தன்னம்பிக்கை கதைகள்-பற்று படுத்தும் பாடு

Vizhimaa
0

Stress Relief Motivational Stories in Tamil-தன்னம்பிக்கை தரும் தத்துவ கதைகள்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு குறிக்கோள் இருக்கும்.அதை சுற்றியோ அல்லது பின் தொடர்ந்தோ தான் நம் வாழ்க்கையானது நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த நகர்தல் தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் வேகமானதாக இருக்கிறது.எல்லோரும் இந்த வேகத்தில் பலரின் மனது காணப்படுகிறது,உடைந்து போகிறது.என்னதான் குறிக்கோளை நோக்கி ஓடினாலும் சில நேரங்களில் சில தேவையற்ற ஆசைகளாலும் மனமானது ரணமாகிறது.எவ்வளவு தான் உள்ளம் அடைந்தாலும் ஏதேனும் தத்துவ நிகழ்வுதான் நம்மை மேலும் பலமடையச்செய்கிறது.அந்த வகையில் இந்த கதை ஒரு ஆகச் சிறந்த தத்துவத்தின் மேல் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.


One minute motivational stories in Tamil


கதையின் தலைப்பு


தன்னம்பிக்கை கதைகள்-பற்று படுத்தும் பாடு-Stress Relief Motivational Stories in Tamil


கதையின் மாந்தர்கள்


தந்தை,மூன்று மகன்கள்,வியாபாரி


கதைக்களம்


தன் வாழ்க்கையை தன் மூன்று மகன்களோடும் சிறப்பான முறையில் நிம்மதியாக வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தந்தையின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறிய நிகழ்வை நம் வாழ்க்கையில் நடக்கும் பெரிய நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது இந்த கதை


கதை-Stress Relief Motivational Stories in Tamil

தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தார் நம் காதாநாயகனான தந்தை.இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.இவர் சாதாரண  வீடியோ கேசட் கடை ஒன்றை அவர் ஊரில் நடத்தி வந்தார்.இவரின் வருமானமோ அளவுக்கு அதிகமாக இல்லையென்றாலும் தேவைக்கு ஏற்ப போதுமான அளவு வந்து கொண்டிருந்தது.


ஒருவர் ஒரு தொழில் செய்து கொண்டிருக்கிறார் என்றால், அவரை அனைவரும் அவரின் தொழிலை வைத்த அழைப்பது பொதுவான நடைமுறையே. உதாரணத்திற்கு ஒருவர் தையல் கடை வைத்திருந்தால் அவரை தையல் கடைகாரர் என்றும் அதுவே ஒருவர் நகை கடை வைத்து இருந்தால் நகை கடைக்காரர் எனவும் அழைப்பதுண்டு. ஆனால் இந்த நபரின் விஷயத்தில் அது முற்றிலும் மாறுபாட்டது. இந்த ஊரிலுள்ள அனைவரும் இவரை வீடியோ கேசட் கடைக்காரர் என்று ஒருநாளும் அழைத்ததில்லை. மாறாக இவருக்கு அந்த ஊரிலேயே மிகவும் அழகான மற்றும் அனைத்து வசதிகளையும் உடைய மிகவும் பழைமையான மெத்தை வீடு ஒன்று சொந்தமாக இருந்தது. இவரும் இவரது மூன்று மகன்களும் அந்த மெத்தை வீட்டில்தான் வசித்து வந்தனர். அந்த மெத்தை வீடு பார்த்த அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போய்விடும், அவ்வளவு நேர்த்தியான வீடு அது. அதனால் அந்த ஊரில் உள்ள எல்லோரும் இந்த நபரை மெத்தை வீட்டுக்காரர் என்றே அழைத்து வந்தனர். 


இவருக்கும் அந்த பெயர் மிகவும் பிடித்துப்போனது ஏனென்றால் இவருக்கும் அந்த வீட்டின் மீது ஒரு இனம்புரியாத அன்பு இருந்தது. ஏனென்றால் இந்த வீட்டில் தான் அவருடைய அம்மா மற்றும் மனைவியோடு இவர் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களின் நினைவுகளும் அடங்கியிருந்தது. ஆனால் இப்பொழுது அவருடைய அம்மாவோ அல்லது மனைவியோ அவருடன் இல்லை. அதனால் அந்த வீட்டின் மீது அவருக்கு தனி அன்பு இருந்தது. அவருடைய மூன்று மகன்களும் அவரை நன்றாகவே பார்த்துக் கொண்டனர். ஒருநாள் இந்த நபர் தன் இரண்டு இளைய மகன்களுடன் பட்டணம் வரை சென்று வருவதாக கூறிவிட்டு தன் மூத்த மகனை கடையை பார்த்துக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் மூத்த மகனோ கடைக்கு செல்லாமல் வேறெங்கோ சென்றிருந்தான்.


