Mapla Meaning in Tamil

Vizhimaa
0

Mapla Meaning in Tamil:

Mapla என்ற ஆங்கில எழுத்துக்கான தமிழ் அர்த்தம் "மாப்ள" என்பதாகும்.மாப்ள என்ற வார்த்தை தமிழில் மிகவும் பரவலாகவும் பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும்.


சொந்த பந்தங்களுக்கிடையே மட்டும் உலாவிக்கொண்டிருந்த Mapla(மாப்ள) என்ற வார்த்தை இன்று இந்த நவீன காலத்தில் நண்பர்கள் கூட்டும் வார்த்தைக்கு வார்த்தை பயன்படுத்தும் வார்த்தையாய் விஷ்வரூபம் எடுத்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.


மாப்ள என்ற வார்த்தை "மாப்பிள்ளை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து மருவி மாப்ள என்று சுருக்கி அனைவராலும் வழக்குமொழியிலும் பேச்சுமொழியிலும் பரவ ஆரம்பித்தது.


தங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்த ஆண்களை பெண்வீட்டார் மாப்பிள்ளை என்பார்கள்.அன்று முதல் இன்று வரை மாப்பிள்ளை என்ற சொல் மிகவும் மரியாதை மிகுந்த சொல்லாகவே பார்க்கப்படுகிறது.


மாப்பிள்ளை என்று அழைக்கும் அந்த நபருக்கு அவர்களது வீட்டில் ஏகபோக மரியாதை உண்டு.தற்போது நண்பர்கள் கூட்டமும் இந்த மாப்பிள்ளை என்ற வார்த்தையை பரவலாக பயன்படுத்துகின்றனர்.மாப்ள என்று அழைக்கும் போது தங்களுக்குள் அந்னோன்யம் அதிகரிப்பதாக நினைத்து தற்போதைய தலைமுறை இந்த வார்த்தையை Trend ஆக்கி விட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top