சிறுவர் கதைகள்-தன்னம்பிக்கை தந்த தந்தை

Vizhimaa
0

சிறுவர் கதைகள்;(children short Motivational Stories in Tamil)


குழந்தைகளின் உலகை சில அற்புதமான குட்டி கதைகளுடன் அழகாக்குவதற்கான ஒரு சின்ன முயற்சி.


Children short Motivational stories in Tamil



கதையின் தலைப்பு


சிறுவர் கதைகள்-தன்னம்பிக்கை தந்த தந்தை


கதையின் மாந்தர்கள்


தந்தை,மகன்,மூன்று பிச்சைக்காரர்கள்


கதைக்களம்


நேரத்தை வீணடித்துக் கொண்டு வீணாக சுற்றித் திரியும் தன் மகனுக்கு ஒரு பணக்கார தந்தை கூறும் எடுத்துக்காட்டு அறிவுரை.


கதை-Children short Motivational stories in Tamil


ஒரு ஊரில் ஒரு பணக்காரர் வாழ்ந்து வந்தார்.இவர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடமும் கடினப் பட்டு தன் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வந்தவர்.இவரிடம் அனைத்து செல்வங்களும் தற்போது கைவசம் இருந்தன.உழைத்த உழைப்பிற்கு கை மேல் பலன் கிடைத்தது என்றே சொல்லலாம்.

எல்லாம் இருந்தாலும் அவர் சற்று வேதனையுடனே வாழ்ந்து வந்தார்.காரணம் அவருக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் பயங்கரமான சோம்பேறி.தன்னுடைய நேரத்தை வீணாக செலவழித்து வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருந்தான்.தன்னுடைய மகன் தன்னைப்போல் இல்லாமல் பெரும் சோம்பேறியாக இருப்பதை பார்த்த அந்த பணக்காரன் இவனை எப்படி திருத்துவது என்று யோசித்து கொண்டு இருந்தார்.தன் மகனிடம் எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் அதை அவன் கண்டு கொள்ளாமல் போனதையும் நினைவு கூர்ந்தார்.

இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் தன் வீட்டின் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.அப்பொழுது அங்கே சில பிச்சைக்காரர்கள் இருப்பதை பார்த்த பணக்காரரக்கு தீடிரென ஒரு யோசனை வந்தது.

உடனடியாக தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்றார்.அங்கு டீவியில் கால்பந்து பார்த்துக் கொண்டிருந்த தன் மகனை தன்னுடன் வருமாறு அழைத்தார்.மகனோ ஒன்றும் புரியாமல் தன் தந்தையுடன் காரில் ஏறினான்.கார் வேகமாக அருகிலுள்ள பூங்காவிற்கு சென்றது.

பூங்காவிற்கு தன் மகனை அழைத்து வந்த தந்தை அங்கு வெகு நாட்களாக பிச்சை எடுத்து வந்த மூன்று பிச்சைக்காரர்களை அழைத்தார்.ஒவ்வொரு பிச்சைக்காரர்களையும் தனித்தனியே அழைத்து தன் மகனின் கையால் ரூபாய் 1 லட்சத்தை அந்த பிச்சைக்காரர்களுக்கு தரச் சொன்னார்.ஒன்றும் புரியாத மகனும் தந்தை சொன்னபடி அந்த பிச்சைக்காரர்களுக்கு அந்த  பணத்தை வழங்கினான்.

வீட்டிற்கு வந்த மகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.ஏன் தந்தை இவ்வளவு பணத்தை அந்த பிச்சைக்காரர்களுக்கு வழங்க சொன்னார் என்று யோசித்து கொண்டே இருந்தான்.தன் தந்தையிடமும் இதை பற்றி வினவினான்.ஆனால் அவரோ வாய் திறக்கவே இல்லை‌.சிறிது நாட்கள் கேட்டுக்கொண்டிருந்த மகனும் அதை மறந்து போனான்.

