Life Quotes in Tamil;
வணக்கம்🙏
வாழ்க்கை என்பது பல இன்னல்களையும் இன்பங்களையும் சொல்லித் தரும் ஒரு அனுபவமாகவே எல்லோருக்கும் அமைகிறது. அப்படிப்பட்ட இந்த வாழ்க்கையை நாம் சிறப்பாக வாழ்வதற்கு சில மேற்கோள்கள் அல்லது உதாரணங்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தேவைப்படுகிறது. அத்தகைய வாழ்வியல் சூழ்நிலை தங்களுக்கு ஏற்படுமேயானால் இந்த வாழ்க்கை தத்துவ கவிதைகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
வாழ்க்கை வாழ்க்கை
வெறும் கையுடன் வந்து
வெறும் கையுடன் வந்து
வெறும் கையுடன்
செல்லும் ஒரு பயணம்
மகிழ்ச்சியை பகிர
கூப்பிட்டால் போகனும்
துன்பத்தை பகிர
கூப்பிடாமலே போகனும்
‘பணம்’ வாழ்க்கையின்
‘ஆதாரம்....!_*
*பாசம்_* 'வாழ்க்கையின்
அஸ்திவாரம்....!
சில நேரங்களில்
முட்டாளாக இருப்பதும்
புத்திசாலித்தனம்தான்!
அதிகமான அன்பை விட
சரியான புரிதல் தான்,
எந்த உறவையும் நீண்ட
காலம் வாழ வைக்கும்......
யாருக்காக எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்கிறோமோ!
அவர்களே நம்மை
புரிந்துகொள்வதில்லை...
இறுதியில்!
Positive Life Quotes in Tamil
நேர்மையான சிந்தனைகள் மட்டுமே ஒரு மனிதனை தன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழியை தேடிக் கொள்வதற்கான மனோ பலத்தை தருகிறது. எனவே ஒவ்வொருவரும் தன் மனதிற்குள் இருக்கும் நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் எந்த அளவிற்கு நேர்மறையான சிந்தனைகளால் வளர்க்கப்பட்டும் சூழப்பட்டும் இருக்கிறானோ? அதே அளவிற்கான வெற்றியை தன் வாழ்நாளில் நிச்சயம் எட்டுவான் என்பது பரிபூரணமான உண்மையாகும்.
கண்ணாடி நம் முகத்தில்
அழுக்கை காட்டினால்
கண்ணாடியை உடைக்க
மாட்டோம், மாறாக
முகத்தை சுத்தம் செய்வோம்.
அதே போல், நம் குறைகளைச்
சுட்டிக் காட்டுபவர்களிடம்
கோபப்படக் கூடாது, மாறாக,
நம் குறைகளை சரி செய்து
கொள்ள வேண்டும்.
காந்தியின் புன்னகை
எல்லா ரூபாய் நோட்டுகளிலும்
ஒரே மாதிரி தான் உள்ளது.
ஆனால் மனிதர்களின்
புன்னகை தான் ரூபாய்
நோட்டுகளுக்கு ஏற்ற மாதிரி
மாறிக்கொண்டே இருக்கிறது....
கடினமாக உழைத்தால் மட்டும்
வாழ்க்கை மாறிடாது.
கொஞ்சம் கவனமாகவும்
உழைத்தால் மட்டுமே
வாழ்க்கை மாறும்.
குப்பையில் கிடந்தாலும்
தங்கத்தின் மதிப்பு
குறைவதில்லை...
குடிசையில் வாழ்ந்தாலும்
நல்லவர்களின் மதிப்பு
குறைவதில்லை...
சாதிக்கணும் என்ற
வெறியும் எதையும்
சமாளிக்கலாம் என்ற
தைரியமும் உனக்குள்
இருக்கும் வரை உன் நிழலை
கூட ஒருவராலும் நெருங்க
முடியாது...
உடைந்து போன நிலையிலும்
அடுத்த அடியை உன்னால்
எடுத்து வைக்க முடிந்தால்
எவராலும் உன்னை
தோற்கடிக்க முடியாது!
விழுந்து விழுந்து கூட
சிரித்துக் கொள்ளுங்களேன்
தவறில்லை;ஆனால் விழுந்து
கிடப்பவனை பார்த்து ஒரு
போதும் சிரிக்காதீர்கள்...
மறந்து கூட நினைத்துவீடாதீர்கள்
உங்களை கஷ்டப்படுத்தியவர்களை!
அதுபோல், நினைக்க மறக்காதீர்கள்!
கஷ்டத்தில் உதவியவர்களை...
