மாதவிடாய் கால வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம் - Periods time Pain Relief tips in Tamil

Vizhimaa
0

மாதவிடாய் கால வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம் - Periods time Pain Relief tips in Tamil:

Pain Relief tips for periods time in Tamil
Periods time Pain Relief tips in Tamil


பட்டம்மா பாட்டி:
அம்மா...துளிர் இங்க வாங்க...என்னம்மா துளிர் ரெண்டு நாளா பாட்டிய பாக்கவே வரல...
ஏன்மா? உனக்கு என்னாச்சு?

துளிர்: பாட்டி ரெண்டு நாளா ஒரே வயித்து வலி பாட்டி,வீட்டுக்கு தூரமாகிட்டன்.
ரொம்ப கஷ்டமா‌ இருக்கு பாட்டி.முதுகு வலி,கால்கள் லாம் கூட வலிக்குது பாட்டி.

பட்டம்மா பாட்டி: சரி துளிர்,வீட்ல படுத்தே தான் இருந்தியா? மா...

துளிர்: ஆமா பாட்டி 

பட்டம்மா பாட்டி: உங்க அம்மா உனக்கு எதுவும் செஞ்சி தரலயா மா...

துளிர்: சீரக‌ கசாயம் வச்சு குடுத்தாங்க பாட்டி.

பட்டம்மா பாட்டி:‌‌ அத குடிச்சதுக்கு அப்புறமாவது வயித்த வலி கொறஞ்சுதா மா...துளிர்?

துளிர்: இல்ல.பாட்டி கொறையவே இல்லை...ரெண்டு நாளா ரொம்ப கஷ்டப்பட்டன்.

பட்டம்மா பாட்டி:சரி விடு துளிர்,இது உனக்கு மட்டுமா...பொண்ணா பொறந்தா எல்லாரும் இந்த வலிய அனுபவிச்சு தான் ஆகனும் துளிரு...

துளிர்: பாட்டி! ஏன் பாட்டி இந்த மாதிரி டைம்ல வயிறு வலிக்குது...சொல்லு பாட்டி...

பட்டம்மா பாட்டி: எல்லாருக்குமே வயிறு வலிக்கும் னு சொல்ல முடியாது துளிர்...ஆனா 100 ல 70 பெண்களுக்கு மாதவிடாய் உபாதைகள் இருக்கலாம்.

உன் உடல் சூடு அதிகரிக்கிறது தான் வலிக்கான முதல் மற்றும் முக்கிய காரணம் துளிர்.சிலருக்கு கர்ப்பப்பையில ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் வயிறு வலிக்கும் மா...

துளிர்: எனக்கு புரியல பாட்டி,கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க பாட்டி.

பட்டம்மா பாட்டி:துளிர் மாதவிடாய் வரதுக்கு ரெண்டு மூன்று நாட்கள் முன்னாடி எப்பவும் ஒரே இடத்தில் ரொம்ப நேரம்  நிக்கவோ ரொம்ப தூரம்  நடக்கவோ,அதிகப்படியான வேலைகள் செய்யவோ கூடாது துளிர்.அந்த மாதிரிலாம் செய்யக்கூடாது துளிர்.அது போன்ற அதிகப்படியான வேலைகள் கூட வயிற்று வலியை ஏற்படுத்தலாம்.

துளிர்: சரி பாட்டி ,ஏன் உடம்பு எப்படி சூடாகுது.

பட்டம்மா பாட்டி: சாதாரணமாகவே மனித உடல் குறிப்பிட்ட அளவு சூடாக தான் இருக்கும்.அதாவது 37 டிகிரி செல்சியஸ் துளிர்.இப்போ மாதவிடாய் சமயத்தில நீ துணி அல்லது வேறு ஏதாவது நாப்கின்களை பயன்படுத்துவ....அந்த சமயத்துல நீ ஒரே இடத்துலே நின்னாலோ உட்கார்ந்துட்டே இருந்தாலோ உன்னோட அடிவயித்து பகுதியில ஒரு வெப்பம் உருவாகும்.நேரம் ஆக ஆக அந்த வெப்பம் அதிகமாகும்.அந்த வெப்பம் உன் கர்ப்பப்பைல தாக்கத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும் துளிர்.

துளிர் : ஓ...அதானா பாட்டி,ஆனா இத சரி செய்யவே முடியாதா பாட்டி...

பட்டம்மா பாட்டி: ஏன் முடியாது துளிர்.தாரளமா...வலியே இல்லாம பண்ண முடியும் துளிர்.

