ஆளைப் பார்த்து எடை போடாதே?-Short Stories in Tamil -2

Vizhimaa
0

ஆளைப் பார்த்து எடை போடாதே?-Short Stories in Tamil -2

நம் குழந்தைகளுக்காகவும் அல்லது ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்காகவும் பெரும்பாலும் நல்ல நல்ல சிறந்த கதைகளை கூறுவதற்கே விரும்புவார்கள் அதுவும் சிறுகதைகள் மிகவும் எளிமையான வடிவில் நீளம் குறைவாக நேரம் குறைவாக எடுத்துக் கொள்ளும் கதைகள் என்றால் மிகவும் விருப்பப்பட்டு குழந்தைகள் கேட்பார்கள் எனவே அவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த தமிழ் சிறுகதைகள் ஷார்ட் ஸ்டோரீஸ் இன் தமிழ் என்னும் வடிவில் இந்த வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்

ஆளை பார்த்து எடை போடாதே!One Minute Short Stories in Tamil -2

ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் தன்னுடைய உறவுக்காரர்களின் திருமணத்திற்காக வெகு தூரம் பயணம் செய்கிறான்.

யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லாமல் அவனே தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு சென்றான். அப்பொழுது ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது கார் திடீரென்று நின்று வட்டது.

காரில் என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்வதற்காக காரில் இருந்து இறங்கி வந்தான். அப்போது தான் தெரிந்தது காரில் உள்ள ஒரு டயர் பஞ்சர் ஆகி இருக்கிறது என்பது தெரியவந்தது.

Short Stories in Tamil -2
Short stories in Tamil -2

உடனே அதனை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த ஒரு டயரை மட்டும் கழட்டினான் அந்த டயரை கழட்டும்போது எடுக்கப்பட்ட அதனுடைய நான்கு போல்டுகளையும் தனது கை அருகே வைத்துவிட்டு வேலை செய்தான். 

One Minute Short Stories in Tamil -2


டயருக்கு பஞ்சர் ஒட்டிய பிறகு அந்த போல்டுகளை தன்னுடைய கைகளால் எடுத்தான், அப்பொழுது கை தவறி அந்த நான்கு போல்டுகளும் அருகில் இருந்த அழுக்கான நீர் நிறைந்த குட்டைக்குள் போல்டுகள் விழுந்து விட்டன. அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். 

அழுக்காக இருக்கின்ற அந்த குட்டைக்குள் தன்னுடைய கால்களையும் கைகளையும் விடுவதில் அவனுக்கு விருப்பமில்லை எனவே என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது அந்தப் பக்கமாக ஒரு அழுக்கான உடை அணிந்த உடல் முழுவதும் சேராக இருக்கும்படியான தோணியுடன் ஒரு ஆள் நடந்து வந்தான். அவனைப் பார்த்த பொழுது இந்த பணக்காரனுக்கு இவன் தான் இந்த போல்டுகளை அந்த அழுக்கு நீரில் இருந்து எடுப்பதற்கு சரியான ஆள் என்று தோன்றியது. 

எனவே அந்த அழுக்கான உடை அணிந்த ஆலை அழைத்து எனக்கு நீங்கள் இந்த அழுக்கு நீரில் இறங்கி என்னுடைய போர்டுகளை எடுத்து தர முடியுமா என்று நடந்த விஷயத்தை எல்லாம் தெளிவாக கூறினான். 

அப்பொழுது அந்த அழுக்கான உடை அணிந்த நபர் அந்த பணக்காரனிடம் நீங்கள் எதற்காக அந்த போல்டுகளை எடுக்க நினைக்கிறீர்கள் அதற்கு மாறாக மீதி 3 டயரிலும் உள்ள ஒரு ஒரு போல்டுகளை மட்டும் கழற்றி இந்த டயரில் போட்டு அருகிலுள்ள மெக்கானிக் கார் ஷெட்டிற்கு காரை நகர்த்திக் கொண்டு செல்ல முடியும். எனவே இது மிகவும் எளிமையான வழியாக இருக்கும் என்று கூறினான். 

மெக்கானிக் ஷெட்டிற்கு சென்ற பிறகு அங்கு புதிதாக நாலு போல்டுகளை வாங்கிக் கொண்டு அந்த டயரில் மாற்றி உங்கள் காரை நீங்கள் பழையபடி ஓட்டி செல்லலாம் என்று ஐடியா கொடுத்தார். 

இதை கேட்ட பணக்காரன் ஒரு நிமிடம் வியந்து போய் பார்த்தான்! நாம் இவனை ஒரு பிச்சைக்காரன் என்று தான் பார்த்தோம் ஆனால் இவன் ஒரு மிகச்சிறந்த அறிவாளியாக இருக்கிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டே சென்றான். 

கதையின் நீதி -Moral Of The Short Stories in Tamil -2

ஒருவரின் வெளிப்புற தோற்றத்தையோ உடல் அழகையோ வைத்து யாரையும் முழுவதுமாக மதிப்பிடுதல் கூடாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top