1000+ Motivational Quotes in Tamil: தன்னம்பிக்கை கவிதைகள்
வாழ்க்கை என்றால் ஆயிரம் வலிகளும் தடுமாற்றங்களும் தோல்விகளும் அவமானங்களும் நிறைந்தே இருக்கும். இவற்றை எல்லாம் கடந்து நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சொல்லப் போனால் தீவிர ஆசையோடு இந்த பதிவை படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். உங்களின் ஆயிரம் வலிகளையும் தோல்விகளையும் அவமானங்களையும் ஒரு நொடியில் பொடி பொடியாக நொறுங்க செய்து உங்கள் மனதில் எங்கள் வார்த்தைகளால் புத்துணர்ச்சியை ஊற்றெடுத்து பெருகச் செய்வது இந்த பதிவின் முதல் நோக்கமாகவே கருதப்படுகிறது.
தன்னம்பிக்கை ஒவ்வொரு உயிரும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த ஒற்றை வார்த்தையில் தான். ஏன் இந்த வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு? ஏனென்றால் தன்னம்பிக்கை என்பது சுயம், அறிவு, ஞானம், ஆற்றல், தைரியம் ஆக்கம் என எல்லாவற்றையும் தரவோ அல்லது கற்றுக் கொள்ளவோ நம்மை தயார்படுத்திக் கொள்ளவும் உறுதுணையாகவும் உண்மையான துணையாகவும் காலம் முழுக்க வருவது தன்னம்பிக்கை மட்டுமே.
நேர்மறையான தன்னம்பிக்கை கவிதை வரிகள்: Positivity Motivational Quotes in Tamil
தினம் தினம் ஆயிரம் ரணங்களை சுமக்கும் உங்கள் இதயங்களுக்கு சிறிதளவு எனும் நம்பிக்கையை விதைக்க கூடிய பதிவாகவே இது இருக்க வேண்டும். என்ற எண்ணத்தோடு பெரிதளவாக சிரத்தை மேற்கொண்டு இந்த பதிவை நாங்கள் காட்சிப்படுத்தியுள்ளோம்.
பாரம் என்று சிறகுகளை
நினைத்தால் பறவைகளால்
வானில் மறக்கவே முடியாது!
அதுபோல தான் கஷ்டம் என்று
நினைத்தால் கனவுகளை
உங்களால் அடைய முடியாது....
![]() |
Motivational Quotes in Tamil |
ஆயிரம் கைகளை நம்பி
ஏமாறுவதை விட,உன்
ஒரு கையை நம்பி
முன்னேறு... அதுதான்
- தன்னம்பிக்கை
கனவுகளை நினைவாக்க
வேண்டும் என்றால், கனவுகளில்
இருந்து முதலில் வெளியே
வரவேண்டும்....
நீ யார் என்பதை
நீ தான் முடிவு செய்ய
வேண்டும்...
சிங்கம் நான் தான்
ராஜா என்பதை எல்லோரிடமும்
எப்போதும் சொல்லிக்கொண்டே
இருப்பதில்லை;ஏனென்றால்
எல்லோருக்கும் தெரியும்
யார் ராஜா என்று....!!!!
எந்த இடத்தில்
இருக்கிறோம் என்பதில்
முக்கியம் இல்லை;எங்கு செல்ல
போகிறோம்,எங்கு சென்று
சேர்கிறோம் என்பதே முக்கியம்
Self Motivational Quotes in Tamil For Students;(தன்னம்பிக்கை கவிதைகள் வரிகள்)
வாழ்க்கையில் தன் திறமையை கொண்டு எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு தெரியும். உங்கள் நினைவுகளை கனவுகளை எல்லாம் நிஜத்தில் உண்மையாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு உங்களுக்காகவே இந்த கவிதை வரிகள் எழுதப்பட்டிருக்கிறது. இது எல்லாம் உங்கள் மனதின் ஏதோ ஒரு மூலையில் உங்களை செல்களைப் போல் அரித்துக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும்.
