எது முக்கியம்? - Moral Stories In Tamil

Vizhimaa
0

எது முக்கியம்? - Moral Stories in Tamil

ஒரு நாள் இரவில் சாதுரியமான திருடன் ஒருவன் சந்தன பாண்டிய மன்னன் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்நாட்டு எல்லைக்குள் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவனுடைய வீட்டிலிருந்து ஆயிரம் பொற்காசுகளை திருடி விட்டான்.

Moral Stories in Tamil


அதே சமயம் ஒரு விளையாட்டுத்தனமான கோமாளி "புலி வருகிறது புலி வருகிறது" என்று கூறி அந்த கிராமத்து மக்களுடைய ஒருநாள் விவசாய வேலையை கெடுத்து விட்டான்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் அந்த நாட்டு மக்களை பேச வைத்துக் கொண்டு இருந்தது. 

Moral Stories in Tamil

மந்திரிகள் இந்த இரு நிகழ்வுகளையும் மன்னரிடம் கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.
தன் நாட்டை வெகு சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார் பாண்டிய மன்னன் சந்தன பாண்டியன். மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் தன் நாட்டு மக்களை மிகவும் நேசித்தார். அவர்களுக்காகவே தன் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்தார். 

Moral Stories in Tamil PDF 



தன் நாட்டு மக்களின் சிறு சிறு கஷ்டங்களையும் ஆராய்ந்து அவர்களுக்கு அதனை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.


நாட்டு மக்கள் அனைவரும் இவரை ஆகா ஓகோ என்று போற்றிக் கொண்டிருந்தனர். நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். அந்த நிலையில் தான் அரசவையில் அன்றைய தினம் புதிதாக இரண்டு வழக்குகள் வந்திருந்தன. அதில் இரு நபர்கள் ஈடுபட்டிருந்தனர். ஒருவன் ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் ஆயிரம் பொற்காசுகளை திருடி விட்டான். மற்றொருவன் ஏழை விவசாயிகள் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது "புலி வருகிறது புலி வருகிறது" என்று கூறி அவர்களுடைய ஒரு நாள் வேலையை கெடுத்து விட்டான். 

இரு வேறு வழக்குகள் அந்த அரசவைக்கு வந்திருந்தது. சந்தன பாண்டிய மன்னன் அதனை விசாரித்தார்.

"புலி வருது புலி வருது" என்று ஏமாற்றிய அந்த நபரை மன்னன் மன்னித்துவிடுவார். ஏதோ விளையாட்டாக செய்து விட்டான் என்று நினைத்து விடுவார் என்று நம்பிக் கொண்டிருந்தனர்.


வீட்டில் இருந்து ஆயிரம் பொற்காசுகள் திருடிய அந்த கள்வனுக்கு மிகப்பெரிய தண்டனைகள் கொடுப்பார் என்றும் நம்பிக் கொண்டிருந்தனர். எல்லோரும் அவரவர் மனநிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் போட்டு குழப்பிக் கொண்டிருந்தனர். அரசவையில் சற்று நேரம் சலசலப்பு நீடித்துக் கொண்டிருந்தது இதனை கவனித்த மன்னன் உடனடியாக தீர்ப்பு வழங்கினார்.

அந்த இரு நபர்களுக்கும் மன்னன் தண்டனை கொடுத்தான், அரசவைகளோடு நிசப்தம் நிலவியது அதில் ஒருவனுக்கு ஆயிரம் கசையடிகளையும் மற்றொருவனுக்கு 100 கசையடிகளையும் தண்டனையாக கொடுத்தார். இதைக் கேட்ட அரசவையில் இருந்த அனைவரும் செல்வந்தன் வீட்டில் திருடிய நபருக்கு ஆயிரம் கசையடி என்றும் "புலி வருகிறது புலி வருகிறது" என்று ஏமாற்றிய நபருக்கு 100 கசையடிகள் அடிகள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தனர். 

ஆனால் அங்கு தான் பாண்டிய மன்னன் தன்னுடைய அரச நீதியை நிலைநாட்டினார். வீட்டில் ஆயிரம் பொற்காசுகள் திருடிய அந்த திருடனுக்கு 100 கசையடிகளையும் "புலி வருகிறது புலி வருகிறது" என்று ஏமாற்றிய அந்த திருடனுக்கு ஆயிரம் கசையடிகளையும் தண்டனைகளாக கொடுத்தார்.


எல்லோருக்கும் ஒரே வியப்பு ஆயிரம் பொற்காசுகளை திருடிய திருடனுக்கு நூறு காசை அடிகள். அந்த புலி வருகிறது என்று ஏமாற்றிய நபருக்கு ஆயிரம் கசையடிகளா என்று வியப்பிலும் சற்று குழப்பத்திலும் அதிருப்தியிலும் ஆழ்ந்தனர். Short stories in Tamil


Moral of the Story in Tamil:(Moral Stories in Tamil)

அப்பொழுது தன் தீர்ப்பை விளக்கிகிய பாண்டிய மன்னன் "எந்த நிலையிலும் எந்த காலத்திலும் பணத்தைவிட நேரமே உயர்ந்தது". ஆயிரம் பொற்காசுகள் உயர்ந்தவைதான். அதையும் விட ஒரு நாள் பொழுதினை அந்த ஏழை விவசாயிகளுக்கு வீணாக்கி விட்டானே அது அதைவிட கீழான செயல் அல்லவா? எப்பொழுதும் பணத்தை விட நேரமே முக்கியம். பணத்தை வீணாக்கினால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். நேரத்தை வீணாக்கினால் என்ன செய்ய முடியும். எனவே "புலி வருகிறது புலி வருகிறது" என்று கூறி அந்த விவசாயிகள் உடைய ஒரு நாள் பொழுதை வீணடித்த அந்த நபருக்கு ஆயிரம் கசையடிகள் என்று தீர்ப்பு வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top