ஒரு நிமிட நகைச்சுவை கதை-திருந்திய திருடன்

Vizhimaa
0

One Minute Comedy Children Story in Tamil

தற்போது குழந்தைகள் எல்லாம் நீதி நெறி கதைகளை விடவும் நகைச்சுவை கதைகளையே அதிகம் விரும்புகிறார்கள்.தொலைக்காட்சி முதல் செல்போன் வரை நகைச்சுவை காட்சிகளையே அதிகம் பார்க்கிறார்கள்.அவர்களுக்கான சிறிய நகைச்சுவை கலந்த நீதி நெறிக் கதை இதுவே.இது குழந்தைகள் விரும்பும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.One Minute Comedy Children Story in Tamil
கதையின் தலைப்பு

குழந்தைகளுக்கான ஒரு நிமிட நகைச்சுவை கதை-திருந்திய திருடன்

கதைக்களம்

முல்லாவின் வீட்டில் திருட்டு நடைபெறுகிறது அதை அவர் எப்படி தடுக்கிறார் என்பதே கதை


கதையின் மாந்தர்கள்

முல்லா மற்றும் திருடன்


கதை

ஒரு ஊரில் முல்லா தன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.அவரை அந்த ஊரில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.ஏனென்றால் முல்லா அனைவரிடமும் அன்பாக பழகுவார்.அனைவரையும் தன் நண்பர்களை போலவும் உறவினர்களை போலவும் உபசரிப்பார்.முக்கியமாக நகைச்சுவை உணர்வு கூடுதலாக உடையவர்.தன்னுடைய நகைச்சுவை உணர்வால் தன்னைச் சுற்றி உள்ளவர்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.

அவருடைய நகைச்சுவை குணம் ஊரில் அனைவருக்கும் அவரை பிடிக்க வைத்தது.ஊரில் உள்ள குழந்தைகளுக்கு முல்லா தான் கதாநாயகன் போல் தெரிந்தார்.எப்பொழுதும் மற்றவர்களுடைய மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சியை காண்பவராக முல்லா இருந்தார்.மனதளவில் ஒரு குழந்தை போலவே இருப்பார்.ஆனால் அந்த ஊரிலேயே முல்லாவைப் போல் ஒரு புத்திசாலி இல்லை என்ற பேச்சும் உண்டு.

அப்பேர்ப்பட்ட முல்லாவின் வீட்டில் ஒரு நாள் திருட்டு நடந்தது.முல்லா தன்னுடைய தினசரி வேலைகளை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்து தூங்குவதற்காக தன்னுடைய கண்களை மூடினார்.ஆனால் முல்லா இன்னும் முழுமையாக தூங்கவில்லை.ஏதோ யோசனையில் மூழ்கி இருப்பதாக தெரிந்தது.

அந்த நேரத்தில் முல்லாவிற்கு அவருடைய வீட்டு கதவினை யாரோ திறப்பது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.உண்மையிலேயே அவருடைய உணர்வு சரியானது தான் அங்கு வந்தது உண்மையான திருடன்.ஆனால் முல்லா எல்லாவற்றையும் உணர்ந்தும் ஒன்றும் தெரியாத பிள்ளை போல் படுத்திருந்தார் அவருடைய படுக்கையில்,அப்போது முல்லா நன்றாக உறங்கி விட்டதாக நினைத்து திருடன் அந்த வீட்டில் இருந்த உயர்ந்த பொருட்களை எல்லாம் எடுத்து தான் எடுத்து வந்த சாக்கு மூட்டைக்குள் எடுத்து போட்டுக்கொண்டான்

அப்போது அதை கவனித்துக் கொண்டிருந்த முல்லா அமைதியாக கண்களை மூடி படுத்திருந்தார்.திருடனோ எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டதாக நினைத்து அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

திருடன் அங்கிருந்து செல்வதை கவனித்த முல்லா அவனை பின் தொடர்ந்து சென்றார்.திருடனோ எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு அவனுடைய வீட்டுக்கு சென்றான்.முல்லாவும் திருடனின் வீடு வரை அவனை பின்தொடர்ந்து சென்றார்.அவனுடைய வீட்டிற்குள் சென்ற திருடன் திருடிய பொருட்களை எல்லாம் ஒரு அறையில் வைத்து விட்டு வெளியே வந்தான்.வெளியே வந்த திருடனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.திருடனுடைய வீட்டில் திருடனுடைய மெத்தையில் முல்லா படுத்திருந்தார்.இதை பார்த்த திருடனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

பயந்து பயந்து முல்லாவிடம் சென்ற திருடன் என்ன முல்லா என் வீட்டில் படுத்திருக்கிறீர்கள் என்று கேட்டான்.அதற்கு முல்லாவோ நீதான் என்னுடைய வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் இங்கு கொண்டு வந்து விட்டாயே,இனிமேல் அங்கு எனக்கு என்ன வேலை அதனால் தான் நானும் இங்கேயே வந்து விட்டேன் என்றான்.

தன் தவறை உணர்ந்த திருடன்.தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு இனிமேல் திருட மாட்டேன் என்று முல்லாவிடம் கூறி திருடிய பொருட்களை திருப்பிக் கொடுத்தார்.


One Minute Comedy Children Story in Tamil


கதையின் நீதி

ஒருவரின் தவறை உணர்த்துவதற்கு கடினமான வார்த்தைகளால் தான் முடியும் கடுமையான சொற்களை பயன்படுத்தினால் தான் முடியும் என்பது உண்மையல்ல.நகைச்சுவையால் கூட சிலரை திருத்த முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top