கிராமத்தில் சம்பாதிக்க ஏற்ற தொழில்கள் - Village Business Ideas in Tamil

Vizhimaa
0

கிராமத்தில் சம்பாதிக்க ஏற்ற தொழில்கள் - Village Business Ideas in Tamil 

வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? கைநிறைய சம்பாதித்து சீக்கிரம் வாழ்க்கையில் முன்னேறி ஒரு நல்ல நிலையை அடைந்து விடலாமா என்று எண்ணுபவர்கள் அதிகம் இருந்த காலம் போய் தற்போதைய இளைஞர்கள் உள்ளூரிலேயே வேலை பார்த்து தங்களால் முன்னேற முடியும் என்ற எண்ணத்தை தங்களுக்குள் விதைத்து வருகின்றனர் அந்த எண்ணம் கொண்ட இளைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவானது இடப்படுகிறது.


Village Business idea's in Tamil

  1. டீ கடை:
டீக்கடை வைத்து வாழ்க்கையில் பெரிய ஆளாக வந்தவர்கள் ஏராளம் அவர்களின் வரிசையில் நீங்களும் கூட ஒருவராக மாற வாய்ப்பிருக்கிறது.காலை,மதியம் இரவு என எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் டீ குடிக்கும் பழக்கமானது பரவி வருகிறது.எனவே டீ கடை என்பது கிராம புறங்களில் சம்பாதிக்க சிறந்த வியாபாரமாகவே இருக்கும்.டீ கடையை முதலில் ஆரம்பிக்கும் போது உங்கள் கிராமத்தில் எப்படி வியாபாரமாகிறது என்பதை பார்க்க முதலில் ஒரு மாதம் காலை மற்றும் மாலை என இரண்டு வேலை மட்டும் வியாபாரம் செய்யுங்கள்.பின் உங்கள் வியாபாரம் நன்றாக இருப்பின் முழு நேரமும் வியாபாரம் செய்ய தொடங்குங்கள்....
வியாபாரம் நன்றாக செல்ல வேண்டும் என்றால் டீ க்கு தொட்டு கொள்ள பிஸ்கெட்,பண் போன்ற பொருட்களையும் விற்பனைக்கு வையுங்கள்.


வியாபாரம் நன்றாக இருப்பதாக தோன்றினால் கூடவே பஜ்ஜி போண்டா சமோசா போன்ற உணவுகளையும் விற்பனைக்கு வைக்கலாம்.

ஒரு டீ கடையின் மூலம் மாதத்திற்கு 10 முதல் 30000 வரை வருமானம் ஈட்ட முடியும்.


2.துரித உணவுகள் கடை;

Fast food கடை கிராமங்களில் மக்கள் துரித உணவுகளை வாரம் ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ சாப்பிட்ட காலம் போய் இப்பொழுதெல்லாம் நினைத்தால் சிக்கன் ரைஸ்,Egg ரைஸ் என்று சாப்பிடுகின்றனர்.கூடவே பானிப்பூரி பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

சிக்கன் பக்கோடா,சிக்கன் வறுவல் Beef வறுவல்,சிக்கன் சிக்ஸிடிவை போன்ற தள்ளுவண்டி கடைகளும் நல்ல வியாபாரம்‌ செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

எனவே இதுபோன்ற துரித உணவு கடைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் என்று வைத்து பாருங்கள்...
வியாபாரம் எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொண்டு பின்பு தினசரி வைப்பதை பற்றி யோசித்துக்கொள்ளலாம்....

வாரத்தில் சனி ஞாயிறு மட்டும் வைக்கலாம்,அல்லது வியாழன் ஞாயிறு கிழமைகளில் மட்டும் வைக்கலாம்....

இந்த துரித உணவுகள் மூலம் மாதத்திற்கு 15 முதல் 40 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.


3.சிறிய அளவிலான துணிக்கடை;

கிராம புறங்களில் தினமும் யாரும் துணி எடுக்க மாட்டார்கள் என்று நினைத்து கொண்டு இந்த வியாபாரத்தை நீங்கள் தேர்வு செய்யாமல் போகலாம்.ஆனால் உண்மையில் கிராமங்களில் எதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொண்டால்,துணி வியாபாரத்திலும் செக்க போடு போடலாம்....

ஒன்று வாங்குனா ஒன்று இலவசம், இரண்டு வாங்குனா ஒன்று இலவசம் னு வச்சு துணிய வியாபாரம் செஞ்சி பாருங்க....

