உகாதி என்றால் என்ன?-தெலுங்கு வருடப்பிறப்பு 2022 வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

யுகாதி என்ற பெயரே காலப்போக்கில் மருவி 'உகாதி' என்றானது.ஒரு யுகத்தின் முதல் நாள் என்பதே யுகாதி என்பதன் பொருள் ஆகும்.தெலுங்கில் சைத்ரா மாதத்தின் முதல் நாளை தெலுங்கு வருட பிறப்பு என்று அழைக்கப்படுகிறது இதனை உகாதி என்றும் தெலுங்கு மக்கள் அழைத்து வருகின்றனர்.உகாதி அன்று வாசலில் வண்ணக் கோலமிட்டு வீடு வாசல்களை கழுவி புத்தாடை அணிந்து வண்ணப் பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் பூசி மற்றும் உகாதி என்ற ஒரு அறுசுவை  உணவையும் சமைத்து சாப்பிடுவர்.அதில் புளிப்பு,காரம், இனிப்பு, துவர்ப்பு,கசப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவை கொண்ட பதார்த்தங்களை சேர்த்து செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.

உகாதி பண்டிகை-தெலுங்கு வருடப்பிறப்பு 2022 வாழ்த்து கவிதைகள்

உகாதி பண்டிகை (ம) தெலுங்கு வருட பிறப்பு 2022 வாழ்த்து கவிதைகள்;

மொழிகளையும் இனங்களையும்
தாண்டி மக்களை இணைக்கும்
பண்டிகைகளை மனதார கொண்டாடி
மகிழ்வோம்-இனிய உகாதி நல்வாழ்த்துக்கள்


மகிழ்ச்சியால் உள்ளம்
நெகிழ்ந்து, மறையாத
செல்வம் சேர்த்து, குறையாத
சுற்றம் சேர்ந்து புது வருடத்தின்
முதல் நாளை பூத்த புது
மலராய் கொண்டாடி மகிழுங்கள்
இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்


அறுசுவை உணவு போல்
அனைத்து உணர்வுகளும்
கலந்தது தான் வாழ்க்கை
என்பதை உணர்ந்து எண்ணம்
போல் உயர்ந்து எண்ணியதை
எண்ணியதை எட்டிப் பிடித்திடுங்கள்
இந்த உகாதியில்...
இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்


வற்றாத வளமையோடும்
குன்றாத இளமையோடும்
தெகிட்டாத உறவுகளோடும்
இந்த உகாதியை உற்சாகமாய்
கொண்டிருங்கள்...
இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்


மக்களை பிரிக்கும் மொழியையும்
இனத்தையும் பண்டிகை எனும்
பண்பாடு ஒன்று சேர்க்கிறது
இந்த சமூகத்தில்-இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்


ஊரும் உறவும் ஒன்றுபட்டு,
உணர்வுகளால் ஒற்றுமை என்னும்
எண்ணம் வேரூன்றி, வேற்றுமை 
ஒழிந்து, வேறுபாடுகள் கலைந்து,
விளையாட்டுப் நல்லுறவு...ஏகாதசி வாழ்த்துக்கள்


யுகம் யுகமாய் தொடரும்
நட்பு மொழிக்காரர்களுக்கு
இனிய உகாதி நல்வாழ்த்துக்கள்


இந்த வருடம்‌ சென்ற சேர்ந்த
அனைத்து வருடங்களை விடவும்
சிறப்பாக அமைய இனிய உகாதி வாழ்த்துகள்


பிறக்கும் புதிய வருடம்
எல்லா நண்மைகளையும்
குறைவில்லாமல் கொடுக்கட்டும்...


பிறந்த மழலையாய் உள்ளம் துள்ளட்டம்;மலர்ந்த மலராய்
வாழ்க்கை செழிக்கட்டும்...இனிய உகாதி, தெலுங்கு வருட பிறப்பு வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top