மூச்சும் முயற்சியும்
ஒன்றுதான் இரண்டும் தான்
நீ வாழ்கிறாய் என்பதை
உணர்த்தும்....
ஒத்த திரியில்
உசுர வச்சு
பிரகாசமாக எரியும்
விளக்கைப் போல்...
ஒரு குறிக்கோளில்
ஒன்றி உயர்ந்திடுங்கள்!
உன்னை இறக்கி
பேசுகிறவனை நீ
ஏறி போய் தான்
அடிக்க வேண்டும்....
முன்னேறி....
உடனடியாக வெற்றி
பெறுவேன் என்று
நம்ப வேண்டாம்;ஆனால்
உறுதியாக வெற்றி பெறுவேன்
என்று நம்புங்கள்...
தட்ட வேண்டும் என்றால்
நீ முதலில் கதவை
உருவாக்க வேண்டும்
உன் வெற்றியை
உன்னை தவிர வேறு
யாராலும் தடுக்க முடியாது...
வெற்றி என்பது
பணம் சம்பாதிப்பது மட்டும்
இல்லை என்பதை...உணரும்
நொடியில் உன் வெற்றி
உறுதியாகிறது....
மாபெரும் வெற்றியாளர்கள்
யாரும் தோல்வியை
சந்திக்காதவர்கள் இல்லை....
ஒன்றை செய்து
முடிக்காத வரை...
முடியாத காரியமாகவே
தோன்றும்....
வாழ்க்கை என்பது 10%
உங்களுக்கு என்ன நடக்கிறது
என்பது, 90% அதற்கு நீங்கள்
எப்படி நடந்துகொள்கிறீர்கள்
என்பதை பொறுத்தது...
LIFE MOTIVATIONAL QUOTES IN TAMIL
ஒரு சிறு துவாரத்தின் வழியே உங்களது வாழ்க்கையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், வாழ்க்கை அதனுள் அடங்கி இருக்கும் இன்பமும் துன்பமும் உங்களுக்கு பெரிதாகவே தெரியும் அதுவே உங்கள் வாழ்க்கை நீங்கள் பரந்த மனதுடன் அணுகினால், இந்த வாழ்க்கை உங்களுக்கு தரும் அனைத்து வலிகளும் ஒரு அனுபவ பாடம் என்பது உங்களுக்கு தானாகவே புரியவரும் அதனை மேலும் செம்மைப்படுத்தும் வகையிலேயே இந்த பதிவானது எழுதப்பட்டிருக்கிறது.
ஆயிரம் மைல்களை
கடக்க வேண்டும் என்ற
உன் கனவும், ஒரு சிறு முதல்
அடியில் இருந்து தான்
தொடங்குகிறது.....
உனக்கு வழி
கிடைக்கவில்லை
என்றால் உனக்கான
வழியை நீயே உருவாக்கு....
நீங்கள் இருக்கும் இடத்தில்
தொடங்குங்கள். உங்களிடம்
இருப்பதைப் பயன்படுத்துங்கள்.
உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்
![]() |
Motivational quotes in Tamil |
உங்கள் இலக்குகளை அடைவதன்
மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள்
என்பது முக்கியமல்ல.
என்னவாக மாறுகிறீர்கள்
என்பதே முக்கியம்
ஒரு திறமையான மனிதன்
சாதிக்க வேண்டும் என்ற
ஆசையால் தூண்டப்படுகிறான்,
மற்றவர்களை வெல்ல வேண்டும்
என்ற ஆசையால் அல்ல.
சிந்தித்துக் கொண்டே இருக்காமல்
செயலில் ஈடுபடுங்கள்;ஆனால்
சிந்திக்காமல் எதிலும் ஈடுபடாதீர்கள்
நீங்கள் செயலை
தொடங்கவில்லை என்றால்,
வெற்றி பெற மாட்டீர்கள்.
