குட்டி சிரிப்பு கதைகள்-வயசு என்ன?

Vizhimaa
0

குட்டி சிரிப்பு கதைகள்-வயசு என்ன?

எப்படி இருக்கீங்க சித்ரண்ணா உங்கள பாத்து ரொம்ப நாளாச்சே? நல்லா இருக்கீங்களா? என்று நலம் விசாரித்தார் நீண்டநாள் நண்பர் ஒருவர். அப்படி மறக்காமல் நலம் விசாரிக்க என்ன காரணம்? யார் இந்த சித்ரண்ணா?

குட்டி சிரிப்பு கதைகள்
சிரிப்பு கதைகள்

சித்ரண்ணா! சித்தர்க்குடி எனும் சிற்றூரின் அடையாளம். ஆம் சித்ரண்ணா இல்லாமல் ஒரு நிகழ்ச்சியும் கிடையாது. அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். எல்லோருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இவர் அனைவருக்கும் சமமான அளவு மரியாதையையும் மகிழ்ச்சியையும் கொடுப்பார். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதை மட்டுமே செயலாக கொண்டிருப்பார். அதனாலேயே சித்ரண்ணாவிடம் நகைச்சுவை குணம் கூடுதலாக இருக்கும். அந்த நகைச்சுவை குணத்தை அனைவரும் மிகவும் விரும்புவார்கள். 

அவருடைய நகைச்சுவை யாரையும் புண்படுத்தாது. அது எல்லோரையும் ரசிக்க வைக்கும். எல்லோரையும் சிரிக்க வைக்கும்.

சித்ரண்ணா என இவருக்கு பெயர் வைத்ததற்கு காரணம் இவருடைய தாத்தா பெரும் சித்தராக இருந்ததே ஆகும். சித்தர்க்குடி எனும்‌ ஊரின் மூத்த சித்தராக இருந்தவர் சித்ரண்ணாவின்
தாத்தா தான். 

இவருடைய தந்தை தன் மகனுக்கு தன் தந்தையுடைய பெயரை வைக்க வேண்டும் என்று விரும்பி சித்தர் என்றே பெயர் வைத்தார். பின்னாளில் இவரின் குணநலன்களால் கவர்ந்த மக்கள் இவரை அண்ணா என்றும் அழைத்தனர். வெகு விரைவாகவே இவருடைய பெயர் சித்ரண்ணா என்று மருவி எல்லோராலும் அழைக்கப்பட ஆரம்பித்தது. இவரும் சித்ரண்ணா என்ற பெயரை விரும்ப ஆரம்பித்தார்.

சரி ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிப்போமா?சித்ரண்ணாவின் நீண்ட கால நண்பர் ஒருவர் இவரை நலம் விசாரித்தார், எப்படி இருக்கிறீர்கள் சித்ரண்ணா? என்று கேட்டார். சித்ரண்ணாவும் நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். சித்ரண்ணா! என்ன வாழ்க்கை இது? ஓடிக் கொண்டே இருக்கிறது.ஓய்வே இல்லண்ணா என்று கூறினார் நண்பர். அதற்கு சித்ரண்ணா, ஓடினால் தான் வாழ்க்கை என்று கூறினார். நீங்கள் கூறுவதும் சரிதான்  உட்கார்ந்து விட்டால் என்ன இருக்கிறது ஓடித்தான் ஆகவேண்டும்.

சரி சித்ரண்ணா உங்களுடைய வயது என்ன? என்னுடைய வயது 30 என்றார் சித்ரண்ணா. அதற்கு அவருடைய நண்பர் நான் பத்து வருடங்களுக்கு முன்பு கேட்ட போதும இதே தானே சொன்னீர்கள்! ஆமாம் என்றார் சித்ரண்ணா. நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட போதும் இதை தானே சொன்னீர்கள்?இதற்கும் ஆமாம் என்றார். நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு கேட்ட போதும் கூட 30 வயது என்று தானே சொன்னீர்கள்! அட இரண்டு வருடங்கள் கழித்தும் கேட்கிறேன், இப்பொழுதும் அதே 30 வயதுதான் என்கிறீர்கள் என்ன சித்ரண்ணா என்னிடமே பொய் கூறுகிறீர்களா?

அட என்னப்பா நானா பொய் கூறுகிறேன்? நான் அன்று சொன்னதையே தான் இன்றும் சொல்கிறேன் அன்றும் முப்பது வயதுதான் இன்றும் முப்பது வயதுதான். எதையாவது மாற்றி கூறினேனா? நான் சொன்ன சொல் மாறாதவன் அல்லவா? அதனால்தான் 30 வயது என்கிறேன். இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையே என்று கூறினார்.

இதைக் கேட்ட நண்பரால் சிரிப்பை அடக்க முடியவில்லை சித்ரண்ணா உங்கள் நகைச்சுவைக்கு அளவே இல்லையா?


ஆமாப்பா நாட்டிலுளள பெரிய மனுஷங்க எல்லாரும் நான் சொன்ன சொல் மாறாதவர் சொன்ன சொல் மாறாதவன் என்கிறார்கள்! நானும் தான் சொன்ன சொல் மாறாதவன் அதை தான் இப்போ நான் சொன்னேன். இதுல என்ன இருக்கு


சித்ரண்ணாவும் நண்பரும் சேர்ந்து சிரித்தனர்.(நகைச்சுவை கதைகள்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top