Positive Life Motivational Quotes in Tamil - Painfull life quotes in Tamil
எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலையிலும் ஒரு தன்னம்பிக்கை கவிதை ஆனது நேர்மறையான தீப்பொறியை ஒரு மனிதனுக்குள் புகுத்தும் வல்லமை பெற்றுள்ளது. இந்த பதிவும் உங்களுக்கு அத்தகையதொரு நேர்மறையான தன்னம்பிக்கையான உணர்வுகளை தரும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை எனவே இந்த கவிதைகளை படித்து வாழ்க்கையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த கவிதைகளின் நோக்கமாகும்.
காலண்டரில் தேதியை
கிழிப்பது போல் உங்கள்
கஷ்டங்களை தினமும்
கிழித்தெரியுங்கள்,
ஒவ்வொரு நாளும் புதிதாய்
வாசம் கொடுக்கும்....
தோல்வி என்னும்
முகவரிக்கு செல்லாமல்
வெற்றி என்னும் வாசற்படிக்கு
வர முடியாது....
கஷ்டப்பட்டு
உழைத்து காலங்கள்
கடந்த பிறகு தான்
தெரிகிறது கவனிக்காமல்
விட்ட ஆரோக்கியம் தான்
செல்வம் என்று....
நம் விருப்பப்படி
அமைவது அல்ல
வாழ்க்கை....
நம் விதிப்படி
அமைவது தான்
வாழ்க்கை....
கடமை என நினைத்து
செய்தால் அது
வெற்றியாகிறது...
கடமைக்கு செய்தால்
அது தோல்வியில்
முடிகிறது....
உலகிலுள்ள தலைசிறந்த
போதை அவமானபட்ட
இடத்தில் வெற்றிபெற்று
காண்பிப்பது....
எதிர்பார்ப்பென்பது
நம்முள் உள்ள முதல்
எதிரி
நம்மளோட இயலாமைக்கு
கடிகாரம் பழி சுமக்கிறது....
' டைம் சரியில்லை "
வாழ்வதற்காக...
வாழ்க்கையை...
தொலைப்பது தான்.
மனித வாழ்க்கை.
நாம் மாறாத வரை
இங்கு எதுவும் மாறாது....
யாரையும் குறைவாக எடை
போடாதீர்கள் காசோலையில்
5 கோடி ரூபாய் எழுத 2 ரூபாய்
பேனா தேவையாக இருக்கலாம்
இரைப்பை சுருங்கி
போனாலும் இதயம்
சுருங்காத சில
மனிதர்களால் தான்
இந்த பூமி இன்னும்
சுழல்கிறது.....
பெற்றோர் இறந்த
பிறகு,
விமானத்தில் வந்து
பால் ஊற்றும்
பிள்ளையைவிட,
இருக்கும் பொழுது
பக்கத்தில் இருந்து
கஞ்சி ஊற்றிய
பிள்ளையே மேல்..
Latest Tamil Life Quotes
ஏன் தான் வாழ்கிறோம்? என்ற கேள்வி உங்களுக்குள் அதிகம் எழுகிறதா அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது வாழ்க்கை தத்துவங்களை பல ஆசான்களும் அறிஞர்களும் சொன்ன சில தன்னம்பிக்கை கவிதைகளோடு உங்களுக்கு விருந்தாக வைத்துள்ளோம். இந்த கவிதைகளை நீங்கள் படிக்கும் பொழுது உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை ஒளியானது நிச்சயம் பிரகாசிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
உன்னை சுற்றி
உள்ள நபர்களை மகிழ்ச்சியாக
வைத்திருக்க விரும்பினால்
முதலில் நீ
மகிழ்ச்சியாக இரு !
உன்னிடம் இல்லாத ஒன்றை
நீ யாருக்கும் கொடுக்க
முடியது..
"நான் உன்னை விரும்புகிறேன்".
"நான் உன்னை நேசிக்கிறேன்".
இது இரண்டிற்கும் என்ன
வித்தியாசம்?
இதற்கு புத்தர் கொடுத்த
அருமையான, மிக எளிமையான
விளக்கம்:
"நீ ஒரு பூவை விரும்பும்பொழுது,
அதை பறித்து விடுகிறாய்.. ஆனால்
அந்த பூவை நீ நேசிக்கும்போழுது,
அனுதினமும் தண்ணி ஊற்றி
வளர்க்கிறாய்.."
இதை புரிந்தவனுக்கு, உலகம்
புரியும்!
ஒருவரை பற்றி
உன்னிடம் குறை கூறுபவர்கள்
உன்னை பற்றி
இன்னொருவரிடம் குறை
கூறுவார்கள்....
இரண்டு நாள்
மருத்துவ மனையில்
தங்கி பார்...
