ஒரு நிமிட தன்னம்பிக்கை கதைகள்-Email ID தெரியாத வெங்காய வியாபாரி

Vizhimaa
0

  One Minute Motivational Stories in Tamil

  ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருப்பது அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையைத் தான்.அந்த வகையில் இந்த கதை தன்னம்பிக்கை உணர்வை தூண்டும் வகையில் அமைகிறது.

  கதையின் தலைப்பு

  கதையின் தலைப்பு-Email ID தெரியாத வெங்காய வியாபாரி

  கதைக்களம்

  வேலை தேடி அலைந்த நபர் வெங்காய வியாபாரி ஆகும் கதை.


  One minute motivational stories in Tamil  கதையின் மாந்தர்கள்

  வேலை தேடும் நபர்,IT ஊழியர்,வங்கி ஊழியர்

  கதை

  பள்ளி வாசலை மிதிக்காமல் பருவத்தில் சுற்றி விட்டு வேலைக்காக பலர் வீட்டு வாசலை ஏறித் தவிக்கும் இளைஞர்களில் நம் கதாநாயகனும் ஒருவன்.ஆம் இவன் வேலையில்லா பட்டறிவாளி.கல்வி தகுதி இல்லாமல் எந்த கடையிலும் வேலை இல்லை இவனுக்கு,ஆகவே கல்வி எனும் தகுதி இல்லாத வேலையாய் தேடி அலைந்தான்.

  எதுவும் கிடைக்கவில்லை.இறுதியில் ஒரு IT நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலை ஒன்று அவனுக்கு கிடைத்தது.மகிழ்ச்சியாக சிறிது நாட்கள் வேலை  செய்து கொண்டிருந்தான் அந்த இளைஞன்.ஆனால் ஒரு நாள் அவன் வாழ்வில் EMAIL ID என்ற புயல் அடித்தது.ஆம் அந்த அலுவலக ஊழியர் வந்து உங்களது Email ID சொல்லுங்கள் என்றார் இந்த இளைஞனிடம் அதற்கு அந்த இளைஞனோ Email ID யா அப்படி என்றால் என்ன என்று கேட்டான்.

  ஒரு IT நிறுவனத்தில் வேலை செய்யும் நபருக்கு EMAIL ID என்றால் என்னவென்று கூட தெரியாதா என்று கடும் கோபப்பட்டார்.உடனே இந்த இளைஞனை வேலையை விட்டு துரத்தினார்.

  பிழைப்பிற்கு வழி தேடுகையில் பஜார் போன EMAIL ID-யால் நம் வேலை பரிபோனதே என்று எண்ணி மனம் குமுறினான்.ரோட்டோரக் கடைகளை வேடிக்கை பார்த்த படியே நடந்து சென்றான் அப்பொழுது திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது.வெங்காயத்தை மொத்தமாக வாங்கி சில்லரை விற்பனை செய்யலாமே என்று,மனம் போன போக்கில் சென்று கையில் இருந்த காசில் முடிந்த அளவு வெங்காயத்தை வாங்கி சில்லரை யாக விற்க தொடங்கினான்.முதலில் நல்ல லாபம் கிடைத்தது.பின்பு அதையே தொழிலாக தினமும் செய்ய ஆரம்பித்தான்.

  சில மாதங்களிலேயே வியாபாரம் சான்றாக சூடுபிடித்தது.வேலைமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த ஒரு படிக்காத இளைஞன் சிலருக்கு வேலையும் கொடுக்க தொடங்கினான்.நல்ல வளர்ச்சி கண்டான் இந்த வெங்காய தொழிலில்.

  சில வருடங்களில் ஒரு நல்ல பரவலாக பேசப்படும் அளவிற்கு பெரிய வெங்காய வியாபாரியாக அவதாரம் எடுத்தார் அந்த இளைஞன்.இப்போது அவனுக்கென்று ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டிய நிலை வந்தது.இவனை தேடி ஒரு வங்கி மேலாளர் வந்தார்.எங்கள் வங்கியில் உங்களுக்கு ஒரு சிறப்பு கணக்கு தொடர்ந்து தருகிறோம் என்றார்.

  வெங்காய வியாபாரிக்கு ஒரே மகிழ்ச்சி.இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம் என்று.அந்த வங்கி மேலாளர் இளைஞனிடம் உங்களுடைய EMAIL ID யை சொல்லுங்கள் என்றார்.அதற்கு அந்த வெங்காய வியாபாரி EMAIL ID னா என்னன்னு எனக்கு தெரியாது சார் என்றார்.

  அந்த வங்கி மேலாளரோ ஆச்சரியம் அடைந்து போனார் E-MAIL ID னா என்னன்னு தெரியாமலே இந்த அளவுக்கு வளந்துருக்கிங்களே இன்னும் அதெல்லாம் தெரிஞ்சிருந்தா எங்க இருந்திருப்பிங்க நீங்க என்று புகழ்ந்து தள்ளினார்.

  அதற்கு அந்த வெங்காய வியாபாரியோ EMAIL ID னா என்னன்னு எனக்கு தெரிஞ்சிருந்தா இன்னேரம் நா ஒரு கம்பெனியில தரைய துடைக்கிற வேலையை பார்த்துட்டு இருந்திருப்பேன் என்றார்.


  One minute motivational stories in Tamil


  கதையின் நீதி

  வாழ்வில் சில விஷயங்கள் நடக்காமல் போவது,அதை விட வேறு ஒரு நல்ல விஷயங்கள் நடப்பதற்காகவே...வாழ்க்கையில் சில கெட்ட நிகழ்வுகளின் பின்னால் பல நல்ல நிகழ்வுகளும் நடைபெறும்.எல்லாம் நன்மைக்கே என்ற மனநிலையும் கடின உழைப்பும் நல்ல புத்திசாலித்தனமும் வாழ்க்கையில் உங்களை உயர்த்தும்.


  கருத்துரையிடுக

  0 கருத்துகள்
  கருத்துரையிடுக (0)
  To Top