உன்னை தாழ்த்துவோர்
முன்பு உயர்ந்து நில்
உன்னை உயர்த்துவோர்
முன்பு பணிந்து நில்...
உன் வலியை
நீ உணர்ந்தால் உயிரோடு
இருக்கிறாய் என்று
அர்த்தம்....
மற்றவர் வலிகளை
உணர்ந்தால் மனிதனாக
வாழ்கிறாய் என்று
அர்த்தம்....
MOTIVATIONAL QUOTES IN TAMIL LYRICS;
தன்னம்பிக்கை தருவதில் சினிமா பாடல்களுக்கு என்று தனியிடம் உண்டு. மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு இங்கு பல இயக்குனர்களும் தங்களுடைய படத்தின் முதல் பாடல் ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் ஆகவே காட்சிகளை அமைக்கின்றனர். இது ஒரு வகையில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகவே உள்ளது.
நம் கஷ்ட காலங்களில்
உடன் இருப்பவர்கள்
மட்டுமே...நாம்
மகிழ்ச்சியாக வாழும்
போது உடன் இருக்க
தகுதியானவர்கள்...
வாழ்க்கை அழகாக
மாறுவது அழகிய
தோற்றமுடையவர்களால்
அல்ல; அழகிய
குணமுடையவர்களால்....
பொறுமையாக நடந்து
செல்வதில் தவறில்லை;
நீங்கள் நடப்பதை நிறுத்தாமல்
இருக்கும் வரை....
ஒரு நாளில்
உதிர்ந்து போகும் பூ
கூட சிரிக்கிறது மனிதா!
ஒரு யுகம் வாழும் உன்னால்
சிரிக்க முடியாதா?
நேற்றிலிருந்து கற்றுக்கொள்,
இன்றைய தினத்துக்காக வாழ்,
நாளைய தினத்தை நம்பு.
உன்னை தவிர யாரும்
உன்னை தடுக்கவும்
முடியாது....
செதுக்கவும் முடியாது....
ஒரு நாளில் இறக்கும்
எத்தனையோ உயிர்கள்
உண்டு இந்த பூமியில்,
ஒரு யுகம் வாழ
உனக்கு தான் வாய்ப்பு
உள்ளது உன் கையில்...
வாழ்ந்து விடு
இன்னொரு பிறவி
என்பது கேள்விக்குறி?
மகிழ்ச்சியான நினைவுகளால்
மட்டுமே உன்னை
உயிர்ப்புடன் வைத்திருக்க
முடியும்....
ஆனால் துன்பங்களால்
மட்டுமே உனக்கு வாழ
கற்றுக்கொடுக்க முடியும்....
விதியை மாற்ற
முயல்வதை விட
உன் மதியால்
உன் வாழ்க்கையை
எளிதாக மாற்றிவிடலாம்....
தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்காதே...
தோல்வியிலிருந்து
கற்றுக்கொள்ள வேண்டியது
நிறைய இருக்கிறது..!!
MOTIVATIONAL QUOTES IN TAMIL TEXT;
வாழ்க்கையில் பெரிதாய் ஒன்றும் ஆசை என்பது எனக்கு இல்லை; ஆனால் என்னை அவமானப்படுத்தியவர்கள் முன்பு என் தலை நிமிர்ந்து வாழ்ந்து விட்டு தான் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பதிவை படிப்பவர்கள் ஏராளம் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்! அதனால் தான் இந்த பதிவு ஒரு தெளிவான பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
"பின்னால் பேசுபவன்
புகழ்ந்து பேசினால் என்ன...
இகழ்ந்து பேசினால்
என்ன...
அடுத்த அடி எடுத்து
வைத்து முன்னேறிக்
கொண்டே இரு".
எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கையிலும் எப்போது
எல்லாம் மாறும் என்ற
ஆவலுடனும் தான்
ஒவ்வொரு நாளும் கடந்து
செல்கிறது நம் வாழ்வில்.
பெரிதாக ஒன்றும்
ஆசை இல்லை....
பொய் பேசாத வாயும்
நோயில்லதா வாழ்வும்
அடுத்தவர் சிரிக்காத வண்ணமும்
அடுத்தவர் கண்ணீர்க்கு
காரணமாகமலும்..!!
இருப்பதை இழக்காமலும்
இழந்ததை நினைக்காமலும்
கடனில்லாத வாழ்க்கையும்
கடந்து சென்று விட்டால் போதும்..!!
எல்லாத்தையும் எல்லார்
கிட்டையும் சொல்ல வேண்டாம்,
சிலருக்கு கேட்க காதுகள்
இருக்குமே தவிர, புரிந்து
கொள்ள மனம்
இருப்பதில்லை..!
பாறாங்கல் அறியவில்லை,
தன்னை சுமப்பது #பூ என்று..!
வசதியான
வாழ்க்கைக்கு
ஆசைப்படுவதை விட!
நிம்மதியான வாழ்க்கைக்கு
ஆசைப்படுங்கள்!
"கோபத்தில்"
நாக்கு வேலை செய்யும்
அளவுக்கு
மூளை வேலை செய்யவது
இல்லை...
அஞ்சியும் வாழாதே
கெஞ்சியும் வாழாதே...
உனக்கான
வாழ்க்கையை
உண்மையாய்
நேர்மையாய் வாழ்!!!
BEST MOTIVATIONAL QUOTES IN TAMIL;
உங்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழம்பி இருக்கிறீர்களா? உங்களுக்கு தெளிவான முடிவை எடுக்க நல் வார்த்தைகள் தேவைப்படுகிறதா? இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம் நாங்கள்.
வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சியாக
இருக்க வேண்டுமானால்
எந்த உறவிடமும்
எதையும்
எதிர் பார்க்காதீர்கள்.
ஊசியும் மனிதர்களும்
மிகவும்
ஒற்றுமையானவர்கள்.
கோர்த்து விடுவதிலும்...
குத்திக் காட்டுவதிலும்...!
வாழ்க்கையில்
பணத்தை
தொலைத்தவர்களை விட
பணத்துக்காக
வாழ்க்கையை
தொலைத்தவர்கள்
அதிகம்...!
விலக நினைக்கிற
உறவை தடுக்கவும்
கூடாது..
விலகி போன உறவை
தேடி போகவும்
கூடாது..
ஒரு நகைச்சுவையை
நினைத்து பத்து
முறை சிரிக்க முடியாதவர்கள்
ஒரு துயரத்தை நினைத்து
நூறு முறை
அழுகிறார்கள்...
யதார்த்தம்
உங்களுக்காக சிரிக்கும்
உதடுகளைவிட உனக்காக
அழும் கண்களை நேசி,
அது உப்பாக இருந்தாலும்
உண்மையாக இருக்கும்.
LIFE SUCCESS MOTIVATIONAL QUOTES IN TAMIL;
என்னதான் வாழ்க்கை உங்களை அழ வைக்க நினைத்தாலும் சிரித்துக்கொண்டே இருங்கள் அப்பொழுதுதான் வாழ்க்கையை உங்களால் முழுவதுமாக ரசிக்க முடியும். இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. துன்பம் சொல்லும் பாடமே இன்பம். இன்பத்தின் மிகுதியே துன்பம். இதை உணர்ந்தால் உங்கள் வாழ்க்கை ஒளி பிம்பம் 🌄
நடிப்பவர்கள்
கோபப்படுவதில்லை
கோபப்படுவர்களுக்கு
நடிக்க தெரிவதில்லை
சமைக்கும் போது
அம்மாவின் அருமையும்..
சம்பாதிக்கும் போது
அப்பாவின் அருமையும்,
தெரிகிறது!
