கார்த்திகை தீப வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் கவிதைகள்;

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை மாதத்தில் கிருத்திகா நட்சத்திரத்தில் திரு கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.இந்த கார்த்திகை மாத தீபம் ‌சிவ பெருமானுக்கும் தமிழ் கடவுள் என‌ அறியப்படும் முருக பெருமானுக்கும் உகந்த நாட்களாகவும் 

இருக்கிறது.புறநானுறு மற்றும் அவ்வை பாடல்களில் கூட இந்த கார்த்திகை தீபம் எனும் விழா சங்க காலத்தில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த விழா என்பதற்கான சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது.


தற்பொழுது இந்த கார்த்திகை தீபம் தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களிலிலும் மற்றும் இலங்கை நாட்டிலும் கொண்டாடப்படுகிறது.

Karthigai Deepa wishes quotes in Tamil

கார்த்திகை தீப திருநாளில் பெரும்பாலும் புது அகல் விளக்குகளால் வீடுகள் அலங்கரிக்கப்படும் அத்தோடு ஒரு வீட்டிற்கு குறைந்தது இருபத்தேழு(27) விளக்குகளாவது ஏற்ற வேண்டும்.இந்த இருபத்தேழு (27) என்ற எண், 27 நட்சத்திரங்களை குறிப்பதாக கூறப்படுகிறது.

கார்த்திகை தீப வாழ்த்து கவிதைகள்

கார்த்திகை தீப வாழ்த்து கவிதைகள்:


இவ்வாறு சிறப்பு மிகுந்த இந்த கார்த்திகை தீப திருநாளன்று மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு இங்கு வாழ்த்து கவிதைகள் பதிவிடப்பட்டுள்ளன.

கார்த்திகை தீப கவிதைகள்;

வீட்டில் ஏற்றும் ஒளி 

உங்கள் வாழ்க்கைக்கு 

நல்வழியை காட்டட்டும்,

இனிய கார்த்திகை தீப 

நல்வாழ்த்துக்கள்


 

நட்சத்திர ஒளியில்

வானம் நிறைந்திருப்பது

போல் தீப ஒளியில்

இல்லம் நிறையட்டும்

கார்த்திகை தீப வாழ்த்துகள்
இதயத்திலிருந்து இருளை 

விலக்கி இன்ப ஒளியை 

ஏற்றிடுங்கள், இனிய 

கார்த்திகை தீப 

நல்வாழ்த்துக்கள்

 ஏற்றும் தீப ஒளியினில் 

வீடுகளை மட்டும் அல்ல 

இதயங்களையும் 

வெளிச்சமாக்குவோம், 

இனிய கார்த்திகை தீப 

நல்வாழ்த்துக்கள்


 


விளக்குகளை ஏற்றுவோம்;

வாழ்வில் துன்பங்களையும் துயரங்களையும் விலக்குவதற்காக,

இனிய கார்த்திகை தீப 

நல்வாழ்த்துக்கள்

 ஆயிரம் விளக்குகள் தரும் 

ஒளியை விட நம்மில் சுடர் 

விடும் அறிவொளி தரும் 

வெளிச்சமே நாட்டிற்கும் 

வீட்டிற்கும் தேவை,இனிய 

கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்


 


சுடர் விடும் ஒளியாய் 

துளிரட்டும் உங்கள் இல்லமும் 

இதயமும், இனிய கார்த்திகை 

தீப நல்வாழ்த்துக்கள்

 வீடு விளங்க விளக்கேற்றுவோம்;

நாடு விளங்க நல்லவை 

செய்வோம், இனிய கார்த்திகை 

தீப நல்வாழ்த்துக்கள்

 தீமைகள் விலகி தீர்வுகள் 

தரும் நல்ல நாளாக 

அமையட்டும், இனிய 

கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்

 இதயம் நிறைந்த உறவுகளுக்கு இல்லத்தில் ஏற்றி வைக்கும் 

விளக்குகள் போல் வீட்டில் 

வெளிச்சம் தங்கிட இனிய 

கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்...

 வீசும் வெளிச்சத்தில் வேற்றுமை இருப்பதில்லை அதுபோல் வேற்றுமை கலைந்து ஒற்றுமை ஓங்கிட வழி செய்வோம்,இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்
நட்சத்திரங்களின் 

