ஆடிப்பெருக்கு வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்து கவிதைகள்;

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழையால் ஆறு ஏரி குளங்களில் நீர் வரத்து அதிகரிக்கும் அது போன்ற சமையங்களில் விவசாயிகள் மிகவும் நம்பிக்கையாக தங்களுடைய விதைக்கும் பணிகளை தொடங்குவார்கள்...இதனை கொண்டாடும் வகையிலேயே பெண்கள் அவர்களது ஊரில் உள்ள ஏரி,குளம்,ஆறு ஆகியவற்றிற்கு சென்று பூஜை செய்து வழிபடுவார்கள்...

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் கவிதைகள்

பெரும்பாலும் காவேரி ஆற்றை மையாமாக கொண்ட ஊர்களில் ஆடிப்பெருக்கு வெகு விமர்சையாக நடைபெரும்.


அது மட்டும் அல்லாமல் ஆடி மாதம் என்பது அம்மன் எனும் தெய்வத்திற்கு மிகவும் உகந்த மாதமாகவும் உள்ளது.எனவே இந்த மாதத்தில் நான்கு வெள்ளி கிழமைகளும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.


மேலும் புதிதாக திருமணமான புதுமன தம்பதிகளுக்கும் ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்கிறார்கள்.


அத்தகைய திருநாளான ஆடிப்பெருக்கிற்கு வாழ்த்துகள் சொல்ல இங்கு சில கவிதைகள் பதிவிடப்படுகின்றன...


ஆடிப்பெருக்கு நல்வாழ்த்து கவிதைகள்ஆடிப்பெருக்கு கவிதைகள்;

ஆடிப்பெருக்கு திருநாளில் 

அனைவரது இல்லத்திலும் 

அன்பும் ஆரோக்கியமும் பெருகி வளர்த்திட வளர்பிறை 

வாழ்த்துக்கள்...
ஆடி வரும் 

ஆற்று நீராய்

ஊறி வரும்

ஊற்று நீராய்

சொந்தங்கள் பெருகிட

பந்தங்கள் நெருங்கிட

ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்
விவசாயிகளின் வியர்வைகள்

விளைச்சலாக வேர் விடட்டும்

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்....
விவசாயிகளின் வீடும்

காடும் மண்ணும் மனமும்

மகிழ்ச்சியால் நிறைந்து

எல்லா வளமும் பெற்று

நலமுடன் வாழ ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்

விவசாயிகளின் வீட்டில் 

பொங்கி வரும் காவேரி 

போல் மகிழ்ச்சி பொங்கி 

வரட்டும்..
வந்து சேரும் நீரினால் 

விவசாயிகளின் வறுமைகள் 

நீங்கிட இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்
வரண்டு போன பூமி 

மலர்ந்து வர பொங்கி 

வரட்டும் புதுப்புனல்...

 ஆசை சொந்தங்களுக்கும் 

அன்பு உறவுகளுக்கும் அள்ளிக் கொடுக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்...

 ஆடிப்பெருக்கு திருநாளில் 

குறையாத செல்வமும் 

குறைவில்லாத உறவுகளும் 

இனிதே பெருகிட இனிய 

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்...

 இல்லத்தில் இனிதே 

அன்பு பெருகிட,ஆஸ்தி 

பெருகிட, இன்பம் பெருகிட,ஈகை வளர்ந்திட,உவகை 

பொங்கிட இனிய 

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்....

 ஆடிப்பெருக்கு திருநாளில் 

அனைத்து நன்மைகளையும் 

நலமுடன் பெற்று சிறப்புடன் 

வாழ நல்வாழ்த்துக்கள்...

 இதயம் நிறைந்த இனிய 

உறவுகளுக்கு இத்திருநாள் 

இனிதே நன்மைகள் தந்திட ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்...

 ஆலமரம் போன்ற என் 

ஆசை உறவுகளுக்கு இனிய ஆடிப்பெருக்கு திருநாள் நல்வாழ்த்துக்கள்...

 அன்பு நெஞ்சம் கொண்ட 

அனைத்து சொந்தங்களுக்கும்... 

காவிரி நீர் போல் மகிழ்ச்சி 

பொங்கிட இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்...

 ஆடிப்பெருக்கு, பொங்கி வரும் அலைபோல் அள்ளித்தரட்டும்; நன்மைகளை... ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்...

 ஆடிபதினெட்டில்; அம்மன் 

அருளால் கல்வியும் 

செல்வமும் நிலைப்பெற்று 

நீடுவாழ இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்...
புதுப்புனல் பொங்கி 

வருவதை போல் 

புத்துணர்ச்சி பொங்கி

வரட்டும்..

ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்
காவேரி ஆற்றின்

கருணையால்

கடைக்கோடி விவசாயியும்

பயன்பெறட்டும்...
ஆடி மாதம்

அம்மன் அருள்

பூரணமாய் பெற்று

நிறைவான வாழ்க்கை

வாழ ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்...
காவேரியின் கருணை

காலம் முழுக்க கிடைத்து 

விவசாயிகளின்

கண்ணீர் துடைக்கும்

என்று வேண்டுவோம்

இந்த திருநாளில்...
விவசாயிகளின் வாழ்வில்

வெளிச்சம் மலர

காவேரியின் கருணையை

வேண்டுவோம்... இந்த

திருநாளில்...
திருமணமான புது 

மாப்பிள்ளைக்கும் அவருக்கு

சீர் செய்யும் மாமனாருக்கும்

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்
அன்புச் சொந்தங்களுக்கு

அம்மன் அருள்

கிடைத்து எல்லா 

வளமும் நலமும்

பெற்று இனிதே 

வாழ்வை வாழ்ந்திட

ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்
விவசாய சொந்தங்களின்

சோகங்கள் நீங்கிட

தாகங்கள் தீர்ந்திட

காவேரி தாயின்

பாதங்கள் பணிந்திடுவோம்

இந்த நன்னாளில்...
விவசாய சொந்தங்கள்

வெளிச்சமாய் வாழ

ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்
இயற்கை படைத்த

எதுவும் வேற்றுமை

படைப்பதில்லை...

வேற்றுமை கலைந்து

ஒன்றாய் கொண்டாடுவோம்

ஆடிப்பெருக்கை...
நீரும் ஒளியும்

வேற்றுமை

உணர்வை 

கொண்டிருப்பதில்லை

நீரையும் ஒளியையும்

இறையாய் வணங்கும்

நாம் மட்டும் ஏன்

வேற்றுமை எண்ணம்

கொண்டிருக்க வேண்டும்...

இணைந்து கொண்டாடுவோம்

இந்த இனிய திருநாளை...
தாய்த்தமிழ் 

சொந்தங்களுக்கு

ஊற்று நீராய்

உள்ளம் பொங்கும்

ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்...
விவாசாயிகளின்

வாழ்வு வளமாக

ஆடிப்பெருக்கு

வாழ்த்துக்கள்
உழவு தொழில்

உலகில் தழைத்திட

ஆடிப்பெருக்கு

வாழ்த்துக்கள்
உழவனின்

உள்ளமும் இல்லமும்

மகிழ்ச்சியால் நிறைந்திட

ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்
என் இனிய

தமிழ் மக்களுக்கு

ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்....
காலம் காலமாக

கஷ்டப்படும்

விவசாயிகளின்

வாழ்வில் மகிழ்ச்சி

மலரட்டும்....இந்த

ஆடிப்பெருக்கு 

நன்னாளில்...
காவிரி ஆற்றின்

கருணையால்

உழவனின் ஏர்

உழவு ஏற்றம்

காணட்டும்...
அன்புள்ள

அத்தனை 

சொந்தங்களுக்கும்

ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்...
புதுப்பானை பொங்கல்

வைத்து காவிரியின்

கருணையினை

போற்றுவோம்...

ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்
அம்மன் ஆசிர்வாதத்தால்

அகிலத்தில் தீமைகள்

அழிந்து நன்மைகள்

பெருகிட ஆடிப்பெருக்கு

வாழ்த்துக்கள்
ஏர் பூட்டும் விவசாயிக்கு

ஏற்றம் தரட்டும்

இந்நன்னாள்
சொந்தங்களுக்கும்

நேச நெஞ்சங்களுக்கும்

இனிய ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்...
ஆடி வந்தால்

நன்மைகள் நம்மை

தேடி வரும்....
ஆடியின் வரவால்

எல்லா வளங்களும்

உண்டாகும்...
வளைந்து வரும்

ஆற்றை போல்

வாழ்க்கையில் சில

நேரங்களில் வளைந்து

கொடுத்து போகவேண்டி

உள்ளது, ஆடிப்பெருக்கு

வாழ்த்துக்கள்
புயலடித்தால் விழுந்து

விடும் ஆலமரமாய்

இருப்பதை விட

புயல் அடித்தாலும்

புடுங்கி செல்லாத 

புல்லாய் இருப்பது

மேல்... ஆடிப்பெருக்கு

வாழ்த்துக்கள்
நாட்டுக்கு சோறு போடும்

விவசாயிக்கு நல்லது

நடக்கட்டும் இந்த

நன்னாளில்
உழுது பிழைக்கும்

விவசாயிக்கும்

உக்காந்து சாப்பிடும்

முதலாலிக்கும் அடிப்படை

தேவை உணவு,உடை,

இருப்பிடம்... ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்
ஏரி குளங்கள்

வற்றாமல்

வயல் வெளிகளை

வளமாக்க வேண்டுவோம்

ஆடிப்பெருக்கு

நல்வாழ்த்துக்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top