அதோட உங்கள் கிராமங்களில் மக்கள் எப்படி துணி போடுறாங்க என்ன மாதிரியான துணிகள் விற்பனை செஞ்சா நல்லா விற்பனையாகும் னு யோசிச்சு பண்ணுங்க....

மக்கள் அதிகமாக பயன்படுத்துற நைட்டி,கைலி அதோட குழந்தைங்களுக்கு வீட்டில் இருக்கும் போது போட்டுக்குற நார்மல் துணிகள் அப்படினு உங்க வியாபாரத்தை ஆரம்பிங்க....


4.மளிகை கடை 

உங்க ஊர்ல மளிகை கடை இல்லை என்ற பட்சத்துல கண்டிப்பா ஒரு மளிகை கடை ஸ்டார்ட் பண்ணுங்க. அதோட உங்க ஊர் கொஞ்சம் பெரிய ஊரு, ஆனா ஒரே ஒரு மளிகை கடை தான் இருக்கு அப்படினா கண்டிப்பா இன்னொரு மளிகை கடையும் ஸ்டார்ட் பண்ணுங்க. ஒன்னும் தப்பு இல்ல அதுவும் நல்லாவே போகும்.

மளிகை கடையில ஒரு குடும்பத்துக்கு தேவையான சின்ன சின்ன பொருட்கள்ல இருந்து கொஞ்சம் பெரிய பொருட்கள் வரையுமே நீங்க விற்பனை செஞ்சீங்க அப்படின்னா மக்கள் உங்களை நாடி வருவாங்க.

அதாவது பல்லு விளக்குறதுக்கு தேவையான டூத் பிரஷ்ல இருந்து அவங்க சமைச்சு சாப்பிடறதுக்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகள் வரைக்கும் உங்க கடையில விற்பனை செய்யுங்கள்.

எப்பவுமே ஆரம்பிக்கும் போது குறைந்த லாபத்தை நோக்கமா வச்சுக்கிட்டு தான் மளிகை கடை ஆரம்பிக்கணும். எடுத்ததுமே நீங்க அதிகமான லாபத்துல பொருட்களை வித்தீங்க அப்படின்னா மக்களுக்கு உங்க மேல இருக்க நம்பிக்கை போயிடும். அதனால எப்பவுமே முதல்ல தொடங்கும் போது குறைந்த லாபத்தில் ஒரு பொருளை விற்பனை செய்யுங்கள்.


5.தனிப்பட்ட தொழில்கள்;

தனிப்பட்ட வகையில் உங்க குடும்பத்தொழில்கள் அல்லது உங்களுக்கு தெரிஞ்ச தொழில் உதாரணத்திற்கு உங்களுக்கு மர தொழில் செய்ய தெரியும் னா... மரத்தாலான ஷோபா, சேர், மரக்கட்டில், மர  டைனிங் டேபிள் போன்ற பொருட்கள் உங்களுக்கு செய்ய தெரியும் அப்படின்னா அந்த தொழில் நீங்க தொடங்கலாம். கிராமத்தில அது நல்லாவே போகும். அதே மாதிரி தனிப்பட்ட முறையில் உங்களோட திறமையை சார்ந்த தொழில்கள் அதாவது தச்சு வேலையோ அல்லது தையல் வேலையோ, பெண்களுக்கான தையல் தொழில் உங்களுக்கு தைக்க தெரியும் அப்படினா தையல் மிஷின் வாங்கி தையல் தொழில் ஆரம்பிக்கலாம்.


பெரும்பாலும் நீங்க சொந்த தொழில்கள் செய்யும் போது  உங்களுக்கு முதலீடு என்பது ரொம்பவே குறைவாக தான் இருக்கும். நீங்க இத செஞ்சு பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். உங்களுக்கு தெரியாத ஒரு தொழிலை நீங்க செய்யும்போது அதற்கான முதலீடா நீங்க போடுவது கொஞ்சம்  அதிகமா இருக்கும்.  உங்களுக்கு தெரிஞ்ச தொழிலை நீங்க தொடங்கும் போது அதற்கான முதலீடுக்கு உங்களுக்கு நிறையவே யோசனைகள் வரும். ஆலோசனைகள் கேப்பீங்க அதன் மூலமா உங்களோட முதலீடு கொஞ்சம் குறையவே செய்யும்.

