ஒரு நிமிட தன்னம்பிக்கை கதை-பாதை தவறிய பணக்காரன்

Vizhimaa
0

    One Minute Motivational Stories in Tamil

    நம்பிக்கை எனும் ஒளி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எப்பொழுதும் நிறைந்து தான் காணப்படுகிறது.ஆனால் அதை ஒவ்வொருவரும் உணர்வதற்கு தான் கால அளவு மாறுபடுகிறது.சிலர் மிக எளிதில் உணர்கிறார்கள்,சிலரோ வருடக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.இன்னும் சிலரோ நம்பிக்கை எங்கே இருக்கிறது என்று தேடி தேடியே உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் நம்பிக்கையை மறந்துவிடுகிறார்கள்.


    Motivational Stories in Tamil


    கதையின் தலைப்பு

    ஒரு நிமிட தன்னம்பிக்கை கதை-பாதை தவறிய பணக்காரன்


    கதைக்களம்

    வழி தொரியாத ஊருக்கு குதிரையில் செல்லும் பணக்காரன்.ஊருக்கு சென்றானா? என்பதே கதை

    கதையின் மாந்தர்கள்

    எல்லா செல்வங்களும் உள்ள பணக்காரன் மற்றும் வழிப்போக்கன்

    கதை

    ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரன் வாழ்ந்து வந்தானாம்.அவனிடம் இல்லாத சொத்துக்களே இல்லையாம் அவ்வளவு பெரிய பணக்காரனாம்.அவனுக்கு குதிரைகள் என்றால் மிகவும் பிரியமாம்.எங்கு சென்றாலும் குதிரையில் தான் செல்லுலார் அந்த பணக்காரன்.

    அவனிடம் அனைத்து ரகங்களிலும் குதிரைகள் வரிசையில் நின்றன.உலகிலேயே மிக வேகமாக ஓடும் குதிரையும் அவனிடம் இருந்தது.ஒரு நாள் அவனிடம் இருக்கும் அந்த வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு அவனுடைய சொந்தக்காரர் ஒருவரை  பார்ப்பதற்காக அவருடைய ஊருக்கு செல்ல தயாரானான்.ஆனால் பாவம் அவனுக்கு அந்த ஊருக்கு வழி தெரியாது.ஆனால் நம்மால் அந்த ஊரை கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் குதிரை ஏறினான் அந்த பணக்காரன்.

    இரண்டு நாட்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டான் எவ்வளவு தூரம் சென்றிருப்பான் என்பது அவனுக்கு தெரியாது.சிறிது இளைப்பாராலாம் என்று ஒரு மரத்தடியில் குதிரையை நிறுத்தி விட்டு உட்கார்ந்தான்.அப்போது அங்கு வந்த வழிப்போக்கர் ஒருவர் ஐயா நீங்கள் எங்கே சென்றிருக்கீறிர்கள் என்று கேட்டார்.அதற்கு அந்த பணக்காரன் அவனுடைய உறவினருடைய ஊரைச் சொன்னான்‌.சரிங்கள் ஐயா என்ற வழிப்போக்கர் சிறிது தூரம் நடந்து சென்றார்.உடனே தன் பயணத்தை தொடங்க நினைத்த பணக்காரன் உடனே குதிரை ஏறினான்.வழிப்போக்கன் சென்ற வழியே குதிரையை ஓட்டினான்.

    அவ்வழியே அந்த குதிரை வருவதை பார்த்த வழிப்போக்கன் அந்த குதிரையை நிறுத்த முயன்றான்.ஐயா இது நீங்கள் சொன்ன ஊருக்கு போகும் வழியல்ல என்றார்.அந்த ஊருக்கு இதன் எதிர் திசையில் அதாவது நீங்கள் வந்த வழியே செல்ல வேண்டும் என்றான்.அந்த பணக்காரனோ யார் நீ எனக்கே வழி சொல்கிறாய், நான் எவ்வளவு பெரிய பணக்காரன் தெரியுமா?என் அந்தஸ்து தெரியுமா எனக்கே நீ வழி சொல்கிறாரா?என்று கோபப்பட்டார்.அதற்கு அந்த வழிப்போக்கனோ... நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் நீங்கள் போகும் பாதை தவறானது என்பதை தானே சொல்கிறேன் என்றார்.அதற்கு அந்த பணக்காரன் நான் வைத்திருக்கும் குதிரை உலகில் உள்ள எல்லா குதிரைகளை விடவும் வேகமாக செல்லும் இதன் விலை எவ்வளவு என்று தெரியுமா என்று கேட்டு எனக்கே நீ வழி சொல்கிறாயா என்று கேட்டான்.

    அந்த வழி போக்கர் இவன் என்ன முட்டாளா போகும் வழி தவறென்று கூறுகிறோம்.இவன் எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறான் என்று அங்கிருந்து நகர்ந்து விட்டான்.அந்த பண்க்காரனோ தவறான வழியில் குதிரையை செலுத்தி செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் எங்கெங்கோ அலைந்து திரிந்தான்.


    Motivational Stories in Tamil


    கதையின் நீதி

    என்னதான் நம்மிடம் எல்லாம் இருந்தாலும் சில நேரங்களில் மற்றவர்களின் கருத்துகளுக்கும் செவி சாய்ப்பது அவசியமாகிறது.யார் என்ன சொன்னாலும் அவர்களின் பேச்சை கேட்க மாட்டேன் என்றால் நம்முடைய இலக்கை அடைவது மிகவும் சிரமமாகிவிடும்.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    கருத்துரையிடுக (0)
    To Top