அறுபதாம் கல்யாண வாழ்த்து கவிதைகள் - Shastipoorthi in Tamil

Vizhimaa
0

அறுபதாம் கல்யாண வாழ்த்து கவிதைகள்;

ஒரு திருமணம் ஆனா ஆண் தன் அறுபது வயதை அடையும் பொழுது கொண்டாடப்படுவதே இந்த சஷ்டியப்த பூர்த்தி மற்றும் அறுபதாம் கல்யாணம் எனும் விழா.
இந்த விழாவின் வழியே ஊருக்குச் சொல்ல நினைப்பது என்னவென்றால்
இந்த ஆணானவன் தன் வாழ்வின் ஒரு முழு சுற்றையும் முடித்தவன் ஆகிறான்.இந்த தருணத்தை அந்த நபருடைய பிள்ளைகள் மற்றும்‌ பேரப்பிள்ளைகள்., பெற்றோருக்கு மீண்டும் ஓர் திருமண விழா ஏற்பாடு செய்து கொண்டாடுகிறார்கள்.
இந்த விழாவை சிலர் மணிவிழா என்றும் அழைக்கிறார்கள்.
தன்னை பெற்றவர்களின் திருமணத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கும் வரம் அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைப்பதில்லை.
எனவே தான் அறுபதாம் கல்யாணம் என்ற‌ விழா‌ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக
சொல்லப்படுகிறது.
அறுபதாம் கல்யாணத்தை புகழ்ந்தும் வாழ்த்துக்கள் கூறும் விதமாகவும்
இங்கு கவிதைகள் பதிவிடப்பட்டுள்ளன.



Shastipoorthi wishes in Tamil
அறுபதாம் கல்யாண வாழ்த்து கவிதைகள்


அறுபதாம் கல்யாண நாள் வாழ்த்து கவிதைகள்: (Shastipoorthi in Tamil)

திருமண பந்தம் என்பது 
பரஸ்பர புரிதல் எனும் ஒரு 
உணர்வின் மேல் கட்டப்படும் 
கோபுரம் என்பதை ஊருக்கும் 
உறவுக்கும் உணர்த்தும் 
உன்னத நிகழ்வே 
அறுபதாம் கல்யாணம்.

 
இரு கரங்கள் இணைந்தால் 
மட்டும் அல்ல, இரு இதயங்களும் இணைந்தால் தான் 
இந்த திவ்ய பந்தமானது 
நீடிக்கும் என்பதை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் 
ஒரு அதிகார பூர்வ விழா 
தான் அறுபதாம் கல்யாணம்...

 
வாழ்க்கை துணையின் 
அவசியம் என்பது 
கைப்பிடித்தவுடன் தெரியாது 
உங்கள் கை ஒரு கைத்தடியை பிடித்தவுடன் தான் தெரியும்...
என்பதை உணர்த்தும் நிகழ்வு 
அறுபதாம் கல்யாணம்

 
நீண்ட காலம் நிம்மதியாக 
வாழ்வதற்கு கோடிக்கணக்கில் 
காசோ பணமோ தேவையில்லை 
நல்ல வாழ்க்கை துணை 
இருந்தாலே போதும் என்று 
உணர்த்தும் விழாவே 
அறுபதாம் கல்யாணம்.

 
காதல் எனும் ஒரு ஆணி 
வேரில் முளைத்த இருவேறு 
செடிகளாய் காலம் முழுவதும் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் 
பரஸ்பரமாய் பங்கு கொண்ட 
வாழ்க்கை துணையின் 
அவசியத்தை வருங்காலத்திற்கு
எடுத்துரைக்கிறது இந்த 
அறுபதாம் கல்யாணம்...

 
பெற்றோர்களால் நடத்தி 
வைக்கப்பட்ட திருமணம் 
நிறைவு பெறுவது என்பது 
மீண்டும் தன் பிள்ளைகள்,பேர குழந்தைகளால் திருமணம் 
நடத்தி வைக்கப்படும் போது 
தான்.....அந்த நிகழ்வு அறுபது 
வயதில் தான் அரும்புகிறது....


அறுபது வருட அனுபவ 
வாழ்க்கைக்கு இறைவனின் அருள் பூரணமாய் கிடைக்கட்டும். 


ஒரு ஆணின் அறுபது வருட பூரண வாழ்க்கைக்கு அவன் பிள்ளைகள் 
தரும் அன்பு பரிசே இந்த 
அறுபதாம் கல்யாண விழா....

