காதல் கடிதம் கணவனுக்கு - Love Letter in Tamil To Husband

Vizhimaa
0

Love Letter in Tamil To Husband - கணவனுக்கு காதல் கடிதம்Love letter to husband in Tamil


மகளிர் தின வாழ்த்து கவிதைகள் படிக்க - Woman's day Quotes in Tamil

Motivational Quotes in Tamil

என் அகமகிழ்வாளனுக்கு,

என் இமைகளின் இடைவெளியில் இதயம் நுழைந்த   நீ...
சிரித்து பேசும் நொடியில் சிலிர்த்து போகிறது என் உள்ளம்.காதலனாக நீ கவர்ந்த என் இதயத்தை, கணவனாக மாறிய பின்பும் தர மறுக்கிறாய்.ஏன் என்று கேட்டால் இரு உயிர்க்கு ஓர் இதயம் போதும் என்று‌ கவிபாடுகிறாய்...

இடைவெளிகள் அதிகரித்த போதும் இதயங்கள் அருகில் இருப்பதாய் உணர வைத்தாய்.எனக்கு பிடித்த சிலவற்றை சிரித்து கொண்டே சகித்துக் கொண்டாய்...

உனக்காக எதுவும் செய்வேன் என்று வாய்மொழி பாடாமல், 💕எனக்காக எல்லாம் செய்தாய்...! கல்யாணத்திற்கு பிறகு காதல் வாழ்க்கையில் காதலே இருக்காது என்ற பலரின் கருத்தை பொய்யாக்கினாய்...

உன் காதலி என்ற உணர்வை காலம் முழுவதும் உணர வைத்தாய்... உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னுடையவள் என்ற எண்ணம் தந்தாய்.

எனக்கு மட்டும் தான் உன் காதல் என்றும் என்னுடன் மட்டும் தான் உன் கூடல் என்றும் உறுதியளித்தாய்...💞

எவ்வளவு சண்டை போட்டாலும் முதலில் சமாதானம் ஆனாய், என்னையும் சமாதானப்படுத்தினாய்❤️

கடும் கோபத்திலும் கண்ணியம் மீறாத வார்த்தைகள் பேசினாய், கண்ணீர் வரவழைக்காத கோபம் கொண்டாய்💞

உன்னில் ஒரு பாதியாக எனை மதித்தாய்..உயிரில் ஒன்றாய் நீ கலந்தாய்.

வண்ணங்கள் இல்லா வானவில்லாய் வெறிச்சோடி போன என் வாழ்க்கையில் உன் காதல் எண்ணங்கள் வண்ணங்கள் ஆகின...

மகனும் மகளும் பெற்ற பிறகும் பற்று இன்னும் குறையவில்லை நம் பந்தத்தில்...

எனக்காக வாழும் என் அன்பானவனுக்கு என்னை தருவதில் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கிறது உள்ளம்.💞

காதலோடு கனா காணுகிறேன் நம் முதுமை பருவத்தை....❤️

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top