Bestie meaning in tamil

Vizhimaa
0

Bestie Meaning in Tamil-பெஸ்டி மீனிங்:

உங்களுக்கு மிகவும் பிடித்தமான,நெருங்கிய,பெரும் நம்பிக்கைக்குரிய,சிறந்த நண்பர்களை Bestie என்று குறிப்பிடலாம்.

பெரும்பாலும் நீண்ட கால நெருங்கிய நண்பர்களை, தன் சுய துக்கங்களில் பங்கு கொள்ளும் நண்பர்களையே பெரும்பாலானோர் தன்னுடைய Bestie என்று சொல்கின்றனர்.

Bestie Quotes in Tamil

மனதுக்கு ஆறுதல் அளிக்கும் பைபிள் வாசகங்கள் - Bible Verses in Tamil


Bestie Meaning in Tamil

Bestie என்ற வார்த்தையை ஒத்த மற்ற ஆங்கில வார்த்தைகள்:

Best Friend

Thick Friend

Good Friend

Boy Bestie Meaning in Tamil:

ஆண் நண்பர்களில் மிகவும் பிடித்தமான,பரிட்சயமான,பெரும் நம்பிக்கைக்குரிய, அன்பை பெற்ற நண்பன், பரஸ்பரமாக  இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனை Boy Bestie என்று அழைப்பார்கள்

Girl Bestie Meaning in Tamil:

பெண் நண்பர்களில் மிகவும் நம்பிக்குரிய ,பிடித்தமான, இலகுவாக பழகக்கூடிய மற்றும் பரஸ்பரமாக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள கூடிய பெண் தோழியை Girl Bestie என்றும் அழைக்கின்றனர்.

Bestie என்ற வார்த்தையை புரியவைப்பதற்கான ஒரு குட்டி கதை:

அனிதா கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி அனிதா தன்னுடைய 18வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினாள் தன்னுடைய விருப்பத்தை தன் தாயாரிடமும் தெரிவித்தாள்.

அம்மாவும் சரி அனிதா நாம் ஒரு விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்வோம் என்று கூறி அவளுடைய எண்ணத்திற்கு ஒப்புதல் அளித்தார். அனிதா நீ உன்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு யாரையெல்லாம் அழைக்க போகிறாய் என்று கேட்டார் அதற்கு அனிதாவும் என்னுடைய வகுப்பு தோழிகளையும் தோழர்களையும் அதோடு ஆஷாவையும் அழைக்கப் போகிறேன் அம்மா என்று கூறினாள்.

இடையில் நிறுத்திய அம்மா அனிதா ஆர் சேவையின் அழைக்கிறார் அவள் நம்முடைய மதத்தைச் சார்ந்தவர் இல்லையே என்று கூறினார்.

அதற்கு அனிதா அப்படியென்றால் எனக்கு இந்த பிறந்த நாள் விழாவே வேண்டாம் அம்மா...என்று கூறிவிட்டு,அழுது கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றாள்.அம்மாவும் அவள் பின்னாடியே சென்று என்ன அனிதா?நீ என்ன இன்னும் சிறுபிள்ளையா? ஏன் இப்படி செய்கிறாய்? என்றாள்.

ஆமாம் அம்மா நான் இன்னும் சிறுபிள்ளை தான். நான் முதன்முதலில் எல்கேஜி படிக்க பள்ளிக்கு சென்ற பொழுதில் இருந்து இன்றுவரை என்னுடைய தோழியாக ஆஷா இருந்து வருகிறாள். நான் முதல் நாள் பள்ளியில் பழகியது அவளுடன் தான். இது நாள் வரை எங்களுடைய நட்பு தொடர்ந்து வருகிறது. என்னுடைய எல்லா இன்ப துன்பங்களிலும் அவள் என்னுடன் இருந்திருக்கிறாள். அதனால் அவளை அழைக்காமல் என்ன என்னுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாட முடியாது. அவள் என்னுடைய பெஸ்டி என்று கூறினாள்.

அனிதாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட அம்மாவும் சரி என்று ஒப்புக் கொண்டார் ஆஷாவும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டாள்.

மேலும் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளை தெரிந்துகொள்ள ENGLISH TO TAMIL

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top