பொன்னதரம் பயன்கள்-ponnatharam benefits in tamil

Vizhimaa
0

ponnatharam benefits in tamil;
Ponnatharam benefits in tamilபட்டம்மா பாட்டி; துளிர் இது ஒன்னும் chemical இல்லம்மா.முடிகளை நீக்குவதுக்குன்னு மஞ்சளுக்கு அப்புறம் சித்த மருத்துவம் சொல்லும் ஒரு பொருள் தான் இந்த பொன்னதரம்.இந்த பொன்னதரம் மஞ்சள் நிறத்துல தான் இருக்கும். சாதாரணமா பாத்தா பொன்னதரம் அடிப்படையில ஒரு கல்லு தான்.அதை தேச்சோ அல்லது பொடியாக்கியோ தான் நாம பயன்படுத்தனும்.


பொன்னதரத்த எல்லாரும் பயன்படுத்தலாம்.அது சுத்தமான இயற்கையா கெடைக்க கூடிய மூலிகை போன்றது.இதை பயன்படுத்துனா உடலில் வளருர அதிகபட்ச முடிகளை எந்த வித பின்விளைவுகளோ பக்கவிளைவுகளோ இல்லாம நீக்கலாம்.இது மட்டும் தான் இதோட பயன்பாடு துளிர்.

துளிர்விழி; சரி பாட்டி இத எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் னு சொல்லு பாட்டி

பொன்னதரத்தை பயன்படுத்தும் முறைகள்;


பட்டம்மா பாட்டி; முதல்ல இந்த பொன்னதர கல்ல நாட்டு மருந்து கடைகள்ல இருந்து வாங்கலாம் துளிர்.அதை வாங்கிட்டு வந்து அப்படியே இடிச்சு பொடியாக்கி குளிக்கும் போது முடியுள்ள எடங்கள்ல தடவிக்கலாம் இது ஒரு முறை.

இல்லையா இன்னும் பலன் சீக்கிரமா கெடைக்க பொன்னதர கல்ல அப்படியே கொஞ்சோண்டு பால்ல நல்லா இழைச்சு அதை தடவுனாலும் முடிகள் எல்லாம் உதிர்ந்து போகும்.

இன்னும் உனக்கு நேரம் இருந்தா? உன் உடம்பு மேல உனக்கு அக்கறை இருந்தா?பொன்னதரத்த பால்ல உரசும் போது கூடவே சிறிதளவு முகத்துக்கு தடவுர மஞ்சள்தூளையும் சேர்த்து நல்லா குழப்பி தடவிட்டு வந்தா ஒரு மாசத்துல இருந்து மூனு மாசத்துக்குள்ள இயற்கையாகவே சுத்தமா நிரந்தரமா எல்லா முடியும் உதிர்ந்திடும் துளிர். 


துளிர்விழி; பட்டம்மா சூப்பர் மா நீ....
ரொம்ப தேங்க்ஸ் பாட்டி...நான் போய் அம்மா கிட்ட சொல்றேன்.நாளைக்கே இந்த பொன்னதரத்தை வாங்கிட்டு வர சொல்லி.

மேலும் படிக்க,


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top