Convey my wishes Meaning in Tamil

Vizhimaa
0

அனைவரது கைகளிலும் ஒரு மொபைல் ஃபோன் வந்து விட்ட இந்த நவீன காலத்தில் ஆங்கிலம் என்பது கைக்கு எளிதில் எட்டும் கனியாக‌ மாறிப் போய்விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஒரு வார்த்தையோ அல்லது சில வரிகளோ புரியவில்லை எனில் உடனே அதை Google search செய்து கண்டுபிடித்து விடும் அளவிற்கு இன்று காலம் மாறிவிட்டது.இல்லை காலத்தை மனிதன் மாற்றிவிட்டான்.

 அந்த  வகையில் தற்போது CONVEY MY WISHES என்ற ஆங்கில வரிக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

CONVEY MY WISHES - என்னுடைய வாழ்த்துக்களை தெரிவி

Convey my wishes Meaning in Tamil

EXAMPLE FOR - CONVEY MY WISHES IN TAMIL

அதாவது உங்களுடைய நண்பருக்கு இன்று பிறந்த நாள் என்று வைத்துக் கொள்வோம்.அவரை உங்களால் இன்று பார்க்க முடியவில்லை. அவர் பள்ளிக்கோ கல்லூரிக்கோ இன்று வரவில்லை.அப்பொழுது உங்கள் நண்பரின் தங்கையையோ அல்லது தம்பியையோ அல்லது அவரை தினமும் நேரில் சந்திக்கும் யாரேனும் ஒரு நபரை நீங்கள் எதர்ச்சையாக பார்க்கீறீர்கள், அவரிடத்தில் உங்களுடைய நண்பரிடத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவுக்குமாறு கேட்டுக்கொள்கிறீர்கள் என்றால்...அதை ஆங்கிலத்தில் இப்படித்தான் சொல்ல வேண்டும்,CONVEY MY WISHES என்று...

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்று நினைத்தால் CONVEY MY BIRTHDAY WISHES என்று சொல்லவேண்டும்.

இப்பொழுது பிறந்த நாள் இல்லாமல் உங்கள் நண்பர் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அதை இப்படி தான் சொல்ல வேண்டும்,CONVEY MY WISHES FOR HIS VICTORY என்று...

மொத்தத்தில் CONVEY MY WISHES என்றால் என்னுடைய வாழ்த்துக்களை அவரிடத்தில் தெரிவியுங்கள் என்று ஒருவர் மற்றொருவர் இடத்தில் கூறுவது ஆகும்.

EXAMPLES IN ENGLISH FOR CONVEY MY WISHES MEANING IN TAMIL:

  • HI RAVI,CONVEY MY BIRTHDAY WISHES TO YOUR BROTHER
  • HI ARAVIND, CONVEY MY BEST WISHES FOR SISTER SPEECH COMPETITION
  • HI SUJA,CONVEY MY WISHES TO MAHI
If you Interested in Game...
Then Read this,

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top