இந்த நிகழ்ச்சி நடந்து ஆறு மாதங்கள் ஆனது.பின் ஒரு நாள் தன் மகனை காரில் ஏற்றிக்கொண்டு மீண்டும் அதே பூங்காவிற்கு சென்றார் அந்த பணக்காரர்.அங்கே அவர் கை நிறைய பணம் கொடுத்த மூன்று பிச்சைக்காரர்களில் ஒருவர் மட்டும் இன்னும் அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுத்து வந்தான்.அவனிடம் சென்று என்னை நியாபகம் இருக்கிறதா என்று உங்கள் கை நிறைய பணம் கொடுத்தேனே என்றார்.

ஆம் உங்களை எனக்கு நியாபகம் இருக்கு ஐயா என்றான்.சரி நான் உங்களுக்கு கொடுத்த பணத்தை நீங்கள் என்ன செய்தீர்கள்.உங்க கூட இருந்த இன்னும் ரெண்டு பேர் எங்க என்று கேட்டார்.ஐயா நீங்கள் கொடுத்த பணத்தை வைத்து என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை.அதை வைத்து இரண்டு மாதங்கள் நிம்மதியாக சாப்பிட்டேன்.பணம் தீர்ந்து போனதும் மீண்டும் இங்கு பிச்சை எடுக்கிறேன் என்றான்.

அப்பொழுது இன்னும் இருவர் இருந்தார்களே அவர்கள் எங்கே என்று கேட்டபோது,அதில் ஒருவன் எங்கு இருக்கிறான் எனக்கு தெரியவில்லை.ஆனால் இன்னொருவன் இதோ இங்கு அருகில் தான் ஒரு ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வருகிறான் என்றார்.

பணக்காரரோ தன் மகனை அந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்து சென்றான்.அங்கு கடை முதாலாளியை சந்தித்து என்னை தியாகம் இருக்கிறதா என்று கேட்டார்.உடனே அந்த முதலாளி உங்களை என்னால் மறக்க முடியுமா உங்களால் தான் நான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்றார்.

நீங்கள் கொடுத்த பணத்தால் தான் ஒரு சிறிய கடை வைத்து படிப்படியாக உயர்ந்து இப்போது ஒரு பெரிய ஐஸ்கிரீம் கடையை திறந்துள்ளேன் என்றார்.உங்களுக்கு காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என்றான்.

சரி அந்த இன்னொரு நபர் எங்கே நான் பணம் கொடுத்தேனே அவர்.முதலாளியோ நேராக சென்றால் அங்கே ஒரு சூதாட்ட விளையாட்டு விடுதி இருக்கும்.அங்கு தான் சூதாடிக் கொண்டிருப்பான்.நீங்கள் தந்த பணத்தை சூதாடி சூதாடி இழந்தான்.இப்போது அந்த பழக்கத்தை விட முடியாமல் காலையில் பிச்சையெடுத்து வரும் பணத்தில் மாலை சூதாடுவான்.நீங்கள் அவனுக்கு கொடுத்த பணம் வீணாகி போனது.அவனும் சூதாடி கெட்டுப்போனான்.


இதை கேட்ட தந்தை தன் மகனை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார்.



Children short Motivational stories in Tamil




கதையின் நீதி


தன் மகனிடம் இதை கூறினார்.நீ கேட்டுக் கொண்டே இருந்தாரே.இப்போது புரிந்து கொள் மகனே நான் மூவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே அளவு பணத்தை தான் கொடுத்தேன்.அதில் ஒருவன் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தின்று கழித்தான்.இன்னொருவன் அதை வைத்து உழைத்து முன்னேறி தற்போது நல்ல நிலைமையில் உள்ளான்.மற்றும் ஒருவன் தீய பழக்கத்திற்கு அடிமையாகி தன்னை இழந்துவிட்டார்.

உன் வாழ்க்கையும் ஏன் எல்லோருடைய வாழ்க்கையும் இதோ போல் தான்.இங்கே எல்லோருக்கும் சமமான அளவு வாய்ப்புகள் எல்லோருக்கும் தரப்படும் அதை பயன்படுத்திக் கொண்டவனே வாழ்க்கையை வென்றவனாகிறான்.

தன் தவறை உணர்ந்த மகன் தற்போது உழைக்க ஆரம்பித்தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top