காதலர் தின வரலாறு மற்றும் வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

காதலர் தின வரலாறு;

பிரபலமான ரோம் நாட்டில் கி.பி 270 ஆண்டு போர் நடந்து கொண்டிருந்தது.அந்த நேரத்தில் ரோம் நாட்டின் மன்னனாக இருந்த கிளாடியஸ் என்ற மன்னன் ராணுவ வீரர்கள் தங்கள் காதலிகளுடன் இணைவதை தடை செய்திருந்தான் ஏனென்றால் காதலியுடன் இணையாத காதலர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக கிளாடியஸ் நினைத்தார்.

ஆனால் அதே நேரத்தில் ரோமில் வாழ்ந்து வந்த வேலண்டைன் எனும் பாதிரியார் ஒருவர், ராணுவ வீரர்களுக்கு அவர்கள் விரும்பிய பெண்களுடன் ரகசியமாக கிளாடியஸ் மன்னருக்கு தெரியாத வண்ணம் திருமணம் செய்து வைத்தார்.

இதையறிந்த கிளாடியஸ் மன்னன் வேலண்டைன் எனும் பாதிரியாரை சிறையில் அடைத்தார்.சிறையில் இருந்த வேலண்டைக்கு அங்கு சிறைக்காவலர் ஒருவரின் மகளின் மீது காதல் ஏற்பட்டது.அந்த பெண்ணுக்கு சிறையில் இருந்த காலத்தில் வேலண்டைன் கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில் ஃப்ரம் யுவர் வேலண்டைன் என்று எழுதி அனுப்புவாராம்.இதுவே பின்னாளில் வேலண்டைன்ஸ் டே கொண்டாட காரணமாக இருந்தது என்றும்.வேலன்டைன் என்ற பாதிரியாரின் நினைவாகவே வேலண்டைன்ஸ் டே கொண்டாடப்படுகிறது என்றும் கூறுகின்றனர். 


Valentine's day wishes quotes in Tamil


காதலர்கள் தின வாழ்த்து கவிதைகள்;

காதலிக்கும் அனைவருக்கும் காதலிப்போரை வேடிக்கை பார்க்கும் காதலிக்காக கன்னியருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.காதலிக்க அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை,காதலிக்க வாய்ப்பு கிடைத்த காதலர்கள் அனைவரும் கணவன் மனைவி ஆவதில்லை,காதலித்து கணவன் மனைவி ஆன அனைவரும் காதலோடு காலம் முழுவதும் வாழ்வதில்லை இது உண்மை என்று அனைவரும் நினைப்பதில்லை.வாழ்க்கையில் காதல் தான் எல்லாம் என்றிருக்காமல் காதலுக்காகத் தான் எல்லாம் என்றும் இருக்காமல் வாழ்க்கை என்றால் காதலும் இருக்கும் என்று வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை அழகாகும்.


இன்றைய காதலர்கள் நாளைய 

கணவன் மனைவியாகவும் 

இன்றைய கணவன் மனைவிகள் 

எப்பொழுதும் காதலர்களாகவும் 

வாழ்ந்திட இனிய காதலர் தின 

நல்வாழ்த்துக்கள்


Valentine's day wishes quotes in Tamil


காதலில் சுயநலம் என்பது நீ எனக்கு மட்டும் தான் நான் எனக்கு மட்டும் தான் என்ற பரஸ்பர புரிதல் உணர்வில் மட்டுமே இருக்கும்.இவள் எனக்கானவள்,இவன் எனககானவன் என்ற எண்ணமே காதலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உணர்வு ஆகும்.நீ இல்லாமல் நான் இல்லை என்பதை விட நீயும் நானும் இல்லாமல் நமக்கான வாழ்க்கை இல்லை என்பதை பரஸ்பரமாக இருவரும் உணர்வதே காதல்.