நல்லாசியுடன்

நடக்கட்டும் அனைத்து

நன்மைகளும்

இனிய கார்த்திகை

தீப நல்வாழ்த்துக்கள்
தீப ஒளி ஏற்றி

ஞான ஒளியை

பெற‌ முற்படுவோம்...
கார்த்திகை மைந்தனை

கரம் கூப்பி கும்பிடுவோம்

கார்த்திகை தீப வாழ்த்துக்கள்
திருவண்ணாமலையாணின்

திருவருள் பெற்று

வாழ்வின் அனைத்து

நன்மைகளையும் பெற

இனிய கார்த்திகை தீப

வாழ்த்துக்கள்
கார்த்திகை தீபம்

ஏற்றி வைத்தால்

கந்தன் அருள்

பூரணமாய் கிடைக்கும்
கிருத்திகா நட்சத்திரத்தில்

கார்த்திகை தீபம்

ஏற்றி வைப்போம்...
ஒவ்வொரு விளக்கும்

ஒளியை மட்டும் 

அல்ல;இறை அருளையும்

தரட்டும்...
வீடும் நாடும்

நலம்பெற

நம்பிக்கையுடன்

விளக்கேற்றுவோம்
நம்பிக்கை 

கைக்கொடுக்க

நம்பி ஏற்றுவோம்

அகல் விளக்கை...
புது விளக்கில்

எண்ணெய் ஊற்றி

திரி வைத்து

தீபம் ஏற்றி

வாசலில் வைத்தால்

வந்த துன்பங்கள்

சொல்லாமல் செல்லும்
சிவனும்

சிவமகனும்

நல்லருளை‌

நல்கிட இனிய

கார்த்திகை தீப

வாழ்த்துக்கள்
இல்லத்தை மட்டும்

வெளிச்சமாக்காதீர்கள்

உள்ளத்தையும் 

வெளிச்சமாக்குங்கள்
தீப ஒளிகளின்

திவ்ய சங்கமம்

திரு கார்த்திகை

தீபம்
குத்துவிளக்கு ஏற்றி

கும்பிட்டால் குடும்பம்

விளங்கும்...
விளக்குகளின்

ஒளியில்

விலகட்டும் தீமைகள்

வீட்டை விட்டு...
உன்னுள் இருக்கும்

ஒளியை தூண்ட

தீப ஒளி ஏற்றி

வழிபடு
திருவண்ணாமலை

சிவனின்

திருவருள் பெற்று

திரு கார்த்திகை

தீபம் செழிக்கட்டும்
கார்த்திகை நன்னாளாம்

தீப‌ திருநாளில்

வீட்டில் நிம்மதி

நிறைய வாழ்த்துக்கள்
கந்தன் கருணையால்

கார்த்திகை தீபம்

கலை கட்டட்டும்
தீபம் ஏற்றி

திருவண்ணாமலையாணை

வேண்டினால்

நினைத்தது கைகூடும்
திருவண்ணாமலையானின்

திருவடி பணிவோம்

திருக்கார்த்திகை தீபத்தில்
தென்னாடுடைய சிவனும்

எந்நாட்டவர்க்கும் இறைவனுமான

சிவபெருமானை தீபம்

ஏற்றி வழிபடுவோம்

இந்த கார்த்திகை தீபத்தில்
கார்த்திகை மாதம்

நிறைந்த நன்னாளான

தீப திருநாளில்

அகல் விளக்கில்

தீபம் ஏற்றி வழிபட

சிவ மைந்தனின்

திருவருள்‌ கிடைக்கும்
மனமுருகி தீபமேற்றி

முருகனிடம்‌ வேண்டினால்

எண்ணியவை யாவும்

இனிதே நிறைவேறும்
எமையாளும் ஈசனின்

அருளால் எண்ணியவை

எல்லாம் எண்ணம்போல்

நிறைவேறும்....
இயற்கையின்

கொடையான ஒளி

எப்பொழுதும் 

நன்மை பயக்கும்
27 விளக்குகள் 

ஏற்றி இறைவனை

வணங்கினால்

எண்ண்ம்போல் எண்ணிய

செயல்கள் ஈடேறும்
நட்சத்திர ஒளியில்

வானம் விழாக்கோலம்

காண்பதை போல்

தீப ஒளியில்

வீடும் நாடும்

விழாக்கோலம்

காணட்டும்...
வெள்ளிக்கிழமை விளக்கு

ஏற்றி கார்த்திகை

விரதம் இருந்தால்

கந்தன் அருளால்

பிரார்த்தனைகள்

நிறைவேறும் கார்த்திகை

தீப‌ நல்வாழ்த்துக்கள்
கார்த்திகை மாதம்

சிவனுக்கும்

சிவ மகனுக்கும்

பிடித்த மாதம்
வீட்டில் ஏற்றும்

தீபம் இல்லத்தில்

அமைதியை தரட்டும்

உள்ளத்தில் உள்ள

துன்பங்கள் எல்லாம்

உதிர்ந்து போக

கார்த்திகை தீப

நல்வாழ்த்துக்கள்

நம்பிக்கை ஒளியை

நமக்குள்‌ பாய்ச்சி

தீப ஒளியை 

வீட்டில் ஏற்றுவோம்
எத்தனை முறை 

துவண்டு விழுந்தாலும்

துணிவோடு எழுந்திருக்கும்

மன உறுதியை

தர‌ இறைவனை 

பிராத்தனை செய்வோம்

தீபம் ஏற்றி
ஆகாய விளக்குகள்

அகல் விளக்காய்

நம் வீட்டில்

ஒளிர தீபம்

ஏற்றி வழிபடுவோம்
தீமையென்னும்

இருளில்

நன்மை‌கள் ஒளிர்ந்திட

தீப ஒளி ஏற்றிடுவோம்
இல்லம் மட்டும்

அல்ல

உள்ளமும் 

விழாக்கோலம்

பூணட்டும்...
இதயம் நிறைந்த

தாய் தமிழ்

சொந்தங்களுக்கு

இனிய கார்த்திகை

தீப‌‌ நல்வாழ்த்துக்கள்
எதையோ தேடி

எங்கோ வாழும்

என் இதய

சொந்தங்களுக்கு

இனிய கார்த்திகை தீப

நல்வாழ்த்துக்கள்
ஊரும் நாடும்

செழித்து

உலகெலாம் இன்புற்று

இருக்க‌ கார்த்திகை தீப

நல்வாழ்த்துக்கள்
மனதில் தெளிவு

பிறந்து

மனிதர்கள்

மனிதர்களாய் வாழ

கார்த்திகை தீப

நல்வாழ்த்துக்கள்கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top