கற்றதை மறந்தாலும்........
வாழ்க்கையில் மறக்காதே........
பட்டதை
துணியாத வரை
வாழ்க்கை பயங்காட்டும்,
துணிந்து பார் வாழ்க்கை
வழி காட்டும்..!!
எந்த இடத்தில் உன்னை
வேண்டாம் என்று ஒதுக்கி
வைக்கிறார்களோ...
அதே இடத்தில் இறைவன்
உன்னை செதுக்கி உயர்த்தி
வைப்பார்...
கலங்காதே!!
நமக்கு பிரச்சனைகள்
அதிகரிக்கும் போது நாம்
அதிகரித்துக்கொள்ள
வேண்டியது கோபத்தை
அல்ல நிதானத்தை
Time Motivational Quotes in Tamil
வாழ்க்கையில் யாரும் இல்லாமல் தனியாக நிற்கிறோம் என்று தோன்றுகிறதா? அழுகை கண்ணை ஆர்ப்பரித்துக் கொண்டு நீர்வீழ்ச்சியாய் கொட்டுகிறதா? இதயத்தில் இடி வந்து விழுவது போல் வலிக்கிறதா? தனிமை உங்களை சுடுகிறதா? தன்னம்பிக்கை தீ தேவைப்படுகிறதா? இந்த பதிவு உங்களுக்கானது தான் படித்து மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.
தனியே
நின்றாலும்
தன்மானத்தோடு நில்!
சுமையான பயணமும்
சுகமாகும்!
வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா?
என்று தெரியவில்லை ஆனால்....
ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான்
வாழ்க்கையயே மாற்றிவிடும்..-
மகிழ்ச்சியின் ரகசியம்..
விரும்புவதை செய்வது
வெற்றியின் ரகசியம்..
செய்வதை விரும்புவது!
நம் கைகளை சோம்பேறியாக்கிக்
கொண்டால்,பிறர் கைகளை
எதிர்பார்த்து காத்திருக்கும்
அவலநிலைக்கு ஆளாவோம்..!!
தனிமைகள் கிடைப்பது
உன்னை நீ தெரிந்து கொள்ள...!!
தவறுகள் நடப்பது உன்னை
நீ திருத்திக் கொள்ள..! முயற்சிகள்
எடுப்பது உன்னை
நீ முன்னேற்றிக் கொள்ள..!!
இதுவரை நடந்ததை
யோசிப்பதை விட.
இனி எப்படி நடக்க வேண்டும்
என யோசிப்பவர்களே வாழ
தெரிந்தவர்கள்.
Positivity Motivational Quotes in Tamil:
நம் வாழ்க்கையில் நமக்கு கெட்ட நிகழ்வுகள் மட்டுமே நடக்கும் பொழுது மணமானது நேர்மறையான சிந்தனைகளை சிந்திக்க மறுக்கிறது அந்த நேரங்களில் எல்லாம் நாமாகவே முன்வந்து நேர்மறையான சிந்தனைகளை நம் மனதில் விதைக்க வேண்டியது அவசியமாகிறது அந்த ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா உங்களுக்கானது தான் இந்த பதிவு.
அடுத்தவர் விரும்பியபடிதான் பேச
வேண்டுமானால் பொய்தான்
பேச வேண்டும்...
அடுத்தவரின் விருப்பத்திற்கே
வாழ வேண்டுமானால்
நடிக்கத்தான் வேண்டும்!
என் முயற்சிகள் என்னைப் பலமுறை
கைவிட்டதுண்டு. ஆனால், நான்
ஒருபோதும் என் முயற்சியை
கைவிட்டதில்லை
- தாமஸ் ஆல்வா எடிசன்
இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும்
அது அதிசயம்...!!
இருப்பவனுக்கு எது கிடைத்தாலும்
அது அலட்சியம்...!!
