறி பறக்க ஆரம்பித்தது. தற்பொழுது அந்த சிட்டுக்குருவி பருந்தை விடவும் மிக மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த மற்ற பறவைகள் சிட்டுக்குருவியின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்து அந்த சிட்டுக்குருவியை ஒட்டுமொத்த பறவை இனத்திற்கும் தலைவனாக தேர்ந்தெடுத்து மகுடம்  சூட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.


Short stories for children in Tamil


தன்னுடைய தலைக்கனத்தாலும் ஆணவத்தாலும் தலைவர் என்ற பதவியை பறிகொடுத்தது பருந்து.





கதை சொல்லும் நீதி

தான் என்ற தலைக்கனமும் நான் தான் உயர்ந்தவன் என்ற ஆணவமும் அதைக்கொண்டுள்ள மனிதர்க்கு அழிவையே தரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top