அந்த மெத்தை வீட்டுக்காரர் பட்டணம் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை நிலை குலைய செய்தது என்னவென்றால் அவரின் ஆசை ஆசையான அன்பிற்கு மிகுந்த அந்த மெத்தை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை அந்த ஊர் மக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த வீடு ஏற்கனவே பாதி நன்றாக எரிந்துவிட்டது இதற்கு மேல் அந்த வீட்டை காப்பாற்ற வழியே இல்லை. அந்த வீடு அந்த அளவிற்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது இதை பார்த்த அந்த மெத்தை வீட்டுக்காரருக்கு நெஞ்சில் இடி விழுந்தது போல் இருந்தது. நெஞ்சம் கனத்துப் போனார், என்ன செய்வதென்றே தெரியவில்லை கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.


One minute motivational stories in Tamil


அங்கிருந்த ஊர்மக்கள் அனைவரும் அவரை பரிதாபத்தோடு பார்த்தனர். இவருக்கு இப்படி ஒரு நிலையா என்று அனைவரும் மலைத்துப் போயினர். மெத்தை வீட்டுக்காரரும் வீட்டின் அருகில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்து கதறிக் கதறி அழுது கொண்டிருந்தார். இதைத்தவிர இப்பொழுது அவருக்கு வேறு வழியே இல்லை. வாழ்க்கையில் எல்லாம் தன்னை விட்டுப் போனதாக எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். இனி அவருக்கு வாழ்க்கையே இல்லை என்ற அளவுக்கு சோகம் உற்றார். அந்த வீட்டின் மீது அவருக்கிருந்த அன்பும் பாசமும் அவரை முற்றிலுமாக நிலைகுலையச் செய்தது. இப்பொழுது கடையை பார்த்துக் கொள்ளாமல் எங்கோ வெளியே சென்றிருந்த அவருடைய மூத்த மகன் வீட்டிற்கு வந்தான்.


வீட்டிற்கு வந்து அந்த மெத்தை வீடு எரிவதை பார்த்து அவன் பேர் அதிர்ச்சி அடைந்தான். உடனே தன் தந்தையை தேடி ஓடினான், அந்த இடத்தில் அப்பா நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் அதற்கு அந்த மெத்தை வீட்டுக்காரர் இனிமேல் உன்னால் என்ன செய்ய முடியும் அதான் எல்லாம் போய்விட்டதே என்று கதறினார். அதற்கு அவருடைய மூத்த மகன் அப்பா நான் கடைக்கு செல்லவில்லை இந்த ஊரில் உள்ள பெரும் பணக்காரர் ஒருவரிடம் சென்று வந்தேன். அவர் நம் வீட்டை வாங்கிக் கொள்வதாக சொன்னார் எனக்கு அந்த வீட்டிற்காக முன்பணமும் கொடுத்திருக்கிறார். இனிமேல் இது நம் வீடு இல்லை அப்பா இது அவருடைய வீடு இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் அப்பா. இது இனி அந்த பணக்காரர் உடையது. அவர் எனக்கு முன்பணம் தந்து விட்டார். நீங்கள் இனி அழ வேண்டாம் என்று கூறினான். இதைக்கேட்ட மெத்தை வீட்டுக்காரர் ஒரு நொடியில் மனம் மாறினார் சட்டென அப்பொழுது இது நம் வீடு இல்லையா என்றார். அவருடைய மகனும் ஆமாம் அப்பா இனி இது நம் வீடு இல்லை என்று கூறினான் சற்று நிம்மதி அடைந்தார்.


