14-09-2023 (வியாழன்) - Tomorrow Rasi Palan

Vizhimaa
0

நாளைய (14-09-2023) ராசி பலன்கள் - Tomorrow Rasi Palan 

Tomorrow Rasi Palan in Tamil


மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் 


செப்டம்பர் 14, 2023


பிள்ளைகளின் மூலம் வரவுகள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இன்பச் சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : சிந்தித்துச் செயல்படவும். 


பரணி : அறிமுகம் ஏற்படும். 


கிருத்திகை : அனுபவங்கள் உண்டாகும். 

---------------------------------------


ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் 


செப்டம்பர் 14, 2023

தாய்வழி உறவுகளால் அலைச்சல்கள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வீண் வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகள் சாதகமாக முடியும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நட்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 



கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும். 


ரோகிணி : வதந்திகள் நீங்கும். 


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். 

---------------------------------------

மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் 


செப்டம்பர் 14, 2023


மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடன் கலந்து பேசி சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான விருப்பம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும். 


புனர்பூசம் : விருப்பம் அதிகரிக்கும். 

---------------------------------------


கடகம்
கடக ராசிக்கான பலன்கள்

செப்டம்பர் 14, 2023

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு படிப்படியாகக் குறையும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


பூசம் : அறிமுகம் கிடைக்கும். 


ஆயில்யம் : மதிப்பு மேம்படும்.  

---------------------------------------

சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் 

செப்டம்பர் 14, 2023

சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விடாப்பிடியாகச் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உள்ளூர் பயண வாய்ப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். சகோதரர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : சலனங்கள் நீங்கும்.


பூரம் : அனுகூலம் ஏற்படும். 


உத்திரம் : உதவிகள் சாதகமாகும். 

---------------------------------------


கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் 


செப்டம்பர் 14, 2023

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கடன்களை குறைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.


அஸ்தம் : அனுபவம் உண்டாகும். 


சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.  

---------------------------------------

துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் 

செப்டம்பர் 14, 2023

எதிர்காலத்திற்கான சேமிப்பை உருவாக்குவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். துறை சார்ந்த சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும். 


சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


விசாகம் : சுறுசுறுப்பான நாள். 

---------------------------------------

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் 


செப்டம்பர் 14, 2023

நண்பர்களிடத்தில் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மல்யுத்த போட்டிகளில் ஒருவிதமான ஆர்வம் ஏற்படும். நிர்வாக செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படுதல் அவசியமாகும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


அனுஷம் : ஆர்வம் ஏற்படும். 


கேட்டை : ஆதாயம் உண்டாகும். 

---------------------------------------

தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் 

செப்டம்பர் 14, 2023

தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபார பணிகளில் அனுபவம் மேம்படும். காரியங்கள் அனுகூலமாக முடியும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



மூலம் : ஆதாயம் கிடைக்கும். 


பூராடம் : அனுபவம் மேம்படும். 


உத்திராடம் : பணவரவு உண்டாகும்.  

---------------------------------------

மகரம்
மகர ராசிக்கான பலன்கள் 


செப்டம்பர் 14, 2023

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். எதிலும் நிதானமாகச் செயல்படவும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைபிடிக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


திருவோணம் : குழப்பம் விலகும்.


அவிட்டம் : பொறுமை வேண்டும். 

---------------------------------------

கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் 

செப்டம்பர் 14, 2023

உறவினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்குப் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனை நிமிர்த்தமான செயல்பாடுகளின் மூலம் லாபம் ஏற்படும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 


சதயம் : நம்பிக்கை மேம்படும்.


பூரட்டாதி : லாபம் ஏற்படும்.  

---------------------------------------

மீனம்
மீன ராசிக்கான பலன்கள் 


செப்டம்பர் 14, 2023

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைகள் அமையும். எதிர்பார்த்திருந்த சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : முடிவு கிடைக்கும். 


உத்திரட்டாதி : விருப்பம் நிறைவேறும்.


ரேவதி : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------








Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top