துளிர்: அப்புறம் ஏன் பாட்டி எங்கம்மா கொடுத்த சீரக கசாயத்தை குடிச்சும் எனக்கு வலி குறையல...

பட்டம்மா பாட்டி: உங்கம்மா...தண்ணியில சீரகத்தை போட்டு நல்லா காய்ச்சு சுண்ட வச்சு கொடுத்தாளா? துளிர்.

துளிர் : அதுக்கு பேரு தான் பாட்டி சீரக கசாயம்.

பட்டம்மா பாட்டி: சரி சரி துளிர்,அதுக்கு பேரு தான் சீரக கசாயம். ஆனா உங்கம்மா உனக்கு ஏதோ செரிமானா கோளாறு னு நெனச்சிட்டு சீரகத்தை போட்டு கசாயம் வச்சி குடுத்துட்டா போல...

துளிர்: பாட்டி எங்கம்மா வ நீ கலாய்க்கிறியா? பாட்டி...

பட்டம்மா பாட்டி: அது இல்ல துளிர்,பொதுவா செரிமான கோளாறு மற்றும் வயித்துல ஏதாவது மந்தத் தன்மை இருந்தா தான் சீராக கசாயம் வச்சு குடிப்பாங்க மா...அதுவும் இல்லாம...சீரகம் உடல் சூட்டை அதிகரிக்கும் மா...

துளிர்: அடிப்பாவி பாட்டி,எங்கம்மாவுக்கு நீ எதுவுமே சொல்லித் தரவே இல்ல.

பட்டம்மா பாட்டி: உங்கம்மா எங்கிட்ட கேக்கவே இல்ல.உங்கம்மா என்னைக்காவது உன்ன மாதிரி வயித்துல வலின்னு படுத்து நீ பாத்திரிக்கியா?

துளிர்: இல்லவே இல்லை.ஒரு நாள் கூட அம்மா வயித்து வலின்னு படுத்ததே இல்ல பாட்டி.எப்டி பாட்டி?

பட்டம்மா பாட்டி:

உங்கம்மாவ நான் அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டன்.அதான்.

துளிர்: உண்மைய சொல்லு பாட்டி அம்மாக்கு நீ என்ன செஞ்சி குடுப்ப...

பட்டம்மா பாட்டி: நான் உங்க அம்மாவுக்கு மாதுளம் பூ & இலைலாம் போட்டு கசாயம் வச்சு குடுப்பன் துளிர்.

துளிர்: இந்த மாதிரி ஒரு கசாயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லையே பாட்டி.அத எப்படி செய்யனும் பாட்டி....நீ சொன்னி னா... அப்படியே போய் அம்மா கிட்ட சொல்லி செஞ்சி தர சொல்லுவன் பாட்டி

பட்டம்மா பாட்டி: நானே செஞ்சி தரன் துளிர் உனக்கு... 

துளிர்:அப்பவும் நீ எங்கம்மா லுக்கு சொல்லித் தர மாட்ட பாட்டி...அப்படி தான?...அப்படி என்ன கோவம் பாட்டி அம்மா மேல உனக்கு...

பட்டம்மா பாட்டி: அது பழைய கதை துளிர்.அது எதுக்கு இப்போ ?.
சரி நான் எப்படி செய்யனும் னு சொல்றேன் அத உங்க அம்மா கிட்ட சொல்லி செஞ்சி தர சொல்லு ok வா... துளிர்.

துளிர் : ok பாட்டி .

 
Periods time Pain Relief tips in Tamil
Periods time Pain Relief tips in Tamil

பட்டம்மா பாட்டி: "ஒரு பாத்திரத்தில தேவையான அளவு தண்ணீ ஊத்தி அதுல பறிச்சு வச்சு மாதுளம் பழத்தோட பூ இதழ்களையும், நுனி இலைகளையும் சேர்த்து நல்லா கொதிக்க வை.தண்ணி பாதியா கொறஞ்சதுக்கு அப்புறமா... சிறிதளவு நாட்டுச் சர்க்கரை இல்லன்னா பனைவெல்லம் சேர்த்து குடி துளிர்.வயித்து வலி பறந்து போய்டும்".

இதை ஒரு மாசத்துல அஞ்சுல இருந்து ஆறு தடவ குடி துளிர்.அப்புறம் அடுத்த மூன்று மாசத்துக்கு மாதவிடாய் நேரத்துல வயிறு வலியே இருக்காது.பாட்டி promise பண்றன் உனக்கு நிச்சயமா இதை follow பண்ணா வயிறு வலியே வராது உனக்கு.