 
ஊருக்கு சேதி சொல்லி 
உறவினர்கள் சூழ பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு நடத்தப்படும் நன்நிகழ்வே அறுபதாம் 
கல்யாண விழா
 

காலம் கடந்த கல்யாண 
வைபோகம் இல்லை....
அறுபதாம் கல்யாணம்! 
ஒரு அழகான காதலுடன் 
அறுபது வருட காலத்தை 
கடந்த காதல் பயணத்தின் 
திருக்கோலம்

 
சஷ்டியப்த பூர்த்தி விழா 
என்பது இந்த புவி வாழ்வின் பூரணத்துவத்தை 
கொண்டாடும் நாளாகும்

 
அறுபது வருடம் அழகான காதல்...அன்பான குடும்பம்...ஆயிரக்கணக்கில் 
அனுபவம் மனப்பாடமான மனித மனங்களின் இயல்பு...
நல்லது,கெட்டது என எத்தனை
நிகழ்வு...அத்தனைக்குமான 
ஒரு சிறு அங்கிகாரம் 
இந்த அறுபதாம் கல்யாண விழா

 
அறுபது வயதில் திருமணம் 
என்பது ஆசைக்காகவோ ஆஸ்திக்கவோ...செய்வது அல்ல....அறுபது வருட 
வாழ்க்கையின் அனுபவங்களை வருங்கால சந்ததிக்கு ஆசியாக வழங்கவே....

 
அறுபது வயதில் ஓர் 
ஆன்மீக திருவிழா அது 
தான் இந்த சஷ்டியப்த 
பூர்த்தி விழா...


வாழ்வின் அந்திமத்தில்
தொடங்கும் அனுபவ
சங்கமம் இந்த சஷ்டியப்த
பூர்த்தி விழா


முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கும் இணைந்து
வாழ்த்து மழை பொழிய
நிகழட்டும் இந்நன்னிகழ்வு

Shastipoorthi in Tamil:


அறுபது வயதை அடையும்
பொழுது தான் தெரியும்
வாழ்க்கை துணையின்
முக்கியத்துவம்,இனி நீ
இன்றி நானும் இல்லை
என்ற புரிதல் வரும் நன்னாள்


அறுபது வயது என்பது
வாழ்க்கையின் ஒரு
முழு சுற்றாக 
பார்க்கப்படுகிறது.
முழுமையை கொண்டாடும்
ஒர் நாளே அறுபதாம்
கல்யாணம்...


ஒவ்வொரு ஆணும்
பெண்ணின் அருமையை
உணருவது திருமணமான
புதிதிலும் அறுபது வயதென்னும்
அந்திமத்திலும் தான்...


ஒவ்வொரு திருமண நாளும்
ஏதோ ஒன்றை உணர்த்திக்
கொண்டு தான் இருக்கும்.
ஆனால் அறுபதாம் கல்யாணம்
மட்டுமே ஊருக்கு உணர்த்தும்
திருமண பந்தம்
எப்படி பட்டது என்பதை...


எல்லோருக்கும் நடப்பதில்லை
அறுபதாம் கல்யாணம்
அதுபோல் எல்லோருக்கும்
கிடைப்பதில்லை அறுபது
வயது பூர்த்தியானவர்களின்
ஆசிர்வாதம்...


தள்ளாடும் வயதில்
தன்னோடு வந்தவளை
தாங்கும் நிகழ்வு
சஷ்டியப்த பூர்த்தி விழா


வருங்கால சந்ததிக்கு
விட்டுச் செல்லும்
வாழ்க்கை உதாரணம்
அறுபதாம் கல்யாண விழா


வாழ்வில் எத்தனை
உறவுகள் துணையாக
இருந்தாலும் கட்டிய
மனைவியின் கைப்பிடி
இல்லாதவன் அனாதை தான்


கட்டிய மனைவியை
காலம் முழுக்க
கண் கலங்காமல்
பார்த்துக் கொள்ளும்
ஆணுக்கு இறைவன்
கொடுக்கும் பரிசு
அறுபதாம் கல்யாணம்...


அறுபதாம் கல்யாணத்தின்
அம்சம் என்பது திருமணம்
எனும் விழா‌ அல்ல
அனுபவம் என்னும் 
அங்கிகாரமே


வாய்ப்பு கிடைக்கும்
போதே வாழ்ந்து விடுங்கள்
எல்லோருக்கும்
இப்படி ஒரு வாய்ப்பு
கிடைக்காது...


திருமண உறவில்
நட்பெனும் உறவு
கலந்திருப்பதால்
அறுபது என்ன
நூறாவது கல்யாண 
நாள் விழா கூட
கொண்டாடலாம்...


அறுபது வயது
அம்மா அப்பாவுக்கு
திருமணம் செய்து
வைக்கும் பாக்கியம்
அனைத்து ‌மகன்களுக்கும்
கிடைப்பதில்லை....


அறுபதாம் கல்யாணம்
என்பது ஒரு ஆச்சரியம்...