மெத்தை வீட்டுக்காரர் அப்பொழுது சற்று மனம் அமைதி கொண்டார். அவருடைய மூன்றாவது மகன் அவரிடம் வந்தான் அப்பா அந்த பணக்காரர் நம் வீட்டை வாங்கிக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். முன்பணமும் தந்திருக்கிறார் ஆனால் நாம் மூவரும் கையெழுத்திட்டால் தான் இந்த வீடு அவர் பெயருக்கு மாற்றம் அடையும் அதுமட்டுமில்லாமல் அவர் முன் பணம் மட்டும் தான் கொடுத்திருக்கிறார் இப்பொழுது இந்த வீடு முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்து விட்டது. இனி இதை எப்படி அவர் வாங்கிக் கொள்வார். நாம் அந்த முன் பணத்தையும் அவரிடம் கொடுத்து தான் ஆக வேண்டும் இதற்கு மேல் அவர் இந்த வீடடை வாங்கிக் கொள்ள மாட்டார் இது நம் வீடுதான் அப்பா என்றான்.


இப்பொழுது மெத்தை வீட்டுக்காரருக்கு தலை மீண்டும் கிறுகிறுத்தது. மீண்டும் அழத் தொடங்கினார். அந்த வீட்டை நினைத்து நினைத்து அழத்தொடங்கினார். தன்னைவிட்டு எல்லாம் போனதாக நினைத்தார் ஒரே நொடியில் மீண்டும் அவருடைய மனமானது சோக கடலுக்குள் மூழ்கி போனது. 
அந்த நேரத்தில் மீண்டும் மூத்த மகன் வந்தான் அப்பா அந்த பணக்காரர் மிகவும் நேர்மையானவர் சொன்ன சொல் மாறாதவர். அவர் இந்த வீட்டை எப்படி இருந்தாலும் வாங்கிக் கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.


இது எறிந்து போனாலும் பரவாயில்லை நான் சொன்ன சொல்லுக்காக இதை வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் முன் பணத்தை தர வேண்டாம் நான் மீதி பணத்தை தந்து விடுகிறேன் என்று கூறி விட்டார் அப்பா. நீங்கள் அழ வேண்டாம் இது உண்மையில் இனி நம்முடைய வீடு இல்லை என்று கூறினான். இதைக் கேட்ட மெத்தை வீட்டுக்காரருக்கு மீண்டும் மனம் சற்று இலகுவானது இது நம்முடைய வீடில்லை என்ற எண்ணம் அவரிடத்தில் தோன்ற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டின் நினைவுகளை இவர் மறக்க ஆரம்பித்தார்.


கதையின் நீதிஅந்த மெத்தை வீடு எரிந்து போனதும் மெத்தை வீட்டுக்காரர் கதறி கதறி அழுதது ஏன்? அந்த வீடு அவருடையது என்பதற்காக, அவருடைய மூத்த மகன் வந்து இந்த வீட்டை ஒருவர் வாங்கி கொண்டார். இது இனி நம்முடைய வீடு இல்லை என்று சொன்னவுடன் வந்த அழுகை நின்று போனது ஏன்? அந்த வீடு அவருடையது இல்லை என்று மனம் நம்பியதனால், மீண்டும் அதே மறு நொடியில் அந்த வீடு அவருடையது தான் என்று இளையமகன் சொன்னதும் மீண்டும் கதறி அழுதது ஏன்? ஏனென்றால் மீண்டும் அந்த வீடு அவருடையது என்ற எண்ணம் அவருக்கு வந்ததினால், இறுதியாய் அந்த பணக்காரர் அந்த வீட்டை வாங்கிக் கொண்டார்.
One minute motivational stories in Tamilஇந்த நிலையிலும் அதாவது எரிந்த நிலையிலும் அந்த வீட்டை வாங்கிக் கொண்டார் என்று தெரிந்ததும் அவருடைய மனமானது மீண்டும் மாறியது. இதற்கெல்லாம் காரணம் என்ன அவர் அந்த வீட்டின் மீது வைத்திருந்த பற்று அதாவது அது தன்னுடைய வீடு என்ற ஆசையும் பற்றுமே அவரை அழைத்தது. 


அந்த வீடு தன்னுடையது இல்லை என்று தெரிந்த உடனே அது எறிந்தால் எனக்கென்ன என்ற மனநிலைக்கு மாறினார். அது மீண்டும் தன்னுடைய வீடுதான் என்று தெரிந்தவுடன் மீண்டும் அழத் தொடங்கினார் இதுவே ஒரு பொருளின் மீது நாம் வைத்திருக்கும் பற்றால் ஏற்படும் மனமாற்றங்கள் ஆகும்.அங்கே எந்த நிகழ்வுகளும் மாறவில்லை,எறிந்த வீடு எறிந்தது தான் ஆனால் மாறியது என்னவோ மெத்தைவீட்டுக்காரரின் மனநிலை தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top