6.கால்நடைகள் வளர்த்தல்;

கால்நடைகள் வளர்த்தல், அப்படின்னா என்னன்னு புரியலையா அதாவது ஆடு, மாடு இதெல்லாம் வளர்க்கறது. பெரும்பாலும் கிராமப்புறங்களில் எல்லா வீடுகளிலும் மாடோ ஆடோ ஏதாவது ஒன்னு வளர்த்துக்கிட்டு தான் இருப்பாங்க. நீங்க நல்லா பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும். இப்போ நீங்க சராசரியா ஒரு அளவுக்கு வருமானம் பாக்கணும்னு நினைக்கிறீங்க அப்படின்னா முதல்ல ஒரு இரண்டு மாடுகள் அதாவது பசு மாடுகள் பிடித்து அதை வளர்த்து அதன் மூலமா கிடைக்கிற பாலை கொண்டு வருமானம் பார்க்கலாம்.

இல்ல நான் பெரிய அளவுல வருமானத்தை எதிர்பார்க்கிறேன் அப்படின்னு நீங்க நினைச்சீங்கனா மாட்டுப் பண்ணையோ ஆட்டு பண்ணையோ பெரிய அளவுல நீங்க வைக்கலாம். உங்களுக்கு சொந்தமா ஒரு நாலு ஏக்கர் அல்லது ரெண்டு ஏக்கர்! ரெண்டுல இருந்து நாலு ஏக்கர் இருந்தா போதும் நிச்சயமாக உங்களால் ஒரு மாட்டு பண்ணைய சக்சஸ் புல்லா நடத்த முடியும்.


பத்து மாடுகள் பசுமாடுகள் இருந்தால் அந்த ஊரிலேயே நீங்க தான் பணக்காரன் என்று சொல்லுவாங்க! உண்மையா தாங்க ஒரு ரெண்டு மாடுல இருந்து ஆரம்பிங்க. 

வியாபாரம் நல்லா போச்சு அப்படின்னா உங்க கிராமத்திலிருந்து பக்கத்துல இருக்க டீ கிடைக்கும் அல்லது கேன்டின்களுக்கோ கல்லூரி கேன்டிங்களுக்கோ பால் நீங்க விற்பனைக்கு கொடுக்கலாம். அதாவது நீங்க நார்மலா பால் ஸ்டோர்ல ஊத்துற விலையை விட அங்க கொஞ்சம் கூடுதலாக எடுத்துக்குவாங்க நீங்க நேர்ல போய் பேசினீங்க அப்படின்னா இது எல்லாமே சாத்தியமாகும்.


7.தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு கிராமப்புறங்களில் தேனீ வளர்ப்பு தொழில் அப்படிங்கறது பெரும்பாலும் இன்னும்  அதிகமா பரவல. நிச்சயமா தேனி வளர்ப்பு தொழிலை நீங்க ஆரம்பிச்சீங்க அப்படின்னா அது வெற்றி அடைய 90 சதவீத வாய்ப்புகள் அதிகம் ஏன்னா உண்மையா ஒரிஜினலான அதாவது சுத்தமான தேனையே மக்கள் சாப்பிடுவதற்கு விரும்புவாங்க.

நீங்க தேனீ வளர்ப்பு மூலமா அறுவடை செய்கிற தேனை சுத்தமான ஒரிஜினல் தேன் என்று மக்களிடத்தில் நம்ப வைத்து வியாபாரம் செய்யலாம்.  நம்பல அப்படின்னா உங்களோட பண்ணைக்கு அதாவது உங்களோட ,நீங்க‌ தேனி வளர்ப்பு வச்சிருக்க இடத்துக்கே அவங்களை கூட்டிட்டு போய் காட்டி இந்த மாதிரி தேனீக்களை நாங்களே வளர்த்து தேனை அறுவடை செய்கிறோம் அப்படின்னு சொல்லி நீங்க வியாபாரம் பண்ணலாம்.  


8.வேளாண் சார்ந்த தொழில்கள்

முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்திருக்க தொழிலான விதை விற்பனையோ அல்லது உர விற்பனையோ அல்லது மருந்து விற்பனையும் நீங்கள் தாராளமா செய்யலாம் உங்கள் கிராமத்தில் சுத்தமான நல்ல விதைகளையும் நல்ல உரங்களையும் முக்கியமா இயற்கை உரங்களை நீங்க விக்கிறது மூலம் நல்ல லாபம் அடையலாம்.

தற்போது உள்ள சூழ்நிலை எல்லாருமே இயற்கையான முறையில் வாழ விரும்புறது நாம் பார்க்க முடிகிறது எனவே இது இயற்கையாக சுத்தமாக தயாரிக்கப்படுகிறது என்றால் எல்லோரும் விரும்பி வாங்குவார்கள். அதோடு இயற்கை உரங்கள் இயற்கை விதைகள் இயற்கையான மருந்துகள் போன்ற அடிப்படையில் உங்களுடைய தொழில்கள் இருக்கிறது என்றால் நிச்சயம் வெற்றி அடைய நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.