உயிராக காதலித்த பெண்ணை உயிர் 

கொடுத்த பெற்றோரின் ஒப்புதலுடன் 

திருமணம் செய்தால் உங்கள் 

காதலும் கண்ணியம் ஆகும்


Lovers Day wishes quotes in Tamil

இனிய காதலர் தின வாழ்த்து கவிதைகள் காதலர்களுக்காக மட்டும் எழுதப்படுவது அல்ல.காதலை புனிதமாக நினைகுகும் காதலிக்காதவர்களுக்காகவும் பதிவிடப்பட்டுள்ளது.காதலியையோ காதலனையோ நேசிப்பது போல் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் கனவுகளையும் உங்களுக்காக கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் பெற்றவர்களையும் நீங்கள் நேசிக்க தொடங்கினால் உங்கள் வாழ்க்கை இன்னும் இன்னும் அழகாகும்.காதல் எவ்வளவு ஆழமானது என்று அதில் முழ்கியிருப்பவர்களுக்கு தெரிவதில்லை,ஏதோ ஒரு சூழ்நிலையில் அதிலிருந்து வெளியே வந்தவர்களுக்கு தான் தெரியும்.


ஒரு பார்வையில் காதலித்தவர்களை 

விட இங்கே ஒரு வார்த்தையில் 

காதலை முறித்தவர்கள் தான் அதிகம்


வேலன்டைன்ஸ் டே வாழ்த்து கவிதைகள்

முதல் காதல் என்பது இந்த உலகில் ஜனித்த எந்த உயிராலும் மறக்க இயலாது.முதல் காதல் என்பது பசுமரத்தாணி போல மனதில் பதிந்து இதயம் இறக்கும் வரை இதயத்துடிப்பாய் துடித்துக்கொண்டே இருக்கும். எவ்வளவு தான் மகிழ்ச்சியால் உள்ளம் நெகிழ்ந்தாலும் ஒரு நீண்ட பயணத்தில் சின்ன சின்னதாய் வரும் வேகத்தடை போல் வாழ்க்கையை சில நேரங்களில் தடுக்கி விடும்.ஆனால் முதல் காதலில் வெற்றி பெற்றார் வெகு சிலரே வாழ்க்கையில்.


Valentine's day wishes quotes in Tamilமுடிந்த வரை முதல் காதலில் வெற்றி 

பெற்று விடுங்கள் ஏனெனில் 

வாழ்க்கையே முடிந்தாலும் முள்ளாய் 

நெஞ்சை குற்றுவது இந்த முதல் 

காதல் தான்.


காதலுக்கு வாழ்த்து கவிதைகள்

வன்மம் என்ற ஒரு உணர்வு இல்லாத ஒரு உறவு பெற்றவர்க்கு பிறகு இந்த காதலில் மட்டுமே காண்பதில்லை.காதலியின் ஸ்பரிசம் காதலனின் சுவாசம் ஆகிறது இங்கே.காதல் எல்லோர் மீதும் வருவதில்லை.ஆனால் எல்லோர் மீது காதலி மீதோ காதலன் மீதோ காட்டும் அளவிற்கு அன்பு இருந்தால் வாழ்க்கை அழகாகும்.வாழ்க்கை தரும் வரங்களில் ஒன்று தான் இந்த காதல்.நான் உன்னை நேசிக்கிறேன் என்ற 

வார்த்தையில் உன்னுடைய 

உணர்வுகளையும் மதிக்கிறேன் 

என்று பிடித்தவரை உணர வைத்தால் 

உங்கள் காதல் நிச்சயம் வெற்றி 

பெறும்காதலர் தின வாழ்த்துக்கள்

காதலை வெளிப்படுத்தாமல் கடைசி வரை உள்ளத்தில் சுமந்து உருகிக் கொண்டிருக்கும் ஒரு தலை காதலர்கள் கூட உன்னதமானவர்கள் தான்.உயிருக்குள் இன்னொரு உயிரை சுமக்கும் ஒவ்வொரு காதலனும் காதலியும் ஒரு தாய்க்கு சமமானவர் தான்.ஆம் உடம்பில் இன்னோர் உயிரை சுமப்பது ஒரு தாயால் மட்டுமே முடியும்.காதல் என்பது வாழ்க்கை போன்றது தான் அதில் ஆயிரம் சிரமங்களும் சித்ரவதைகளும் வரங்களும் வாழ்த்துக்களும் கிடைக்கும்காதல் என்ற மூன்றெழுத்தை இந்த 