பணத்தை விட
ஆரோக்கியம் எவ்வளவு
முக்கியம் என்று தெரியும்
டீ கடையில்
வேலை செய்தால்
அது குழந்தை தொழிலாளி
சினிமா துறையில் வேலை
செய்தால் அது
குழந்தை நட்சத்திரம்...
5 வயதில்
இவள் என்னுடைய
அம்மா என்று அடித்துக்
கொள்ளும் மகன்கள்
அவளின் ஐம்பது
வயதில் இது உன்னுடைய
அம்மா என்று
அடித்து கொள்கிறார்கள்...
பணம் இருந்தால்
அள்ளிக்கொடுத்து விடு
படிப்பு இருந்தால்
சொல்லிக்கொடுத்து விடு
அப்பொழுதுதான் அதற்கு
மரியாதை.....
இப்படியும் வாழ்க்கையை ரசிக்கலாம்
வாங்க;
வீட்டு ஓனர் தன்வீட்டுக்கு முன்னால்
ஒரு போர்டு வைத்திருந்தார்..
"வீடு வாடகைக்கு விடப்படும்.
குழந்தை வைத்திருப்பவர்கள் தயவு செய்து
தொடர்பு கொள்ள வேண்டாம்" என்று..
2 நாள் கழித்து ஒரு சிறுவன் வீட்டு
ஓனரிடம் வந்தான்.
"அங்கிள் வீடு வாடகைக்கு தருவீர்களா?
எனக்கு குழந்தை கிடையாது.
அம்மா அப்பா மட்டும் தான் இருகாங்க."
Valuable Life Quotes in Tamil
உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாத பொழுது உங்களது வாழ்க்கைக்கான மதிப்பானது மிகவும் குறைகிறது. உங்கள் வாழ்க்கையின் மீது உங்களுக்கான மதிப்பு என்பது உங்களால் முடிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை வெளிப்படுத்தும் கவிதைகளாகவே இந்த பதிவுகள் அமைகிறது.
கடும் கோபத்திலும்
அடுத்தவரை காயப்
படுத்தக்கூடாது என்ற
எண்ணம் இருந்தால் நீங்களும் கடவுள்தான்
இரண்டு கை இருந்தால்
இந்த வாழ்க்கை உனக்கு
சொர்க்கமாக தெரியும்
ஒன்று நம்பிக்கை
மற்றொன்று புன்னகை
இறைவன் கொடுக்கிறான்
என்று நீ உணர்ந்தால்
நீ பெறும் எதுவும் தாழ்வாக
தெரியாது....
பொய் பேசுபவருக்கு தண்டனை
என்ன தெரியுமா... அவர் உண்மை
பேசும் போது ஒருவரும் நம்ப
மாட்டார்கள் இதுவே சிறப்பான
தண்டனை...
இவ்வளவு உயரமான
மலையா என்று ஏறுவதற்கு
மலைத்து விடாதே
மலையில் ஏறினால்
அந்த மலையே உன்
காலடியில் என்று
நினைத்துக் கொள்...
முதலில் எல்லாவற்றின்
மீதும் ஆசைப்படும்
மனது; பின்பு எதன்
மீதும் ஆசைகொள்ள
வேண்டாம் என்று தான்
நினைக்கும்.....
எனக்கு யாரும்
வேண்டாம் என்று
ஒதுங்கி போகிறவர்கள்
எல்லாம்,முன்பு
ஒருநாள் எல்லோரும்
வேண்டும் என்று
நினைத்தவர்கள் தான்
இதயம் எனும்
சிறைச்சாலையில் ஏனோ
குற்றம் செய்பவர்கள்
மாட்டிக் கொள்வதில்லை...
பாசம் வைப்பவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்...
உன் உயர்ந்த எண்ணமே
உன்னை உயர்த்த
வழிகாட்டும்.....
வயதுக்கு ஏற்ற
மகிழ்ச்சியை தராவிட்டாலும்
வயதுக்கு மீறிய
அனுபவத்தை தந்து
விடுகிறது வாழ்க்கை....
நாம் உயரும் போது
உதவும் உறவுகளை
விட,
நாம் விழும் போது
தாங்கி பிடிக்கும்
உறவுகளே நமக்கு
தேவை....
பணத்தால் ஏழையாக
இருந்தாலும்
குணத்தால் பணக்காரனாக
இரு.....
