மார்பக புற்றுநோய் அறிமுகம்
2023 ம் ஆண்டுகளின் தொடக்கத்தில்,அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் என்பது வியக்கத்தக்க உண்மை.அதே போல் இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களில் உள்ள பெண்களின் வளர்ச்சியோடு,அவர்களுக்கான மார்பக புற்றுநோயின் வளர்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தான் வருகிறது.
மார்பக புற்றுநோய் என்பது ஆண்/பெண் இருவருக்கும் வரக்கூடியது தான் ஆனால் பெண்களுக்கு மட்டும் அதிகமாக வருவதற்கான காரணம் என்ன என்பதையும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
புற்றுநோய் என்றால் என்ன?
முதலில் புற்றுநோய் என்றால் என்ன ? என்று நாம் தெரிந்து கொள்வோம்! வாருங்கள்...
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் செல்களால் ஆனவை தான்.பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது தான் இந்த மனித உடல்.ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல் வளர்ச்சியுற்று பிரியும் இதனை செல் பிரிதல் என்கிறோம்.
இந்த செல் பிரிதல் நிகழ்வானது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு நம் உடலில் நின்று விடும்.செல்கள் அழியவே தொடங்கும்.ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் அழியாமல் மேலும் செல்பிரிதலை ஊக்கப்படுத்தி செல்களை உற்பத்தி செய்யும்.புற்று போல் செல்களை அழியாமல் உற்பத்தி செய்து கட்டியாகவோ வீக்கமாகவோ உருமாறும் முதலில் இதனை தான் புற்றுநோய் என்கிறோம்.
மார்பக புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்:
- மார்பக புற்றுநோய் என்றாலே முதலில் தோன்றும் அறிகுறி மார்பில் தோன்றும் சிறுசிறு வலியை ஏற்படுத்தாத கட்டிகள் ஆகும்.இதனை ஆரம்ப காலங்களிலிலேயே கண்டறியும் பெண்களோ ஆண்களோ இந்த புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைய வாய்ப்புகள் 💯% உள்ளது.
- இரண்டு மார்பகங்களின் உருவ அளவில் ஏதேனும் மாறுபாடுகள் தென்பட்டாலும் அதை கவனிக்க வேண்டும்.
- மார்பு காம்புகளில் ஏதேனும் உருவ மாற்றம் தென்படுதல்.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகமாக வருவதற்கான காரணங்கள் என்னென்ன?
- தற்போதைய காலக்கட்டங்களில் பெண் பிள்ளைகள் சிறுவயதிலேயே தங்களுடைய மாதவிடாய் பருவத்தை அடைந்து விடுகிறார்கள்.இதனால் அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் அதிகப்படியான மாதவிடாய் காலங்களை தொடர்ச்சியாக கடந்து வருவதாலும் இந்த மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
- வாழ்நாளில் குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்களுக்கு குழந்தைகள் பெற்றுக்கொண்ட பெண்களை விட மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- குழந்தைப்பேறுக்காக பெண்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளாலும் அதாவது ஹார்மோன் மாற்ற மருந்துகளாலும் மார்பக புற்றுநோய் வரலாம்.
- வயதான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் தருவாயில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் மார்பக புற்றுநோய் ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்:
- ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் பெரும்பாலானோர்க்கு சாதாரண வலியை ஏற்ப்படுத்தாத கட்டிகள் வருவதே முதற்கட்ட அறிகுறியாக அறியப்படுகிறது.
- ஆண்களின் முளைக்காம்பில் இருந்து திரவம் சுரத்தல்.
- மார்பகங்களின் ஒழுங்கற்ற வடிவம்
தீவிரமான மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?
- மார்பக தோலில் ஏற்படும் அரிப்பு போன்ற அழற்சி.புற்றுநோய் இல்லாவிட்டாலும் இது போன்ற தோல் அரிப்பு அலர்ஜி காரணமாக எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு அதனால் இந்த அறிகுறியை எல்லோரும் தவரவிடுகிறார்கள்.
- மார்பக காம்புகளில் ஏற்படும் உருவ மாற்றம் மற்றும் அது உள்பக்கமாக அதவாது பள்ளமாக மாறுதல்.
- மார்பகங்களில் குறுகிய காலத்தில் ஏற்படும் வீக்கம்.
- மார்பகங்களில் வீக்கம் ஏற்பட்ட சில காலத்தில் மார்பகங்களின் நிறம் மாறுதல்.
- அக்குள் பகுதியில் ஏற்படும் சிறு சிறுகட்டிகள்.
- மார்பகத்தின் தசைப்பகுதியில் தீடீரென ஏற்படும் அளவுக்கு அதிகமான வலி.
