கபம்,வாதம்,பித்தம் என்றால் என்ன

Vizhimaa
0

பட்டம்மா பாட்டி கூறும் கபம்,வாதம்,பித்தம் பற்றிய குறிப்புகள்;


வாதம் பித்தம் கபம் என்றால் என்ன

பட்டம்மா பாட்டி: என்ன பேராண்டி இந்த பக்கம் வந்திருக்க...என்று அந்த பக்கம்மாக வந்த விழிமா என்ற தன் பேரனிடம் கேட்டாள்.

விழிமா: பாட்டிமா... நான் காலேஜ் லீவுக்கு ஊருக்கு வந்துருக்கிறன்....ஊர சுத்தி பார்த்துட்டு இருக்கன் பாட்டி...
நம்ம ஊரு ரொம்ப மாறிடிச்சில்ல பாட்டி...


அங்கங்க புதுசா...நிறைய வீடு வந்திருக்கு பச்ச பசேல் னு இருந்த இடத்துல இப்போ...நிறைய மாற்றங்கள் பாட்டி இந்த மூனு வருஷத்துல...

அதான் நம்ம ஊர ஒரு சுத்து சுத்தி வரன்...இப்போ இன்னும் என்னலாம் மாறிருக்குன்னு பாக்கிறதுக்கு...

பட்டம்மா பாட்டி; என்ன விழிமா மூனு வருஷம் கழிச்சு வந்திருந்தாலும் இப்படி மொட்ட வெயில்லயா வருவாங்க...வெயில் எப்படி அடிக்குது...இந்த வெயில் ல வரலாமாயா...
அப்பறம் பித்தம் தலைக்கேறிக்கும் பேராண்டி...


விழிமா; சரி பாட்டிமா நான் நாளைக்க
 காலைல 5 மணிக்குலாம் நம்ம ஊர் சுத்தி பாக்க கெலம்பிடுறன்...எனக்கு வாக்கிங் போனா மாதிரியும் இருக்கும் ஒரு வழியா ஊர சுத்தி பார்த்த மாதிரியும் இருக்கும்.

பட்டம்மா பாட்டி; என்ன பேராண்டி மார்கழி மாசம் மழை மாதிரி பெய்யுது இப்போ போய் காலைல 5 மணிக்குலாம் வாக்கிங் வரேன்னு சொல்றியே தங்கம்.பனியில வெளில வந்து பலி,தலைவலி, ஜுரம் னு ஏதாவது வந்துட போவுது....
பேராண்டி பாத்து பத்திரமா இருங்க...

விழிமா; சரி பாட்டிமா...நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயமா தான் இருக்கு.பேசாம... அம்மா நாளைக்கு பஜ்ஜி,போன்டா,கறி,மீனு எல்லாம் சமைக்கிறனு சொன்னாங்க அதை எல்லாம் சாப்பிட்டு 10 மணிக்கு மேல  ஊர சுத்தி பார்க்க கெலம்புறன்....ஓகேவா...

பட்டம்மா பாட்டி; என்ன பேராண்டி சாப்பிட்ட உடனே நடக்ககுன்னு சொல்ற,சாப்பிட்ட உடனே ஓவரா நடக்கவோ ஓடவோ கூடாது பா... உடம்புக்கு ஏதாவது வந்திடும் கண்ணு...

விழிமா; பட்டம்மா என்ன இது என்ன சொன்னாலும் இப்படி ஏதாவது ஒன்னு சொல்றியே நான் என்னதான் பண்ணட்டும்,இப்ப சுத்துனா பித்தம் தலைக்கேறிங்குற காலைல நடந்தா பனி பெய்யுங்குற சாப்பிட்டு நடந்தா உடம்புக்கு ஏதாவது வந்துருங்குற... என்னதான் பட்டம்மா உன் பிரச்சனை...

பட்டம்மா பாட்டி; பேராண்டி நீ காலைல எல்லாத்தையும் நல்லா சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் நல்லா உறங்கிட்டு பொறவு இங்க வந்து ஊர நல்லா சுத்தி பாரு ஒன்னும் பண்ணாது ....ஓகே வா...

விழிமா; சரி பட்டம்மா...பாய் பாய் நான் வரன்...
(கொஞ்ச தூரம் நடந்து சென்ற விழிமா மீண்டும் பாட்டியிடம் வருகிறான்)
பாட்டிமா...நீ ஏதோ பித்தம் னு சொன்னியே அப்படினா என்ன பாட்டி...

பட்டம்மா பாட்டி; என்ன விழிமா ஏன் கேக்குற இத பத்தி,

விழிமா; சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான் பட்டம்மா..