9.கோழி,மீன் வளர்ப்பு

நாட்டுக்கோழி விற்பனை சமீபத்தில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. கோழியை இயற்கையான முறையில் வளர்த்து அதை விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் அந்தக் கோழியின் விலை ஆனது பிராய்லர் கோழிகளை விட இரு மடங்கு விலை அதிகமாகவே இருக்கிறது. எனவே ஒரு நாட்டுக்கோழி பண்ணையையோ அல்லது சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை வைத்து உங்களால் நல்ல லாபம் அடைய முடியும்.

அதோடு ஒரு பிராய்லர் கோழியின் முட்டையின் விலை ஐந்து ரூபாய் என்றால் நாட்டுக்கோழி முட்டையின் விலை 10 ரூபாய் எனவே நீங்கள் நாட்டுக்கோழி பண்ணையை வைத்தீர்கள் என்றால் நிச்சயம் லாபம் இரு மடங்கு வரும்.

கிராமப்புறங்களில் மீன் வளர்ப்பு என்பது தற்போதைய காலங்களில் பெருகிக்கொண்டே வருகிறது. மீனில் உள்ள நல்ல ஊட்டச்சத்துக்களின் மூலமாகவே மக்கள் மீனை அதிகமாக உண்ண விரும்புகின்றனர். எனவே நீங்கள் ஒரு மீன் பண்ணை அதாவது உங்களுடைய கிராமங்களில் உள்ள குளங்களில் கூட நீங்கள் மீன்களை வளர்த்து விற்பனை செய்யலாம் அதற்கான முறையான அனுமதியை பெற்று நீங்கள் நிச்சயம் செய்யலாம். அல்லது உங்கள் வயலிலேயே ஒரு குளம் வெட்டி  மீன் வளர்த்து விற்கவும் செய்யலாம்.

10.ஜெராக்ஸ் கடை - பட்டா சிட்டா

உங்கள் கிராமத்தில் ஏதேனும் பேங்க் அதாவது வங்கி அருகில் இருக்கிறது என்றால் அதன் அருகில் அல்லது பள்ளி கல்லூரிகள் இருக்கிறது என்றால் அதன் அருகிலும் ஒரு ஜெராக்ஸ் கடையோ அல்லது நெட் சென்டரோ அல்லது பொது சேவை மையமும் ஆரம்பித்தீர்கள் என்றால் நிச்சயம் அது வெற்றி அடையும்.

சாதாரணமாக ஒரு பட்டா சிட்டா எடுப்பதற்கு ஒரு மொபைல் போனும் ஒரு ஒரு பிரிண்ட்டர் இருந்தால் போதும் என்ற நிலையே தற்போது உள்ளது.
கிராமப்புறங்களில் ஒரு பட்டாவும் சிட்டாவும் எடுப்பதற்கு தலா இருபதில் இருந்து 30 ரூபாய் வரை வாங்குகின்றனர். அதனால் நீங்கள் ஒரு மொபைல் ஃபோனையும் பிரிண்டரையும் வைத்துக்கொண்டு சுலபமாக உங்களால் சம்பாதிக்க முடியும்.

ஜெராக்ஸ் கடை என்று ஆரம்பித்து அதன் மூலம் இது போன்ற பட்டா சிட்டா போட்டோ இன்னும் சில, மொபைல் ரீசார்ஜ், பிரிண்ட் அவுட் போன்ற வசதிகளை நீங்கள் செய்து கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு இந்த தொழில் கை கொடுக்கும்.

  1. பொது சேவை மையம்- ஜெராக்ஸ் கடை (Common Services Centre)
  2. டீ கடை
  3. துரித உணவகம்
  4. சிறிய அளவிலான துணிக்கடை
  5. மளிகை கடை
  6. தனிப்பட்ட தொழில்கள்
  7. கால்நடைகள் வளர்த்தல்
  8. தேனீ வளர்ப்பு
  9. வேளாண் சார்ந்த தொழில்கள்
  10. கோழி,மீன் வளர்ப்பு
மேலே கூறப்பட்டுள்ள 10 தொழில்களுமே நீங்கள் கிராமப்புறங்களில் செய்வதற்கு மிகவும் ஏற்றதும் எளிமையானதும் உங்களால் நிச்சயம் செய்யக் கூடியதுமான தொழில்களே எனவே நீங்கள் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் மேலே கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொழிலை உங்கள் கிராமத்தில் தொடங்குவது நிச்சயம் பலன் அளிக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top