மார்பக புற்றுநோயை ஆரம்பகால அறிகுறிகளை கண்டறியும் வழிமுறைகள்
பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலம் முடிந்து ஆறு அல்லது எட்டு நாட்களுக்கு பிறகு வீட்டில் கண்ணாடி முன் நின்று கொண்டு தங்களுடைய மார்பகங்களின் வடிவங்களை சரிபார்க்க வேண்டும்.அதோடு ஒவ்வொரு மார்பகத்தையும் அழுத்தி பார்த்து ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
மார்பக புற்றுநோய் தமக்கு இருக்கலாம் என்று சந்தேகப்படுபவர்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகி முறையாக பரிசோதித்துக் கொள்வது நல்லது.
28 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 3 வருடங்களுக்கு ஒரு முறை மார்பக புற்றுநோய் உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.
45 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை மார்பக புற்றுநோய் உள்ளதா என பரிசோதித்துக் கொள்வது நல்லது.
மார்பக புற்றுநோய் பரிசோதனை விவரங்கள்;
மார்பக புற்றுநோயை கண்டறிய செய்யும் பரிசோதனையின் பெயர் தான் மோமோகிராம் .இந்த சோதனை 20 நிமிடங்கள் நீடிக்கும்.
இது சாதரண எக்ஸ்ரே சோதனை போன்று தான் இருக்கும்.ஆனால் இதில் குறைவான கதிர்வீச்சுகளே செலுத்துவார்கள்.
ஆனால் மோமோகிராம் சோதனை மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும்.இரு மார்பகங்களை அழுத்தி தட்டையாக்கி ஒரு இரும்பு தட்டைகளின் வைத்து மோமோ கிராம் சோதனை செய்யப்படும்.
மோமோகிராம் சிகிச்சையில் 1 சென்டிமீட்டருக்கும் குறைவாக உள்ள கட்டிகளை கூட கண்டறிய முடியும் என்பது கூடுதல் தகவல்.
இதனாலேயே மருத்துவர்கள் இந்த வலி மிகுந்த பரிசோதனை தான் உங்களை புற்றுநோய் எனும் மரணத்திடம் இருந்து காப்பாற்றும் மருந்தாகும் என்கிறார்கள்.
ஏனென்றால் மார்பக புற்றுநோயை ஆரம்பகால அறிகுறியிலேயே கண்டுபிடித்து விட்டால் உயிரிழப்பு என்பதை நூறு சதவீதம் தவிர்க்க முடியும் என்கின்றனர்.
ஆனால் இந்தியாவில் பெரும்பாலான அதாவது பாதிக்கு பாதி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கு காரணம் மார்பக புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளை சரியாக கவனிக்காது விட்டுவிட்டு மூன்று மற்றும் நான்காம் கட்ட அறிகுறிகளில் இதனை கண்டுபிடிப்புது தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
முதல் கட்ட மார்பக புற்றுநோயில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை மரணத்திடம் இருந்து அவர்களை காப்பது மிகவும் எளிதான விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவான மார்பக புற்றுநோய் அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுவது
- மார்பகம் அல்லது அக்குள் (அக்குள்) புதிய கட்டி.
- மார்பகத்தின் ஒரு பகுதி தடித்தல் அல்லது வீக்கம்.
- மார்பக தோலில் எரிச்சல் அல்லது மங்கல்.
- முலைக்காம்பு பகுதியில் அல்லது மார்பகத்தில் சிவத்தல் அல்லது செதில்களாக தோல்.
- முலைக்காம்பில் இழுத்தல் அல்லது முலைக்காம்பு பகுதியில் வலி.
- தாய்ப்பாலைத் தவிர ,இரத்தம் உட்பட பிற திரவங்களை முலைக்காம்பு வெளியேற்றுவது.
- மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றம்.
- மார்பகத்தின் எந்தப் பகுதியிலும் வலி
சாதாரண மார்பகம் எப்படி இருக்கும்?
மார்பகம் என்றால் இப்படித்தான் என்று எந்த வரையறையும் இல்லை. உங்களுக்கு இயல்பான ஒன்று இன்னொரு பெண்ணுக்கு சாதாரணமாக இருக்காது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பகங்கள் கட்டியாக அல்லது சீரற்றதாக இருப்பதாக கூறுகிறார்கள். உங்கள் மார்பகங்கள் தோற்றமளிக்கும் விதம் உங்கள் மாதவிடாய், குழந்தைகளைப் பெறுதல், எடை குறைதல் அல்லது அதிகரிப்பு மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதன் மூலம் பாதிக்கப்படலாம். நீங்கள் வயதாகும்போது மார்பகங்களும் மாறும். மேலும் தகவலுக்கு, தேசிய புற்றுநோய் நிறுவனத்தைப் பார்க்கவும