ஆச்சரியம் பூச்சரிய
அறுபதாம் கல்யாண
நாள் வாழ்த்துக்கள்
தாத்தா பாட்டியின்
திருமண கோலம்
காணும் பேரப்பிள்ளைகள்
வாழ்வாங்கு வாழ்வார்கள்...


எவ்வளவு கொடுத்தாலும்
இப்படி ஒரு நன்னாள்
கோடியிலும் கிடைக்காது...
அறுபதாம் கல்யாண வாழ்த்து கவிதைகள்
அனுபவம் தந்த பரிசே
இந்த அறுபதாம்
கல்யாணம்....


பெற்றவர்கள்
நித்திரையிலும்
நினைத்து பார்க்கும்
வைபவம் அறுபதாம்
கல்யாணம்...


எல்லோருக்கும் கிடைக்காத
வரம்; எல்லோரும்
பெற்றால் அது நலம்...
வாழ்க்கையில்
எவ்வளவு தூரம்
பயணித்துள்ளோம்
என்பதை பரிசாக
பெறுவதே அறுபதாம்
கல்யாண விழா...


நடப்பதால் பெற்றோரும்
நடத்தி பார்ப்பதால்
பிள்ளைகளும்
பெறும் புண்ணியமே
அறுபதாம் கல்யாணம்

Shastipoorthi in Tamil:


நினைக்கவும் மறக்கவும்
வாழ்க்கை கொடுத்த
அனுபவங்களை
பகிர்ந்து கொள்ளும்
நேரம் அறுபதாம்
கல்யாணம்...


கேட்போர்க்கும் கிடைக்கும்
புண்ணியம் அறுபதாம்
கல்யாணம்...


அறுபது வயதை
அடைந்தவர் அனைவரும்
அடைவதில்லை ‌‌இந்த
புண்ணிய தருணத்தை...


அறுபதில் ஆரம்பிக்கும்
அனுபவ பயணம் தான்
அறுபதாம் கல்யாணம்...


அறுபது வயதை 
அடைந்தவர்க்கு பிறரை
காயப்படுத்தும்
எண்ணமும் கஷ்டப்படுத்தும்
எண்ணமோ துளியும்
வருவதில்லை...
வாழ்க்கை தந்த
பாடங்களை உணர்ந்த பின்


மணவாழ்க்கையின்
மங்கள நிகழ்வு
மலரட்டும் மகிழ்ச்சியாய்
நிகழட்டும் நெகிழ்ச்சியாய்...


ஆயுளின் இறுதி
வரை ஒன்றாய்
பயணிப்போம் என்ற
உறுதிமொழியின்
அங்கிகாரம்...


அறுபது வருடத்தில்
அத்தனை அனுபவங்களை
அள்ளி தந்த வாழ்க்கைக்கு
மரியாதை செய்யும்
நாள் அறுபதாம் கல்யாணம்...


எவ்வளவு தூரம்
பயணிக்கிறோம் வாழ்க்கையில்
என்பதை ஊருக்கும் 
உறவுக்கும் உணர்த்தும்
நன்னாள்...


பிறப்பும் இறப்பும்
அவன் கையில்
வாழும் வாழ்க்கை
நம்ம கையில்
அறுபதில் திருமணம்
என்பது பெற்ற
பிள்ளைகளின் கையில்...

 
வாழும் வாழ்க்கைக்கு
உத்திரவாதம் யாரும்
தருவதில்லை..
அதுபோல் வாழ்ந்த
வாழ்க்கைக்கு அங்கிகாரம்
என்பது பிள்ளைகளின்
கையில்.....

அறுபதாம் கல்யாண வாழ்த்து மடல்:


அறுபது என்பது
எப்பொழுதும் விஷேசம்
தான்...


காலம் கடந்தும்
காதல் உள்ளங்கள்
வாழும் விழா...


மண வாழ்க்கையின்
மகிழ்வான நாள்
மன நிறைவான
பொன்னாள்...
அறுபதாம் கல்யாணம்...


நல்ல பிள்ளைகளை
பெற்றவர்களுக்கு மட்டுமே
கிடைக்கும் பாக்கியம்
அறுபதாம் கல்யாணம்...


ஒவ்வொரு பிள்ளையின்
கடைசி கடமைகளில்
ஒன்று, பெற்றோரின்
அறுபதாம் திருமணத்தை
நிகழ்த்தி வைப்பது...


இப்பொழுதெல்லாம்
அறுபது வயது வரை
வாழ்வதே ஆச்சரியம்
அதிலும் அறுபதில்
திருமணம் என்பது
அதிசயம்...


தன் பெற்றோருக்கு
மீண்டும் திருமணம்
செய்து பார்க்கும்
பேரு பெற்ற
பிள்ளைகள் முப்பது
கோடி தேவர்களாலும்
ஆசிர்வதிக்க பட்டவர்கள்
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top