உலகம் கொண்டாட காரணம் அதில் 

ஆத்மார்த்தமாக அடங்கியுள்ள அன்பு 

என்ற மூன்றெழுத்து தான்


காதலர்களுக்கு வாழ்த்து கவிதைகள்


காதல் புனிதமானது.காதலால்தான் இந்த உலகம் சுற்றி கொண்டிருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர் இது உண்மையா என்றால் உன்மை என்றே கூற வேண்டும்.ஏனென்றால் ஒரு ஆணோ பெண்ணோ தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது காதலித்திருப்பார்கள் இல்லை என்று சொல்வோர் அவர்களுடைய மனதிற்குள் ஆமாம் என்று சொல்லிக் கொள்வார்கள் அதுவும் யாரும் இல்லாத நேரத்தில்.சிலர் என் காதலி தான் என் உலகம் என் காதலன் தான் என் உலகம் என்கிறார்கள்.இது உண்மையெனில் தன் காதலிக்கோ காதலனுக்கோ ஒரு உலகம் உள்ளது அதில் அவளுக்காகவோ அவனுக்காகவோ அம்மா, அப்பா அண்ணன் தங்கை என்ற ஒரு குடும்பம் உள்ளது.அவர்களுடைய உலகையும் உள்ளத்தையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அந்த காதல் நிச்சயம் வெற்றி அடையும்.


காதல் என்பது என்னவென்று‌ 

ஆயிரம் பேர் ஆயிரம் விளக்கம் 

சொல்லலாம் ஆனால் காதல் என்பது 

விளக்கமற்றது என்பது தான் 

உண்மை.


Valentine's day wishes quotes in Tamil


Lovers Day Quotes For Lovers

அன்பின் வடிவங்களில் ஒன்று தான் காதல்.காதலின் பரிமாணங்களில் ஒன்று தான் இதில் எது உண்மை என்று சிந்திப்பவரின் சிந்தையில் தான் உள்ளது.மனதின் உணர்வுகளில் ஒன்று தான் இந்த காதல் ஆனால் காதல் என்ற ஒரு உணர்வு ஒட்டுமொத்த மனதையே கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.காதலை கடைசி வரை நினைத்திருக்க காரணம் காதலித்த வருங்கால அல்ல,காதல் என்ற உணர்விற்காக.

சூழ்நிலையால் பிரிந்தாலும் இதயம் 

சூழ்ந்த அன்பை இதயத்தின் இறுதி 

நொடி வரை நினைத்துக் 

கொண்டிருப்பது தான் உண்மையான 

காதல் 


 காதலுக்கு வாழ்த்துக்கள்

உன்னை உயிருள்ள நினைத்துக் கொண்டிருப்பேன் என்பதை விட உன் மேல் உயிருள்ளவரை உயிராய் இருப்பேன் என்ற உணர்வு உயர்வானது.உன்னோடு வாழாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை காதல் இல்லை.உன்னோடு இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையே மெய்.


உங்கள் காதலியோ காதலனோ 

கலராக இருக்கிறார்களா என்று 

பார்க்காதீர்கள்; நீங்கள் அழும் போது 

உங்கள் கண்ணீரை துடைக்கும் 

கருணை அவர்களிடத்தில் 

இருக்கிறதா என்று பாருங்கள்


காதலுக்கு வாழ்த்துக்கள்

என்னை விட உன்னை அதிகமாக நேசிப்போர் இங்கு யாருமில்லை என்ற உணர்வை ஒருவருக்கு ஏற்படுத்திவிட்டால் உன் காதல் ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது.அதே சமயம் ஒரு உணர்வை கொடுப்பது மிகவும் எளிமையான விஷயம் ஆனால் அந்த உணர்விற்கு உண்மையாக இருப்பது மிகவும் கடினம்.காதலின் கடமையாற்றுங்கள் கண்ணியத்துடன


Valentine's day wishes quotes in Tamil


நேசிக்கும் பெண்ணுக்கும் நெஞ்சம் 

இருக்கும் என்பதை நினைத்து 

பழகுங்கள் அது தான் காதலுககு 

மரியாதை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top