மனையடி சாஸ்திரம் 2023 - Manaiyadi Sasthiram 2023

Vizhimaa
0

மனையடி சாஸ்திர பலன்கள் - 2023

வீடு என்பது வெறும் செங்கல்லும் சிமெண்ட்டும் மட்டும் இல்லை. அது  ஒரு குடும்பத்தின் கனவு.ஒரு குடும்பம் நன்றாக செழித்து வளர்வதற்கு வீடும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

ஒரு வீடானது வாஸ்து சாஸ்த்திரப்படியும் மனையடி சாஸ்த்திரப்படியும் சரியாக அமைந்துவிட்டால் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு அதுவே ஒரு கூடுதல் வரமாகும்.        

Manaiyadi Sasthiram in Tamil -2023

அதன் படி ஒரு வீட்டு மனை எத்தனை அடி இருக்க வேண்டும்.எத்தனை அடி இருந்தால் என்னென்ன பயன் என்பதை கீழே வரிசைப்படுத்தி சொல்லியிருக்கிறோம்.          

மனையடி சாஸ்திரம்

ஒரு அடி என்பது 12 அங்குலங்கள் உடையது ஆகும். சென்டிமீட்டர் கணக்கில் சொன்னால் 1 அடி என்பது 30 செ.மீ. ஆகும். இந்த அடி கணக்குகள் (100 செ.மீ‚ 1 மீட்டர்‚ 1000 மீட்டர்‚ 1 கிலோ மீட்டர்) 1950-களில்தான் நடைமுறைக்கு வந்தது.

