தேவையானது எது? - Short Stories in Tamil -1
உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டுமா? கதை மிக நீளமாக இல்லாமல் சின்னதாகவும் அதில் அற்புதமான பொருள் நிறைந்த கதைகளாகவும் தேடுகிறீர்களா? அதற்கு இந்த வலைத்தளம் சரியானதாக இருக்கும். நீங்கள் தேடும் வகையிலான கதைகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் இந்த கதைகளை உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு அல்லது உங்கள் மாணவர்களுக்கோ சொல்லிவிட முடியும் ஆனால் அதில் உள்ள பொருளை மட்டுமே உங்களால் ஐந்து நிமிடங்களுக்கு விளக்கம் அளிக்க முடியும். அத்தகையிலான கதைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.
One Minute Short Stories in Tamil - ஒரு நிமிட கதைகள்
ஒரு ஊர்ல திருவிழா நடக்குது, அந்த திருவிழாவுல பிரசங்கம் செய்து பேசுவதற்காக ஒரு பெரிய குருவை அழைக்கிறாங்க.
தேவையானது எது?-Short Stories in Tamil -1 |
அந்த குருவும் சரி நான் வரேன் அப்படின்னு ஒத்துக்கிறார். ஒரு மிகப்பெரிய தொகையையும் அட்வான்ஸ்சா வாங்குகிறார். பிரசங்கத்துக்கான நாளும் வருது. அன்னைக்கு அந்த குருவை கூப்பிடுறதுக்கு ஒரு வேலைக்கார... குதிரை வண்டில அனுப்புறாங்க. அந்த குதிரைக்காரரும் நேரா குரு இருக்கிற இடத்திற்குச் சென்று அவரை அழைச்சுக்கிட்டு பிரசங்கம் செய்ற இடத்துக்கு வராரு.
அந்த நேரத்துல ஒரே இடியும் மின்னலுமா பயங்கர மழை பெய்யுது...
இந்த மழையில போயி எப்படி பிரசங்கத்தை கேட்பது என்று சொல்லிட்டு யாருமே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பிரசங்கம் செய்கிற மைதானமும் காலியா இருந்தது.
என்ன செய்யறதுன்னு புரியாம விழிச்சிக்கிட்டு இருந்தாரு அந்த குரு. பெரிய தொகையை அட்வான்ஸ் வாங்கிட்டோமே என்கிற எண்ணம் அவருக்குள்ள உறுத்துச்சு.
இப்போ என்ன பண்ணலாம்னு அந்த குதிரைக்காரர் கிட்ட கேட்டாரு குரு. அதுக்கு அந்த குதிரைக்காரர் ஐயா நான் என் 30 குதிரைக்கும் கொள்ளு வைக்க தீனி வைக்க போகும் பொழுது எல்லா குதிரையும் வெளியே போய் ஒரு குதிரை மட்டும் அங்க இருந்தாலும் அதுக்கு தேவையான புள்ள நான் வச்சிட்டு தான் வருவேன்னு சொன்னாரு.
Short stories in Tamil - தமிழ் சிறுகதைகள்
இதைக் கேட்ட குருவுக்கு யாரோ கன்னத்துல அடிச்ச மாதிரியே இருந்தது. உடனே அங்கே இருந்த குதிரைக்காரர் ஒருத்தருக்காக மட்டும் தன்னோட பிரசங்கத்தை தொடங்கினார்.
பாவம் புண்ணியம் நரகம் சொர்க்கம் இன்னும் எதையெல்லாம் பற்றி அவருக்கு தெரியுமா அதையெல்லாம் இரண்டு மணி நேரம் பிரசங்கமா செஞ்சாரு. தன்னோட பிரசங்கத்தை முடித்துக் கொண்டு அந்த குதிரைக்காரர்கிட்ட வராரு குரு.
என்ன குதிரைக்காரரே என்னுடைய பிரசங்கம் எப்படி இருந்தது? உங்களுக்கு பிடிச்சிருந்தா புரிஞ்சதா அப்படின்னு கேட்டாரு. அதற்கு அந்த குதிரைக்காரரும் ஐயா நான் முப்பது குதிரைக்கும் தீனி வைக்க போகும் போது அங்க ஒரு குதிரை மட்டும் இருந்தா அதுக்கு தேவையான புள்ள மட்டும்தான் போட்டுட்டு வருவன், மீதி இருக்கிற 30 குதிரைக்கான தீனியையும் அந்த ஒரு குதிரைக்கே போட மாட்டாங்க ஐயா அப்படின்னு சொல்றாரு.
இதைக் கேட்ட குரு மனம் உடைஞ்சி போய்ட்டாரு...
Moral of Short Stories in Tamil - தமிழ் சிறுகதையின் நீதி
ஆமாங்க நமக்கு நாலு விஷயம் தெரியுதுங்கறதுக்காக அதை பார்க்கிற எல்லார்கிட்டயும் கொட்டிட கூடாது. அவங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் அவங்க கிட்ட பேசணும். அப்படி பேசல அப்படின்னா உங்களை தான் முட்டாள் என்று எல்லாரும் சொல்லுவாங்க...
இந்த கதையின் நீதி தேவையானவர்களுக்கு தேவையானதை மட்டும் கொடுங்கள் பேசுங்கள்.