Life Feeling Quotes in Tamil
வாழ்க்கை போகிற போக்கில் உணர்த்தும் சில வலிகளையும் வளர்ச்சிகளையும் எப்படி நாம் கையாளுகிறோம் என்பது தான் வாழ்க்கை. வாழ்க்கை பயணம் ஆனது இனிக்கிறதா இல்லை இடிக்கிறதா என்பதை புரிந்து கொள்ள முடியும்.எனவே உணர்வு பூர்வமான வாழ்க்கை கவிதைகளை இந்த பதிவில் படித்து மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
எவ்வளவு துன்பத்திலேயும்
வாழ்க்கையில் உள்ள
சின்ன சின்ன
நகைச்சுவைகளை ரசிக்க
தெரிந்தால் நீ தான்
பாக்கியசாலி....
நீ வேண்டியது முளைக்காது
நீ விதைத்ததே முளைக்கும்...
அனுபவசாலிகள் வெறும்
வயதை கடந்து வருபவர்கள்
அல்ல....
மாறாக பல வலிகளை
கடந்து வருபவர்கள்....
எதையாவது யோசித்துக்
கொண்டே இருப்பவர்களுக்கு
இறுதி வரை கவலைகளில்
இருந்து விடுதலை இல்லை....
உயிர்களில் உயர்ந்தவன்
மனிதன் தான்....
நாய்,நரி என்று பச்சோந்தி
வரை விலங்குகளின்
அனைத்து குணங்களும்
மனிதன் ஒருவனிடம்
இருப்பதால்....
கோவிலில் இருக்கும்
சாம்பல்
தான் விபூதி ஆகும்...
உன் மதிப்பு என்பது
நீ இருக்கும் இடத்தை
பொறுத்தது....
மற்றவர்களின் தோள் மீது
ஏறி நின்று என் உயரத்தை
அதிகமாய் காட்டுவதை விட
தனித்து நின்று என்
உண்மையான உயரம்
இதுதான் என்று நிமிர்ந்து
நிற்பேன்....
உனக்கானது என்று
எழுதியிருந்தால்...
தள்ளிப்போகலாமே...தவிர
கிடைக்காமல் போகாது...
சில மனிதர்கள்
வாழ்க்கையின் தரமாகவும்
சில மனிதர்கள்
வாழ்க்கை பாடமாகவும்
வருவது தான் வாழ்வின்
சிறப்பு....
மாளிகையில் வாழ்கிறோமா?
இல்லை மணல் வீட்டில்
வாழ்கிறோமா? என்பது
முக்கியம் அல்ல!
நிம்மதியாக வாழ்கிறோமா?
என்பது தான் முக்கியம்.
வாழ்க்கை தத்துவ கவிதைகள்
கஷ்டத்தில்
கை கொடுத்தவனையும்
கை விட்டவனையும்
வாழ்வில் மறக்கவே
கூடாது....
***************************
தன் தவறுகளை
மூடி மறைத்து பிறருடைய
தவறுகளை மட்டுமே
சுட்டிக் காட்டுபவன்
மனிதருள் வாழும்...
மிருகம்
பேசும் திறனற்ற
காலமும் நேரமும்
தான் எல்லா
பிரச்சனைகளுக்குமான
சரியான தீர்வை
சொல்லும்
என் மேல
அன்பு வச்சா அத விட
நூறு மடங்கு அதிக
அன்பு வைப்பேன்...
என்னை
மதிக்கலனா அது
யாரா இருந்தாலும்
தூக்கி போட்டுட்டு
போய்டே
இருப்பேன்..
நல்லா பழகுறவங்களே!
முன்னாடி ஒன்னும்
பின்னாடி ஒன்னும்
பேசுறாங்க....
வேண்டுமென்றே
நம்மை வேதனைப்படுத்திவிட்டு
ஏதோ எதுவும் தெரியாமல்
நடந்தது போல் சரிக்கட்டும்
உறவுகளின் உணர்வில்லாத
வார்த்தைகள் கொடுமையான வ
நல்லவர்கள் நாடவோ
வாழவோ இந்த பூமியில்
இடமில்லை...
கெட்டவர்கள் வாழ
வசதியான இடம்
தான் இந்த பூமி
நலம் விசாரிக்கவே யோசிக்கும்
நன்றி கெட்ட உறவுகள்,
நம்மைப் பற்றி புரளி பேசும் போது
யோசிப்பதே இல்லை...
எதிரிகளை அதிகம்
சம்பாதிப்பவன் வீரன்....
துரோகிகளை அதிகம்
சம்பாதித்தால் அவன்
நல்லவன்....
அதிகமாக
முறுக்கினால் கயிறாக
இருந்தாலும் சரி! உறவாக
இருந்தாலும் சரி!
அறுந்தே போய்விடும்
அளவோடு
இருப்பதே நலம்..!
மூழ்கி விட்டாய் என்று
மற்றவர்கள் எண்ணும்போது.....
முத்தெடுத்து மேலேறி
வாருங்கள்....
கடலும் கைக்கொடுக்கும்....