பட்டம்மா பாட்டி; ஒரு விஷயத்த முழுசா தெரிஞ்சிக்கனும் னு நினச்சா அதோட ஆணி வேர் ல இருந்து தான் ஆரம்பிக்கனும் பேராண்டி...நீ ரெடியா கேக்குறதுக்கு...அப்பறம் தூக்கம் வருதுன்னு சொல்ல கூடாது...

விழிமா; சரி பட்டம்மா சொல்லு,இன்னைக்கு எதையாவது உருப்படியா தெரிஞ்சிக்குவோம்...

பட்டம்மா பாட்டி; பேராண்டி சித்த மருத்துவம் னு ஒரு படிப்பு இருக்கே அதை பத்தி உனக்கு தெரியுமா ...

விழிமா; நல்லா தெரியும் பாட்டி கேள்வி பட்டிருக்கன்.

பட்டம்மா பாட்டி; சித்த மருத்துவத்தின் அடிப்படையே இது தான் கண்ணு,
சித்த மருத்துவத்துல நோய்களை எப்படி வகைப்படுத்துவாங்கன்னு உனக்கு தெரியுமா விழிமா...

விழிமா; தெரியலையே பாட்டி,

பட்டம்மா பாட்டி;‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அதாங்கன்னு விஷயமே,நம்ம மனித உடம்பு பஞ்ச பூதங்களான நீர்,நெருப்பு,வாயு னு இந்த மூன்று ஆதாரங்களை  முதன்மையாகவும் நிலம் மற்றும் ஆகாயத்தை துணையாகவும் கொண்டு தான் வடிவமைக்கப்பட்டிருக்கு...

விழிமா; ம்..மேல சொல்லு பாட்டி,விவரமா

பட்டம்மா பாட்டி; கண்ணு நம்ம உடம்புல ஊருற இரத்தம் தான் நீரு,நாம சுவசிக்கிற காத்து தான் வாயு,நம்மலோட உடல இயக்குறதுக்கும் நாம சாப்பிடுற சாப்பிடுற சாப்பாடு செரிக்கிறதுக்கும் உதவியா இருக்குற சூடு தான் நெருப்பு. இந்த மூன்றாலையும் தான் நம்ம உடம்புல இயங்குது.

விழிமா; நல்லா புரியுது பாட்டி,ம்

பட்டம்மா பாட்டி; இதை தான் வாதம்,பித்தம்,கபம் னு சொல்லுவாங்க.
வாதம் னா வாயு, பித்தம் னா நெருப்பு,கபம் னா நீரு.இந்த மூனுல எது நம்ம உடம்புல கொறஞ்சாலும் இல்ல அதிகரிச்சாலும் நமக்கு உடம்பு சரியில்லாம போகுது கண்ணு புரியுதா

விழிமா; ஓஓஓ...

பட்டம்மா பாட்டி; வாதத்துனால வர நோய்கள் 1482 வகைனும்,பித்தத்துனால வர நோய்கள் 1483 வகைனும்,கபத்துனால வர நோய்களின் வகை 1484 னும் சித்த மருத்துவம் சொல்லுது பேராண்டி. உனக்கு புரியிற மாதிரி சொல்றன் பாரன் பேராண்டி மலச்சிக்கல், வாயுத்தொல்லை போன்றவை வாதத்துனால வர நோய்கள்,உனக்கு சூடுபிடிச்சுக்கிறது,தலவலிக்கிறது எல்லாம் பித்தத்துனால வர பிரச்சனைகள்,குளிர்,ஜூரம்,சளி எல்லாம் கபத்துனால வர பிரட்சனைகள்.

விழிமா; இப்போ ரொம்ப நல்லா புரியுது பாட்டி ...

பட்டம்மா பாட்டி; இப்போ புரியுதா கண்ணு, பாட்டி ஏன் உன்ன வெயில்லயும் பனியிலயும் சாப்பிட்ட உடனேவும் வெளில சுத்த வேனாம் னு சொன்னேன்னு...

விழிமா; புரியுது பாட்டிமா...பட்டம்மா உன்னால இன்னைக்கு உருப்படியா இன்னைக்கு ஒரு விஷ்யத்தை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன் ரொம்ப நன்றி 

பட்டம்மா பாட்டி; சரி கண்ணு,வீட்ல அம்மா தேடுவாங்க நீ பாத்து போய்ட்டு வா...

விழிமா; சரி பாட்டிமா,நான் நாளைக்கு வரன்
நோக்கம்;

கபம்,வாதம், பித்தம் என்றால் என்ன?
கபம் என்பது குளிர்ச்சி,வாதம் என்பது வாயு,பித்தம் என்பது சூடு இவற்றின் சமனிலை தவறுதலால் மட்டுமே நம் உடலில் நோய் நிலை ஏற்படுகிறது.இதையே சித்த மருத்துவத்தில் வாத நோய்கள்,பித்த நோய்கள் மற்றும் கப நோய்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top