கோபப்பட வேண்டிய
இடத்திலும்
கதறி அழ வேண்டிய
இடத்திலும்
புன்னகையுடன் கடந்து
செல்வதற்கு பெயர் தான்
பக்குவம்..
உன்னை மதிப்பவரிடம்
தாழ்ந்து பேசனும்...
உன்னை மிதிப்பவரிடம்
வாழ்ந்து பேசனும்...!!
இந்த உலகில்
நமக்கென யார்
இருக்கிறார்கள்
என்று யோசிப்பதைவிட
நம்மை நம்பி யார்
இருக்கிறார்கள் என்று
யோசியுங்கள்
வாழ்க்கை மாறும்..
Student Motivational Quotes in Tamil:
தேர்வு உங்களை பயமுறுத்துகிறதா? தேர்ந்தாலும் வாழ்க்கை உங்களை பயமுறுத்துகிறதா? என்ன செய்கிறோம் என்ற கேள்வியும் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியும் உங்களை வாட்டுகிறதா? வாழ்க்கை வதைக்கிறதா? உங்களுக்கானது தான் இந்த பதிவு படித்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் வளமாய்.
உன் அழுகை தெரியாது
உன் சிரிப்பை
கவனிப்பார்கள் . உன்
வறுமை தெரியாது நீ
உடுத்தும் உடையை
கவனிப்பார்கள் ..உன்
வலி தெரியாது உன்
மீதான விமர்சனம்
குறையாது..நீ
வீழ்ந்ததும் எழுந்ததும்
தெரியாது !!!
இவர்கள் தான் அந்த
நாலு பேர்
இவர்களுக்காக
வாழ்வதைவிட
உனக்காக வாழ்ந்து
விட்டு போ....
மற்றவர்கள்
அசந்து போகும்படி
வாழ்வதல்ல
வாழ்க்கை...!
நாம்
ஆசைப்பட்டது
போல் ...!!
அமைதியாக
நிம்மதியாக
மகிழ்ச்சியாக
வாழ்வதே
வாழ்க்கை...!!!
நேர்மையாக வாழ்ந்து பார்
தைரியம் தானாக வரும்
உன் எண்ணம்
விண்ணைத்
தொட வேண்டுமென்றால்
உன் வியர்வை
மண்ணைத்
தொட வேண்டும்.
உன்னை வீழ்த்தும்
அளவிற்கு விதிகள்
எழுதப்பட்டிருந்தால், விதிகளை
வீழ்த்தும் அளவிற்கு வழிகளும்
நிறுவப்பட்டிருக்கும்
தளறாதே துணிந்து செல்!
முடியும் என்ற வார்த்தைக்கு
இடம் கொடுங்கள்! முடியாது
என்ற வார்த்தை தானாகவே
சென்று விடும்!
"எழுந்து நடந்தால்
இமயமலையும் நமக்கு வழி
கொடுக்கும்..!!
உறங்கிக்கிடந்தால்
சிலந்தி வலையும் நம்மை
சிறைப்பிடிக்கும்..!!!
வாழ்க்கையில் நம்பிக்கை
இருக்கணும்...
யாரையும் நம்பித்தான்
இருக்கக்கூடாது...!
உயர்ந்த
எண்ணங்கள்...!!
உயர்ந்த இடத்திற்கே
அழைத்து செல்லும்...!!
அன்பு வைத்திருப்பவர்களை
பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்...
பயன்படுத்தி கொள்ளாதீர்கள்.
![]() |
Motivational quotes in Tamil |
Tamil Motivational Quotes with pictures
இருப்பவன் இல்லாதவனை
போல் நடிக்கிறான்...
இல்லாதவன் இருப்பவனைப்
போல் நடிக்கிறான்...
நடிப்பதே வாழ்க்கை
என்றாகிவிட்டது...
பாழாய் போன
மனித வாழ்க்கை...
