வாடகைத் தாய் முறை சட்டப்பூர்வமானதா? - Surrogacy Meaning in Tamil

Vizhimaa
0

Surrogacy Meaning in Tamil 

Surrogacy - Surrogatus என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது.surrogatous என்பதற்கு இலத்தீன் மொழியில் "மாற்று" என்று பொருள்படும்.

Surrogacy Meaning in tamil
Surrogacy Meaning in Tamil

Surrogacy என்றால் "வாடகைத்தாய்" என்பதை கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் நீங்கள் இந்நேரம் தெரிந்து கொண்டு இருக்கலாம். நிச்சயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் வாடகை தாய் என்றால் என்ன? வாடகை தாயை எப்பொழுது அணுக வேண்டும்? வாடகைத்தாய் முறைக்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்னென்ன? வாடகை தாய் முறையானதா? சட்டபூர்வமானதா? என்பதை எல்லாம் விளக்கமாக இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாடகைத் தாய் என்றால் என்ன?


இயற்கையாகவே ஏதோ ஒரு குறையினால் அல்லது ஏதோ ஒரு மதிப்பிடத்தக்க காரணத்தினால் ஒரு குழந்தையை சுமக்கும் தன்மையை  இழந்த பெண்களுக்காக அவர்களுடைய குழந்தையை தன்னுடைய கருப்பையில் வளர்த்துக் கொடுப்பவளே வாடகைத்தாய் Surrogacy Meaning in Tamil

மலட்டுத்தன்மை கொண்ட பெண்களுக்காகவும் ஒரு குழந்தையை சுமந்தால் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் வகையில் மிகவும் பலவீனமாக உள்ள பெண்களுக்காகவும் கருப்பை வளர்ச்சி அடையாத பெண்களுக்காகவும் இயற்கையாக கருத்தரித்தலினால் பெரிய ஆபத்துக்களை சந்திக்க கூடிய பெண்களுக்காகவும் தங்களுடைய கருப்பையை வாடகைக்கு தருபவளே வாடகைத்தாய் ஆவாள்.

ஒரு பெண் தன்னால் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் அவளுடைய கருமுட்டையையும் அவளுடைய கணவனின் விந்தணுபையும் எடுத்து இன்னொரு பெண்ணின் கருப்பையினுள் வைத்து ஒரு கருவை உருவாக்குவதே வாடகைத்தாய் முறையாகும். இதில் குழந்தையை சுமக்க முன் வரும் பெண்ணே வாடகைத்தாய் எனப்படுவாள்.

தன் குடும்பத்திற்கு சந்ததிகள் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த வழியினை தேர்ந்தெடுக்கின்றனர். 10 மாதம் ஒரு குழந்தையை சுமக்க முடியாமல் தவிக்கும் அவர்கள் அதனை இன்னொரு பெண்ணின் மூலம் அடைந்து விடுகின்றனர்.


வாடகத் தாயை எப்பொழுது அணுக வேண்டும்?

ஒரு பெண்ணால் நூறு சதவீதம் ஒரு குழந்தையை சுமக்க முடியாது அப்படி சுமந்தால் அவள் உயிருக்கு ஆபத்து என்கின்ற சூழ்நிலையில்தான் வாடகைத்தாய் முறையை அவள் அணுக Surrogacy Meaning in Tamil

குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு குறையும் என்றோ அல்லது தன்னுடைய தொழிலிலோ அல்லது வியாபாரத்திலோ முன்னேற முடியாது என்றோ வாடகைத்தாய் முறையை நாடிச் செல்வது என்பது நம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தான் சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் இயற்கையிலே கருப்பு இல்லாமல் பிறந்த பெண்கள் ஏதாவது ஒரு நோயினால் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பெண்கள் ஒரு குழந்தையை சுமக்க இயலாத பெண்கள் ஆகியோர் இந்த முறைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உதாரணத்திற்கு தைராய்டு சர்க்கரை நோய் இன்னும் பல்வேறு நோய்கள் உள்ள பெண்களால் தங்களுடைய கருவில் ஒரு ஆரோக்கியமான குழந்தையை சுமக்க முடியாத சூழ்நிலையில் வாடகை தாயை அணுகலாம்.


வாடகைத்தாய் முறைக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்;

  • வாடகைத்தாய் முறையை அணுக திருமணமான அந்த தம்பதிகளுக்கு குறிப்பிட்ட வருடங்கள் ஆவது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
  • குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அந்த பெண்ணின் இயலாமையை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்க வேண்டும்.
  • அதாவது ஒரு கருவை தங்களால் சுமக்க முடியாது என்பதை அறிவியல் பூர்வமாக அவர்கள் நிரூபித்தாக வேண்டும்.
  • வாடகை தாயாக முன் வரும் பெண்ணுடன் எந்த ஒரு வணிக ரீதியான தொடர்பும் வைத்திருக்கக் கூடாது.
  • வாடகை தாயாக வைத்துக் கொள்ள விரும்பும் பெண் உங்களுடைய உறவுக்காரர்களில் யாரேனும் ஒருவராக இருக்க வேண்டும்.
Surrogacy Meaning in Tamil

வாடகைத் தாய் முறை சட்டப்பூர்வமானதா?

இந்தியாவில் வாடகைத்தாய் முறையானது இதுவரை குறைந்த அளவிலேயே பரவி இருக்கிறது ஆனால் இனிவரும் காலங்களில் வாடகைத்தாய் முறையானது நிச்சயம் பெரிய அளவில் பரவி விடும் என்கிற சூழ்நிலையானது தற்போது இருக்கிறது ஏனென்றால் மாறிவரும் காலநிலையும் சூழ்நிலைகளும் ஆண் பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது எனவே பிற்காலத்தில் வாடகத்தாய் முறையானது நிச்சயம் பெருக தான் போகிறது எனவே இதற்கு ஒரு அதிகாரப்பூர்வ சட்டமானது தேவைப்படுகிறது.

அத்தோடு வாடகைத்தாய் முறையில் கடுமையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டால் மட்டுமே சில வணிக ரீதியான லாபங்களில் இருந்து குழந்தை பிறப்பு என்கின்ற ஒரு புனிதமான அமைப்பை நம்மால் காப்பாற்ற முடியும்.


இப்போதைக்கு 2021 ஆம் ஆண்டு வாடகைத்தாய் முறைக்கான ஒரு சட்டமானது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் வாடகை தாயாக இருக்க முன்வருபவர்கள் அந்த தம்பதிகளின் உறவுக்காரர்களாக மட்டுமே இருக்க வேண்டும். என்றும் வாடகை தாய்க்கு எந்தவிதமான ஊக்க தொகையோ உதவி தொகையோ கொடுக்கக் கூடாது என்றும் அத்தோடு திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாக அதாவது குறிப்பிட்ட வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடகை தாயாக இருக்கும் பெண்ணிற்கு மாதாந்திரம் ரூபாய் 3000 குழந்தை பெற்றவுடன் ரூபாய் இரண்டு புள்ளி ஐந்து லட்சம் கொடுக்கப்படுகிறது தற்போதைய Surrogacy Meaning in Tamil

ஆனால் இன்னமும் கூட வாடகைத்தாய் முறை காண அதிகாரப்பூர்வமான சட்டங்கள் எதுவும் வரையறுக்கப்படவில்லை ஆனால் இந்த முறைக்கான சட்டமானது நிச்சயம் எழுதப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் கூட.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top