தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்:

தங்கமான‌ தமிழ்ச் சொந்தங்களுக்கு

இனிய தமிழ் புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்


புத்தாண்டிற்காக கொடுக்கும்

பூங்கொத்தை விட உங்கள்

புன்னகை அழகானது...இனிய

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


மனம் நிறைந்து

மங்களகரமாய் 

கொண்டாடுங்கள் இந்த

தமிழ் புத்தாண்டை

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிதைகள்

அறிவையும் அறிவியலையும்

அன்பையும் அழகியலையும்

வாழ்வியலில் நெறிப்படுத்தி

வாழ்வாங்கு வாழ்ந்த தமிழினத்தின்

புத்தாண்டு புதுநாளை மத்தாப்பான

மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்...


இதயம் சுமக்கும் வலிகளை

மெல்ல வருடி விடட்டும்

இந்த வசந்த கால புத்தாண்டு...


புதிதாய் பூத்த மலராய்

உள்ளத்திலும் இல்லத்திலும்

மகிழ்ச்சி நிறைந்திருக்க

இனிய தமிழ் புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்


காலைப் பனியை கலைத்து 

விடும் கதிரவனை போல்

காலம் உங்கள் கவலைகளை

கலைத்து விடும்... இனிய

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


பார் போற்றும் பெருமைகளை

தன் தலையிலும் அதை 

காப்பாற்றும் பொறுப்பை 

தன் தோளிலும் சுமக்கும்

தமிழர்களுக்கு இனிய

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தமிழ் மண்ணையும் 

தமிழ் மக்களையும் நேசிக்கும்

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு

நல்வாழ்த்துகள்


கடல் கடந்தும்

நிலம் கடந்தும்

நிலைக்கும் எங்கள்

தொப்புள் கொடி உறவுகளுக்கு

இனிய தமிழ் புத்தாண்டு 

நல்வாழ்த்துக்கள்


தமிழின் வழியது

உயர்நிலை ...

தமிழ் புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்


சொந்த பந்தங்களோடும்

சூழ்ந்த நற்சிந்தனைகளோடும்

கொண்டாடி மகிழுங்கள் தமிழ்

புத்தாண்டை


உன்னை உயர்த்துவது

நல்ல நேரம் அல்ல;

நல்ல எண்ங்களே,இனிய 

தமிழ் புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்


காலமும் நேரமும்

யாருக்காகவும் 

காத்திருப்பதில்லை

கடல் அலைகள் போல்

ஓய்வதுமில்லை

தமிழ் புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்


நேரமின்மையால் நேசித்த

உள்ளங்களை இழந்து விடாதீர்கள்;

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


கண்களில் சுமந்த‌ கனவுகளை

காலம் கையில் கொடுக்கட்டும்

இனிய தமிழ் புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்


சுற்றத்தோடும் உற்றத்தோடும்

சூழ்ந்த அன்பினால் மகிழ்ச்சி

காணுங்கள்... இனிய

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


கடவுளும் காலமும் ஒன்று

எல்லாவற்றையும் மாற்றக்கூடியது

இழந்தவர்களை தேற்றக்கூடியது

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


மேலும் புத்தாண்டு கவிதைகளுக்கு

இதைப் படிக்கவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top