Manaiyadi Sasthiram Download Pdf 

Manaiyadi Sasthiram pdf 2023

 • 6 அடி நன்மை உண்டாகும்.
 • 7 அடி துன்பம் ஏற்படும்.
 • 8 அடி காரிய அனுகூலம்‚ லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 • 9 அடி செல்வம் குறையும்.
 • 10 அடி பொன்‚ பொருள் சேர்க்கை வீட்டில் எப்பொழுதும் உண்டாகும்.
 • 11 அடி தனம்‚ பொருள் சேர்க்கையும்‚ வாகன வசதிகளும் ஏற்படும்.
 • 12 அடி மக்கட்பேறு குறைபடுதல்.
 • 13 அடி ஆரோக்கியம் குறையும்.
 • 14 அடி அனைவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும்.
 • 15 அடி பொருளாதார சீர் குலைவு ஏற்படும்.
 • 16 அடி மிகுந்த செல்வம் உண்டாகும்.
 • 17 அடி சகலரையும் எதிர்த்து ஜெயிக்கும் நிலை உண்டாகும்.
 • 18 அடி செல்வம் குறைந்து போகும்.
 • 19 அடி தீய பலன்களே நேரிடும்.
 • 20 அடி ராஜயோகம் ஏற்படும்.
 • 21 அடி பசுக்களுடன் பால் பாக்கியம்.
 • 22 அடி மகிழ்ச்சி‚ எதிரியும் அஞ்சுவான்.
 • 23 அடி ஆரோக்கியம் குறைபடுதல்.
 • 24 அடி மத்திம பலன்கள்.
 • 25 அடி செல்வம் குறையும்.
 • 26 அடி சுகபோக‚ யோக வாழ்க்கை கிடைக்கும்.
 • 27 அடி மிகுந்த செல்வம் உண்டாகும்.
 • 28 அடி சௌபாக்கியம் கிடைக்கும்.
 • 29 அடி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
 • 30 அடி லட்சுமி கடாட்சம் பெற்று வாழ்வார்.
 • 31 அடி தெய்வ கடாட்சம் வீட்டில் உண்டு. சகல போக சுகங்களும் கிடைக்கும்.
 • 32 அடி மஹா விஷ்ணுவின் அருள் கிடைக்க பெறுவீர்கள்.
 • 33 அடி பொன்‚ பொருள்‚ யோகம் சித்தியாகும்.
 • 34 அடி வாழ்க்கை கசந்துவிடும்.
 • 35 அடி தெய்வீக கடாட்சம் உண்டாகும்.
 • 36 அடி அரசனுக்கு நிகரான வாழ்க்கை அமையும்.
 • 37 அடி சுகம் உண்டாகும்.
 • 38 அடி கெட்ட சக்திகளின் உறைவிடம்.
 • 39 அடி இன்பமும்‚ செல்வமும் உண்டாகும்.
 • 40 அடி எதிரிகளால் தொல்லை ஏற்படும்.
 • 41 அடி செல்வம் பெருகும்.
 • 42 அடி லட்சுமி குடியிருப்பாள்.
 • 43 அடி தீங்கு ஏற்படும்.
 • 44 அடி துஷ்ட ஜந்துக்கள் மூலம் ஆபத்து நேரிடும்.
 • 45 அடி சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.
 • 46 அடி முன்னேற்றம் ஏற்படாது.
 • 47 அடி வறுமை உண்டாகும்.
 • 48 அடி நெருப்பால் ஆபத்து ஏற்படும்.
 • 49 அடி வறுமையும்‚ நோயும் உண்டாகும்.
 • 50 அடி நற்பலன் உண்டாகும்.
 • 51 அடி வழக்கு விவகாரங்கள் தோன்றும்.
 • 52 அடி செல்வம் செழிக்கும்.
 • 53 அடி வீண் செலவு அதிகரிக்கும்.
 • 54 அடி லாபம் பெருகும்.
 • 55 அடி சுற்றத்தார் எதிரியாவார்.
 • 56 அடி நல்ல மக்கட்பேறு உண்டாகி சிறப்புடன் வாழும் யோகம் பிறக்கும்.
 • 57 அடி மக்கட் செல்வம் இல்லை.
 • 58 அடி விரோதம் உண்டாகும்.
 • 59 அடி மத்திம பலன்கள்.
 • 60 அடி செல்வம் சேரும்‚ சிறப்பான வாழ்வு உண்டாகும்.
 • 61 அடி குடும்ப சீர்குலைவு ஏற்படும்.
 • 62 அடி வறுமை உண்டாகும்.
 • 63 அடி இருப்பு குறையும்.
 • 64 அடி அபிவிருத்தி உண்டாகும்.
 • 65 அடி பெண்களால் பிரச்சனை ஏற்படும்.
 • 66 அடி புத்திர பாக்கியம் உண்டாகும்.
 • 67 அடி மனதில் பய உணர்வு ஏற்படும்.
 • 68 அடி சொத்து‚ சுகம் சேர்க்கை உண்டாகும்.
 • 69 அடி ஆயுதம்‚ அக்னி‚ விஷம் இவற்றால் ஆபத்து.
 • 70 அடி அந்நியருக்கு பலன் தரும்.
 • 71 அடி கௌரவம் உயரும்.
 • 72 அடி பாக்கியம் உண்டாகும்.
 • 73 அடி அரசயோகம் உண்டாகும்.
 • 74 அடி அபிவிருத்தி ஏற்படும்.
 • 75 அடி சுகம் உண்டாகும்.
 • 76 அடி செல்வம் கரையும்.
 • 77 அடி எல்லாவிதமான வசதிகளும் அமையும்.
 • 78 அடி புத்திர பாக்கியம் குறைவு.
 • 79 அடி கால்நடைகள் அபிவிருத்தி உண்டாகும்.
 • 80 அடி லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
 • 81 அடி உரிமையாளர் எதிர்பாராத கண்டத்தை அடைவர்.
 • 82 அடி நெருப்பு மற்றும் இயற்கை பேரழிவுகளால் ஆபத்து நேரிடும்.
 • 83 அடி வாழ்க்கை சீர்குலையும்‚ நிம்மதி போய்விடும்.
 • 84 அடி சகல பாக்கியம் கிடைக்கும்.
 • 85 அடி சகல ஐஸ்வர்யமும் பெற்று வாழ்வர்.
 • 86 அடி வறுமை‚ பிணி வந்தடையும்.
 • 87 அடி செல்வச் செழிப்பு உண்டாகும்‚ புகழ் சேரும்.
 • 88 அடி செளபாக்கிய வாழ்க்கை அமையும்.
 • 89 அடி பொன்‚ பொருள் போக வாழ்க்கை ஏற்படும்.
 • 90 அடி சகல வாழ்க்கை வசதிகளும் உண்டாகும்.
 • 91 அடி கல்விமானால் சிறப்படையலாம்.
 • 92 அடி அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும்.
 • 93 அடி பல தேசங்கள் சென்று வாழ்வார்கள்.
 • 94 அடி அந்நிய தேசம் போவார்.
 • 95 அடி வளமான வாழ்க்கை‚ மக்கட்பேறு கிடைக்கும்.
 • 96 அடி பிற தேசம் செல்வார்.
 • 97 அடி தொழில்‚ உத்தியோக உயர்வு உண்டு.
 • 98 அடி பல தேசங்கள் செல்வர்.
 • 99 அடி அரச போகம் உண்டாகும்.
 • 100 அடி இறைவன் அருள் கிடைக்கும்.

ஒரு வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை செய்து பார் என்று பெரியவர்கள் சொல்வது எவ்வளவு சரி நீங்கள் ஒரு வீடு கட்டும் போது உணர்வீர்கள்.எல்லோருக்கும் சொந்தமாக ஒரு வீடு என்பது ஒரு கனவு தான்.அந்த கனவை பரிபூரணமாக்குவதற்கு இந்த மனையடி சாஸ்திரம் நிச்சயம் உதவும் என்று நம்புகிறோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top