துளிர்: ஆஹா .... பாட்டி ஒரு வழியா உன் ரகசியத்தை போட்டு உடச்சிட்ட...

பட்டம்மா பாட்டி: ம்... என் பேத்திக்காக எதையும் செய்வா இந்த பாட்டி.

துளிர்: love you பாட்டி.

பட்டம்மா பாட்டி: சரி சரி.... துளிர் ஓவரா ஐஸ் வைக்காத... இந்த கசாயத்தை உன் ஃப்ரண்ட்ஸ் கூட சொல்லு எல்லாருக்கும் பயன்படுத்தும்.

துளிர்: என் முதல் வேலையே அதான பாட்டி.சமூக சேவை செய்யுறது னா... எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பட்டம்மா பாட்டி: கிழிச்ச....அதத்தான் டெய்லி பாக்குறனே...நடக்க முடியல,தண்ணி கொடத்த தூக்கிட்டு வாடின்னு சொன்னா...ஐயோ என்னால முடியாதுன்னு ஓட்றவ தான் நீயி...

துளிர்: பாட்டி ரகசியத்தை வெளிய சொல்ல கூடாது பாட்டி.

பட்டம்மா பாட்டி: சரி! சரி!. துளிர் ஏன் இந்த மாதுளம் பூ வலியை கொறைக்குதுன்னு தெரியுமா உனக்கு?

துளிர்: அந்த அளவுக்குலாம் அறிவியல் தெரியாது பாட்டி எனக்கு.நீயே சொல்லன்.

பட்டம்மா பாட்டி: மாதுளம் பழத்தோட ஆரஞ்சு நிற இதழ்கள் மற்றும் இலைகள் எல்லாமே துவர்ப்பு சுவை அதிகம் உடையவை துளிர்.துவர்ப்பு சுவைக்கு உடம்புல இருக்குற நச்சுத்தன்மை மற்றும் வயிற்றில் உள்ள சூட்டை கொறைக்கும் தன்மையும் இருக்கு துளிர்.பெரும்பாலும் உடல் சூட்டை குறைக்கிற வைத்தியங்கள செஞ்சாலே பாதி வலி கொறஞ்சிடும் துளிர்.இதனால தான் பெண் பிள்ளைகள் இருக்குற வீட்ல மாதுளம் பழம் மரம் வளர்க்கனும் னு சொல்றாங்க... மாதுளம் பூ வை நீ அப்படியே மென்று சாப்டாலும் பவன் கிடைக்கும் துளிர்.நீ வேனும் னா இப்போ போர வழியில நம்ம தோட்டத்துல இருக்குற மாதுளம் பழ மரத்தில இருந்து பூ பறிச்சி சாப்பிட்டு கிட்டே வீட்டுக்கு போ...மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டு...அடுத்த மாசம் மாதவிடாய் நேரத்துல உனக்கு வயிறு வலி நிச்சயமா வராது....சும்மா ட்ரை பண்ணு பாரு துளிர்.

துளிர்: ok பாட்டி மா...உன் பேச்ச கேட்டு தான் ஆகனும்...இல்லன்னா ஒவ்வொரு மாசமும் இந்த வலியில சாகனும்...

பட்டம்மா பாட்டி...நான் கெளம்புறன்...நீ சொன்ன மாதிரியே தோட்டத்து வழியா தான் போக போறன்.

பட்டம்மா பாட்டி: சரி துளிர்.ஆமா! என் பேரன் விழிமா எங்க, காலேஜ் போய்ட்டானா? இங்க வரதே இல்ல...
என் கண்ணுலாம் அவனையே தேடுது...

துளிர்: என்ன விட உனக்கு விழிமா அண்ணன தான ரொம்ப பிடிக்கும் பாட்டி.

பட்டம்மா பாட்டி: அப்டி இல்ல துளிர் பாத்து ரொம்ப நாள் ஆச்சேன்னு கேட்டன் மா...

துளிர்: சமாளிக்காத பட்டம்மா! ஆமா!ஆமா! அண்ணா காலேஜ் கு தான் போயிருக்கான்.லீவுக்கு வந்தா இங்க கண்டிப்பா வருவான்.

பட்டம்மா பாட்டி: சரி துளிர்,நீ பாத்து போ...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top