உழைப்பாளர் தின வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

உழைப்பாளர் தின வாழ்த்து கவிதைகள்: ( மே தின கவிதைகள்)

Happy labor day wishes quotes in Tamil

உழைப்பவர்கள் எல்லோரும் உயர்ந்த இடத்திற்கு செல்வதில்லை; உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் யாரும் உழைக்க விரும்புவதில்லை - உழைப்பாளர்கள் தின வாழ்த்து கவிதைகள்



குடும்பத்திற்காக வீட்டுக்கு வெளியே உழைக்கும் அப்பாக்களுக்கும் வீட்டுக்குள்ளே உழைக்கும் அம்மாக்களுக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்



உழைப்பு என்ற ஒற்றை வார்த்தை உன் வாழ்க்கையை மாற்றிவிடும்



உழைப்பவன் கையில் உள்ள அழுக்கும் தங்கம், உட்கார்ந்து சாப்பிடுபவன் கையில் உள்ள தங்கமோ அழுக்கு:இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்



உழைப்பு ஒன்றே உயர்வை தரும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் என் இனிய உறவுகளுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்



விதியை நம்பி வாழ்வதை விட, உன்னை நம்பி உழைத்து பார், வாழ்க்கை வளமாகும்..‌.உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


ஓடி ஓடி உழைத்தாலும் 
எதுவும் ஒட்டவில்லை என
வருந்துவோர் வாழ்க்கையில்
எல்லா வளங்களையும் பெற்று
நலமுடன் வாழ இனிய உழைப்பாளர்
தின நல்வாழ்த்துக்கள்



இங்கு உழைப்பவர்களை விட
உழைப்பவர்களை சுரண்டுபவர்களே
அதிகம்...உழைப்பையும் உழைப்பவர்களையும் மதிப்போம்...



தேவைகளுக்காக மட்டும்
சம்பாதித்தால் தேவையில்லாத
உடல் நோய்களையும் மன உளைச்சலையும் தவிர்க்கலாம்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்



உழைப்பை மட்டும் அல்ல:உழைப்பவர்களையும் மதிப்போம் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்



உழைத்து உண்ண வேண்டும் என்ற  எண்ணம் எல்லோருக்கும் இருந்தால் உலகம் உன்னதமாகும்... உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்



உழைப்பின் மதிப்பை அதற்கு தரும் கூலியோடு மதிப்பிடுவது தவறாகும்.செலவிடும் நேரம் மற்றும் களைப்பை கொண்டு அளவிடுவது சிறப்பாகும்.



வாழ்க்கையை அழகாக்கும் என் வளமான உறவுகளுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்



அவரவர்க்காக உழைப்பவர்களை விட அடுத்தவர்களுக்காக உழைப்பவர்களே இங்கு அதிகம்:, உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்



சொந்த உழைப்பால் உயர்வு காண்பது ஒன்றே உன்னதமான செயல்



உழைப்பவனின் உள்ளமே உயர்ந்தது



உண்மையும் உழைப்பும் உருவாக்கும் உன்னையும் உன் வாழ்க்கையையும் நல்ல முறையில் நல்ல வழியில்...



உழைப்பில்லாமல் எதுவும் உருபெறாது இந்த உலகில்...



உழைப்பை நீ கைவிட்டால், வாழ்க்கை உன்னை கைவிட்டு விடும்...




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top