நம்மை தவறாக
நினைத்து விட்டார்களே
என புலம்பாமல்
நம்மை அவ்வளவுதான்
புரிந்து வைத்துள்ளார்கள்
என விலகிவிடுவது
சிறப்பான பதிலடி...
நன்றாக பேசுகிறார்கள்
எல்லாம் நமக்கு
நல்லதை செய்வார்கள் என நினைக்காதே......
தேளின் கொடுக்கில் மட்டுமல்ல.....
தேனியின் கொடுக்கிலும்
விஷம் உள்ளது....
மண்ணில்...வாழதான்
பணம் வேண்டும்...
மற்றவர்... மனதில்
வாழ... நல்ல
குணமிருந்தாலே போதும்..
Love Failure Motivational Quotes in Tamil
நினைப்பவர்களிடம் நீ தூசியாகவே
இருந்து விடு...
உன்னை தூசி என்று அவர்கள்
கண்ணில் படும் போதெல்லாம்
கண் கலங்குவார்கள்... ஏன்
தூசியென நினைத்தோம் என்று...!
தவறு செய்பவர்களைத் திருத்தி
விடலாம்..! ஆனால்.. அதை
நியாயப்படுத்துபவர்களை
ஒருபோதும் திருத்த முடியாது..!
உண்மைகள் எப்போதும்
நிராகரிக்கப்படும்
வெறுக்கப்படும்
ஒதுக்கப்படும்
மறைக்கப்படும்
ஆனால்
நிச்சயம் ஒரு நாள்
வெளிப்படும்!
வானம் என்றால்
ஆயிரம் நட்சத்திரங்கள் வரும்
வாழ்க்கை என்றால்
ஆயிரம் துன்பங்கள் வரும்
சூரியன் வந்தால்
நட்சத்திரங்கள் மறைவது போல்
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் அனைத்தும்
மறந்து போகும்
உங்களை நேரடியாக
எதிர்க்க தைரியம்
இல்லாதவர்கள் பயன்படுத்தும்
ஒரே ஆயுதம்
உங்களைப் பற்றிய
பொய் வதந்திகள்
குடித்தவன் குடும்பம்
தெருவில் இருக்கும்...
தயாரித்தவன் குடும்பம்
மாளிகையில் இருக்கும்..
படித்ததில் பிடித்தது.
One Line Motivational Quotes in Tamil
காரணத்தை உருவாக்கி
நம்மை வெறுக்கும்
உறவுகளை விட
காரணம் இல்லாமல்
நம்மை நேசிக்கும்
உறவுகளை மட்டும் என்றும்
மறந்து விடாதே..!!
வாழ்க்கையில
சந்தோஷமா.
இருக்க சிறு தருணம்.
கிடைச்சர் கூட தவற
விடாதீங்க.
அந்த காலங்கள்
திரும்ப வராது.
போனால்.
வாழ்க்கை எதார்த்தம்:
சிறு தலைவலியைக்கூட
ஆயிரம்பேர் விசாரிப்பான்.
பணம் நிறைய இருந்தால்,
பணம் இல்லன்னா, செத்து
கிடந்தாக்கூட ஒருபய
எட்டிபார்க்க மாட்டான்.
Download Motivational Quotes Pdf
![]() |
Motivational Quotes pdf Document free to download |
நான்கு விஷயங்களை
உடைத்து விடாதே!!
அன்பு, நட்பு, நம்பிக்கை,
இதயம், இதில்
எது உடைந்தாலும்
சத்தம் கேட்காது, வலி
அதிகம்.....
படித்து மகிழும் அனைவருக்கும் நன்றி
பதிலளிநீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குSuper motivative quoted
பதிலளிநீக்குதன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கவிதைகள் அமைந்துள்ளது
பதிலளிநீக்குMotivational Quotes are Really amazing👌
பதிலளிநீக்குgoosebumps moments to read this Quotes
பதிலளிநீக்குnice motivative quotes
பதிலளிநீக்கு